Intentar ORO - Gratis
என்ன வளம் இல்லை நமது திருநாட்டில்?
Dinamani Perambalur & Ariyalur
|July 08, 2025
அரசியல்வாதிகள் மனிதத் தலைகளைக் கணக்கிட்டு அவர்களின் அறிவார்ந்த, ஆரோக்கிய நிலைகளை உயர்த்தாது வெறும் வாக்கு எண்ணிக்கையை மட்டும் கருத்தில் கொண்டு ஏழ்மையைப் போக்காது ஏழைகளை வளர்க்கின்றனர்.
அண்மையில் தில்லி உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தெற்கு தில்லி செட்டில்மென்ட் எனப்படும் மதராஸி முகாமில் (கேம்ப்) உள்ள 400 வீடுகளில் 370 வீடுகள் இடிக்கப்பட்டன. காரணம், இந்த வீடுகள் ரயில்வே துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தன. மற்றொரு காரணம், பாரா புல்லா பகுதியின் மழைநீர் வடிகால் பாதை இந்த ஆக்கிரமிப்பு வீடுகளால் அடைபட்டு இருந்தது. இதனால், ஆண்டுதோறும் மழை, வெள்ள காலங்களில் அந்தப் பகுதியே மிக மோசமாக பாதிக்கப்பட்டது.
தில்லி அரசும் இவர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகளை (அடுக்குமாடி குடியிருப்பு) கட்டி, இவர்களைக் குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டது. ஆனால், மதராஸி முகாமில் குடியிருந்தவர்கள் தற்போது தாங்கள் குடியிருக்கும் பகுதியில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவிலுள்ள இடத்தில் குடியேறுவது, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும்; தங்கள் குழந்தைகள் படிக்கவும், தாங்கள் வேலை செய்து பிழைக்கவும் இயலாது எனக் கூறி, குறிப்பிட்ட இடத்துக்குச் செல்ல மறுத்து விட்டார்கள்.
இறுதியில் தில்லி அரசு அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்பு உள்ள வீடுகளை இடித்து விட்டார்கள். இதனால் 400 குடும்பங்கள் வீடுகளை இழந்து தெருக்களில் தஞ்சம்புக நேர்ந்தது. இதையறிந்த தமிழக அரசு வீடிழந்த மக்களை தமிழ்நாடு இல்லத்துக்கு வரச் செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடு குறித்தான ஆணை அல்லது அவர்களுக்கு வீடு ஒதுக்கவில்லை என்ற ஆணை, ஆதார் அட்டை பரிசோதித்து தலா ரூ.8000-ஐ அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த ஏற்பாடு செய்தது.
வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கியில் கணக்கு தொடங்க சிறப்பு முகாம் அமைத்தனர். தலா 27 கிலோ அரிசி, கோதுமை மாவு, சர்க்கரை, எண்ணெய் மற்றும் இதர சமையல் பொருள்கள் அடங்கிய பையும் வழங்கப்பட்டது. மீளாத்துயரில் இருந்த மக்களுக்குத் தமிழக அரசு ஆறுதலளித்ததை வெகுவாகப் பாராட்டலாம்.
நாட்டின் தலைநகர் தில்லியில் எப்படி, இப்படி ஏழைத் தமிழர்கள் குடியேறினார்கள்? பிழைக்க, வேலை தேடி சுமார் 2,000 கி.மீ. தொலைவு வந்தவர்கள் சுமார் 20, 30 ஆண்டுகளாக மதராஸி முகாமில் குடியேறினர். பங்களாக்களில், வீடுகளில் வீட்டுத் தூய்மைப் பணி செய்வது, அவர்களது சொகுசு வாகனங்களைத் துடைத்துச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் செய்வது தான் இவர்களின் வாழ்க்கை முறை.
Esta historia es de la edición July 08, 2025 de Dinamani Perambalur & Ariyalur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு
சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
November 28, 2025
Dinamani Perambalur & Ariyalur
இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.
1 min
November 28, 2025
Dinamani Perambalur & Ariyalur
டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா
சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
2 mins
November 28, 2025
Dinamani Perambalur & Ariyalur
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
2 mins
November 28, 2025
Dinamani Perambalur & Ariyalur
காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்
சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
November 28, 2025
Dinamani Perambalur & Ariyalur
அனைத்து அலுவலகங்களிலும் இன்று அரசமைப்புச் சட்ட முகப்புரையை வாசிக்க முதல்வர் உத்தரவு
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 76-ஆம் ஆண்டையொட்டி, அனைத்து அலுவலகங்களிலும் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையை புதன்கிழமை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
1 min
November 26, 2025
Dinamani Perambalur & Ariyalur
தில்லி சென்றார் தமிழக பாஜக தலைவர்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சித் தலைமை அழைப்பின்பேரில் செவ்வாய்க்கிழமை தில்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
1 min
November 26, 2025
Dinamani Perambalur & Ariyalur
முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை
சென்னையில் முதிய தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
November 24, 2025
Dinamani Perambalur & Ariyalur
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம்: 9.37 லட்சம் பேர் பயன்
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ் இதுவரை 9.37 லட்சம் பேர் பயன்பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
November 24, 2025
Dinamani Perambalur & Ariyalur
தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்
புது தில்லி, நவ. 23: தென்னாப் பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத வுள்ள இந்திய அணி 15 பேரு டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக் கப்பட்டது.
1 min
November 24, 2025
Translate
Change font size

