Intentar ORO - Gratis
ஜீவாவின் சுவாசம் தமிழ்!
Dinamani Nagapattinam
|January 17, 2026
சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952-இல் நடைபெற்றது.
அதில் சென்னை வண்ணாரப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகக் களம் இறங்கினார் அந்த இயக்கத் தலைவரான ப. ஜீவானந்தம்; வெற்றியும் பெற்றார்.1955 செப்டம்பர் 29-ஆம் தேதி ஜீவா சட்டப்பேரவையில் 'நான் தமிழன். என்னுடைய மொழியே இந்த ராஜ்ஜியத்தில் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமென்பது எனது கோரிக்கை. அதேபோல் மலையாளிகளும், கன்னடர்களும் இந்த ராஜ்ஜியத்தில் இருக்கும் வரையிலும் மலையாளமும், கன்னடமும் இங்கு ஆட்சி மொழியாக இருந்து வரவேண்டும் (அப்போது மொழிவழி மாநிலம் பிரிக்கப்படவில்லை). இதுதான் அடிப்படை நியதி. கல்விக் கூடங்களிலும், ஆட்சி மன்றங்களிலும், நீதிமன்றங்களிலும், நிர்வாகத் துறையிலும் பிரதேச மொழியே இருக்க வேண்டும். ஆகவே, வெகு சீக்கிரமாகத் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். உயர்நீதிமன்றத்திலும் தமிழ்மொழிதான் கையாளப்பட வேண்டும்' என்று பேசினார்.
இதன் தொடர்ச்சியாக 'பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து இன்று வரைக் கும் ஆங்கிலம்தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக மத்தியில் இருந்து வருகிறது. இனிமேலும் இது ஆதிக்கம் செலுத்தும் மொழியாக இருக்கக்கூடாது' என்று குறிப்பிட்ட ஜீவா 'நாடாளுமன்றத்துக்கு எல்லா பிரதேசங்களில் இருக்கக் கூடியவர்களும் அங்கத்தினர்களாக வருகிறார்கள். எந்த மொழிபேசும் ராஜ்ஜியத்திலிருந்து அங்கத்தினர்கள் நாடாளுமன்றத்துக்கு வந்தாலும் அவர்கள் முழுமூச்சுடன் தங்களுடைய பிரதேச மக்களின் கருத்துகளை அங்கு பிரதிபலிக்கக் கூடிய வகையில் வாய்ப்பிருக்க வேண்டும். இந்தியாவின் தேசிய மொழிகளாகவுள்ள அத்தனை மொழிகளுக்கும் அங்கு இடம் இருக்க வேண்டும்' என்று எவ்விதப் பிசிறலும் இன்றி அழுத்தம் திருத்தமாகப் பேசினார்.
அதே உரையில் 'ஹிந்தி மொழி பேசுபவர்களுக்கு என்ன உரிமை நாடாளுமன்றத்தில் இருக்கிறதோ அதே உரிமை தமிழ் பேசும் பிரதிநிதிகளுக்கும் இருக்க வேண்டும்' என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார். இவ்வுரை நிகழ்த்தப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 1953, 1954-ஆம் ஆண்டுகளில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட வேண்டுமென்று அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்து சட்டப்பேரவையில் உரையாற்றினார்.
Esta historia es de la edición January 17, 2026 de Dinamani Nagapattinam.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை
அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்
1 min
May 20, 2026
Dinamani Nagapattinam
பயங்கரவாத எதிர்ப்பில் இரட்டை நிலைப்பாடு கூடாது
பிரதமர் மோடி
2 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!
இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.
3 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Nagapattinam
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Nagapattinam
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Nagapattinam
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Nagapattinam
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Listen
Translate
Change font size

