Facebook Pixel ‘ஒளியை - ஒலியாகவும், ஞானமாகவும் காண்கிறேன்’ | Dinamani Puducherry - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

‘ஒளியை - ஒலியாகவும், ஞானமாகவும் காண்கிறேன்’

Dinamani Puducherry

|

January 18, 2026

இந்தோனேசியாவில் ஜகார்தாநகரத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் வர்த்தகம் மற்றும் அரசியல் பிரிவின் முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி வருகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெனோ சஃபைன்.

- -எஸ். சந்திர மௌலி

சென்னையில் பிறந்து வளர்ந்தவர். இந்தியக் குடியுரிமைத் தேர்வு எழுதி, வெற்றி பெற்று, இந்திய வெளியுறவுத்துறையில் பணி நியமனம் ஆன 100 % பார்வைத் திறன் இல்லாத முதல் பெண்மணி இவரே. அண்மையில் சென்னை வந்திருந்த பெனோ சஃபைன் அழகிரியைச் சந்தித்த போது வெகு உற்சாகமாகப் பேசினார்:"என் அப்பா லூக் அந்தோணி சார்லஸ் இந்திய ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அம்மா மேரி பத்மஜா குடும்பத் தலைவி. அண்ணன் கனடாவில் இருக்கிறார். பிறக்கும் போதே எனக்குப் பார்வைக் குறைபாடு இருந்தது. ஆனாலும், என்னுடைய அப்பா, அம்மா, அத்தை, மாமா என்று எல்லோருமே என்னுடைய சிறு வயதில் இருந்தே எனக்கு ஊக்கமும், உற்சாகமும் ஊட்டி வளர்த்தார்கள்.

குறிப்பாக நான் சிறு சிறு தவறுகள் செய்தாலும் கூட என்னுடைய அப்பா என்னை ஒரு போதும் கோபித்துக் கொண்டதோ, என் மனம் நோகும்படி ஒரு வார்த்தைச் சொன்னதோ கிடையாது. ஒரு காரியத்தை நான் செய்து முடிக்கத் திணறினால், என்னுடைய அப்பா, அதை எப்படி வெற்றிகரமாகச் செய்து முடிப்பது என்று சொல்லிக் கொடுப்பார். இவை எல்லாம், பிறவியிலேயே கண் பார்வை இல்லாது போனாலும், அதை ஏற்றுக் கொள்கிற மனப்பக்குவத்தை எனக்கு ஏற்படுத்தின.

இதற்காக நாம் சோர்ந்து போய் உட்கார்ந்து விட்டால், அதன் மூலமாக நமக்கு எந்தப் பயனும் இல்லை. இதை அப்படியே ஏற்றுக் கொண்டு, நமக்கென்று ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்; அந்த லட்சியத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும்; அந்த இலக்கினை அடைய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன். எனக்குள்ளாகவே ஒரு உறுதி எடுத்துக் கொண்டு, எனது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள ஒரு வலுவான அடித்தளம் அமைத்துக் கொண்டேன்.

பார்வைத் திறன், செவித் திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கான சென்னை லிட்டில் ஃபிளவர் பள்ளியில் நான் படித்தேன். பள்ளிக் கூடத்தில், யாராவது திறந்த தண்ணீர்க் குழாயை மூடாவிட்டால், நான் 'குழாயை மூடுங்கள்! தண்ணீர் வீணாகிறது!' என்று சொல்லுவேன். உடனே என் சக மாணவியர், 'ஆமாம்! இவள் பெரிய ஐ.ஏ.எஸ். தண்ணியை வீணாக்கக்கூடாதுன்னு உத்தரவு போடுறா!' என்று கேலி செய்வார்கள். அப்போதே எனக்குள் குடியுரிமைத் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். பணியில் சேரவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுவிட்டது.

MÁS HISTORIAS DE Dinamani Puducherry

Dinamani Puducherry

ஆட்சியமைக்க தவெகவை அழைக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆட்சி அமைப்பதற்கு அழைக்குமாறு தமிழக ஆளுநர் ஆர். வி. ஆர். லேகர் அவர்களுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Puducherry

தங்கம் பவுன் ரூ.1,13,200

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.

time to read

1 min

May 09, 2026

Dinamani Puducherry

மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை: மக்கள் நல்வாழ்வுத் துறை ஏற்பாடு

பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 8) வெளியாகியுள்ள நிலையில், அதனால் மாணவர்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை மக்கள் நல்வாழ்வுத் துறை மேற்கொண்டுள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Puducherry

எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை

ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள எந்தவொரு கட்சிக்கும் ஆதரவு இல்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Puducherry

பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி, விஜய் வாழ்த்து

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி, தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Puducherry

தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சி அமைப்பதற்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் வெள்ளிக்கிழமை ஆதரவு தெரிவித்தன.

time to read

1 mins

May 09, 2026

Dinamani Puducherry

22 மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ‘மஞ்சள்’ எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்பட 22 மாவட்டங்களில் சனி, ஞாயிறு (மே 9, 10) ஆகிய இரு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் 'மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

May 09, 2026

Dinamani Puducherry

திருப்புவனம் அருகே இளைஞர் வெட்டிக் கொலை

உறவினர்கள் சாலை மறியல்

time to read

1 min

May 09, 2026

Dinamani Puducherry

ஆளுநர் மாளிகை முன் அடுத்தடுத்து போராட்டம்: தவெகவினர் கைது

சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகை முன் வெள்ளிக் கிழமை அடுத்தடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக வெற்றிக் கழகத்தி னர் கைது செய்யப்பட்ட னர்.

time to read

1 min

May 09, 2026

Dinamani Puducherry

பிளஸ் 2 தேர்வில் தோல்வி: மாணவி, மாணவர் தற்கொலை

பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியைச் சேர்ந்த மாணவி நிவேதிதா, கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப் பேட்டை குப்பநத்தத்தை சேர்ந்த மாணவர் மௌனிஷ் ஆகிய இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனர்.

time to read

1 min

May 09, 2026

Listen

Translate

Share

-
+

Change font size