Intentar ORO - Gratis
ஒரு கதவு மூடினால்...
Dinamani New Delhi
|November 15, 2025
உலகில் தாங்கள் விரும்பிய துறைகளில், விரும்பிய வகையில் வாய்ப்புகள் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பவர்கள் ஒரு வகை. தாங்கள் விரும்பிய வடிவில் வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில், வேறொரு வடிவத்தில் வந்து சேரும் வாய்ப்பைப் பிடித்துக் கொண்டு, முத்திரையைப் பதிப்பவர்கள் இரண்டாவது வகை. அந்த இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்தான் நமது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகிய அமோல் மஜூம்தார்.
தனது திறமைக்கேற்ற வாய்ப்புகளைப் பெற இயலாமல் ஓய்வையும் அறிவித்த அமோல் மஜூம்தார், அண்மையில் மகளிர் உலகக் கோப்பையை வென்ற ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகச் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றியின் வித்தகராக மலர்ந்திருப்பது சாதாரண விஷயமன்று.
கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் எதுவானாலும் அதில் ஈடுபடும் வீரர் ஒவ்வொருவருக்கும் தமது நாட்டு அணியில் இடம்பெற்று விளையாடவேண்டும் என்பதே தலையாய விருப்பமாக இருக்கும். ஆனால், திறமையுள்ள வீரர் - வீராங்கனைகள் அனைவருக்கும் அவரவர் நாட்டு அணிகளில் அவ்வளவு எளிதாக இடம் கிடைத்துவிடாது.
பல்வேறு விளையாட்டுகளையும் நிர்வகிக்கும் அமைப்புகளின் செயல்பாடு, தேர்வாளர்களின் விருப்பு-வெறுப்பு போன்ற காரணிகள் ஒரு வீரர் அல்லது வீராங்கனைக்குரிய வாய்ப்புகள் கிடைப்பதையும், மறுக்கப்படுவதையும் தீர்மானிக்கின்றன.
1974-ஆம் ஆண்டு பிறந்தவராகிய அமோல் மஜூம்தார் திறமையான வலதுகை பேட்டராகவும், வலதுகை சுழற்பந்து வீச்சாளராகவும் விளங்கினார். ஆனால், சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி, சௌரவ் கங்குலி, ராகுல் திராவிட், வி.வி.எஸ். லக்ஷ்மண் போன்ற ஜாம்பவான்களின் பட்டியல், அணித் தேர்வாளர்களின் கையில் இருந்ததால், இவரால் இந்திய தேசிய அணியில் இடம்பெறவே இயலாமல் போனது.
Esta historia es de la edición November 15, 2025 de Dinamani New Delhi.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani New Delhi
Dinamani New Delhi
திமுக - அதிமுக கூட்டணி குறித்து என்னிடம் யாரும் பேசவில்லை
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், திமுக - அதிமுக கூட்டணி குறித்து தகவல்கள் வந்தபோதும், இந்த விவகாரம் தொடர்பாக யாரும் தன்னிடம் பேசவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
May 19, 2026
Dinamani New Delhi
‘ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு’: யுஏபிஏ வழக்குகளுக்கும் பொருந்தும்
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட (யுஏபிஏ) வழக்குகளிலும் 'ஜாமீன் என்பது விதி, சிறை என்பது விதிவிலக்கு' என்ற கோட்பாடு பொருந்தும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Dinamani New Delhi
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்
'அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுகிறேன்' என அக்கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செம்மலை திங்கள் கிழமை தெரிவித்தார்.
1 min
May 19, 2026
Dinamani New Delhi
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani New Delhi
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani New Delhi
அமைச்சர்கள் என்.ஆனந்த், செங்கோட்டையன் பொறுப்பேற்பு
முதல்வர் விஜய் நேரில் வாழ்த்து
1 min
May 19, 2026
Dinamani New Delhi
தமிழக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க முதல்வர் விஜய் ஆலோசனை
தமிழகத்தில் வணி கச் செயல்முறைகளை எளிமைப் படுத்தி தொழில் மற்றும் பொரு ளாதார வளர்ச்சியை ஊக்குவிப் பது தொடர்பாக முதல்வர் விஜய் சென்னை தொழில் வர்த்தக கூட்ட மைப்பின் (எம்சிசிஐ) உயர்நிலைக் குழுவினருடன் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினார்.
1 min
May 19, 2026
Dinamani New Delhi
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani New Delhi
அரசியலிலிருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
1 mins
May 19, 2026
Dinamani New Delhi
ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்
அமெரிக்காவின் வரி விதிப்பு, பொருளாதார தடைகளை கடந்து நாட்டின் எரிசக்தித் தேவைகளுக்கேற்ப ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என மத்திய பெட்ரோலிய அமைச்சக இணைச் செயலர் சுஜாதா சர்மா திங்கள் கிழமை தெரிவித்தார்.
1 min
May 19, 2026
Listen
Translate
Change font size

