Intentar ORO - Gratis

அன்பு மன்னிப்புக் கேட்கும்!

Dinamani Madurai

|

June 05, 2025

அன்பு மன்னிப்புக் கேட்காது என்பது சரியல்ல; அன்பே மன்னிப்புக் கேட்கும். கணவன்-மனைவி இடையே பிணக்கு வரும்போது யார் பக்கம் நியாயம் என வாதிடாமல், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து மன்னிப்புக் கேட்டால் அந்த இல்லறம் தழைக்கிறது. வீட்டுக்குப் பொருந்துவது நாட்டுக்கும் பொருந்தும்.

- திருப்பூர் கிருஷ்ணன்

டிகர் கமல்ஹாசன் கன்னடம் தமிழிலிருந்து தோன்றிய மொழி என்று சொன்னது இப்போது சர்ச்சையாகியுள்ளது. கன்னட மொழி பேசும் பிரதேசங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

கமல்ஹாசன் சொன்ன கருத்தை ஏற்கெனவே சொன்னவர்கள் தமிழில் பலர் உண்டு. அப்போதெல்லாம் இந்தக் கருத்து சர்ச்சையானதில்லை. காரணம், சொன்னவர்கள் அதிகம்பேர் அறியாத தமிழ் அறிஞர்கள். எல்லோராலும் அறியப்பட்ட திரைப் பிரபலங்கள் அல்லர்.

கன்னட மொழி அன்பர்கள், மலையாள இளைஞரின் கண்ணோட்டத்தில் நடிகர் கமல்ஹாசன் கூறியதைப் புரிந்துகொண்டால், எதிர்க்காமல் மகிழ்ச்சிகொள்ள வாய்ப்பிருக்கிறது.

மலையாள இளைஞர் தமிழில் நான்கு 'க' எழுத்துகள் இல்லையே என்றாரே, அது தமிழின் குறை யல்ல; தமிழின் தன்மை; அவ்வளவே. ஏனெனில், இடத்துக்குத் தகுந்தவாறு ஒரே எழுத்தான 'க' தமிழில் தன் உச்சரிப்பை மாற்றிக் கொள்கிறது.

ப.க. பொன்னுசாமி எழுதிய படுகளம் என்ற புதினம் கொங்குத் தமிழின் அத்தனை நயங்களை யும் பதிவு செய்துள்ளது. ஆனால், அந்த வழக்குகள் அனைத்தையும் இன்று கொங்கு நாட்டில் கேட்க முடியுமா என்பது சந்தேகமே. கொங்கு வட்டார வழக்கும்

'கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன்னுதரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும்' என்று தாம் எழுதிய மனோன்மணீயம் கவிதை நாடக நூலில் சொல்கிறார் சுந்தரம் பிள்ளை. அவர் கருத்தைத்தான் நடிகர் கமல்ஹாசனும் கூறியுள்ளார்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கோழிக்கோட்டில் தென்மொழிகள் தொடர்பான ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் நா. பார்த்தசாரதியும் நானும் கலந்துகொண்டோம். அங்கே ஒரு தமிழ்ப் பண்டிதர் கட்டுரை வாசித்தார். தமிழ் தாய் மொழி என்றும் அதிலிருந்து பிறந்த சேய் மொழிகள்தான் கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு மலையாள இளைஞர் 'நீங்கள் கவிதை வாசிக்கிறீர்களா, கட்டுரை வாசிக்கிறீர்களா?' என்று கேட்டார். 'ஏன் கட்டுரை தான் வாசிக்கிறேன்' என்றார் தமிழ்ப் பண்டிதர். 'அப்படியானால் தாய்சேய் போன்ற கவிதைத் தன்மைகளை நீக்கிவிட்டுச் சொல்லுங்கள். தமிழிலிருந்து தோன்றியவை கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவை என்பதுதானே உங்கள் கருத்து' என வினவினார் அவர். ஆம் என்றார் இவர். உடன் மலையாள இளைஞர் தம் கண்ணோட்டத்தை விளக்கினார்.

MÁS HISTORIAS DE Dinamani Madurai

Dinamani Madurai

Dinamani Madurai

ஜ.நா. பெண்கள் அமைப்புடன் தமிழக அரசு ஒப்பந்தம்

பெண்களின் நலன், பாலின சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்புடன் தமிழக அரசுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Madurai

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11 லட்சம் பேர் மனு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை வரை (ஜன.

time to read

1 min

January 06, 2026

Dinamani Madurai

டிவிஎஸ் மோட்டார் விற்பனை 50% உயர்வு

முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

Dinamani Madurai

புதிய சிக்கலில் வங்கதேச உறவு!

நமது அண்டை நாடான வங்கதேசத்தில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் இந்தியாவுக்குப் பெரும் தலைவலியாக மாறி உள்ளன.

time to read

2 mins

January 06, 2026

Dinamani Madurai

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,280 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை, மாலை என பவுனுக்கு ரூ.

time to read

1 min

January 06, 2026

Dinamani Madurai

ஊக்கமருந்து தடுப்பு பரிசோதனைப் பட்டியல்: ஸ்மிருதி, ஜெமிமா உள்பட 120 பேர் சேர்ப்பு

தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (என்ஏடிஏ) பரிசோதனைப் பட்டியலில் (ஆர்டிபி) நடப்பாண்டின் முதல் காலாண்டில் 120 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

January 06, 2026

Dinamani Madurai

Dinamani Madurai

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Madurai

பெரு நகரங்களில் இரு விமான நிலையங்கள் அமைக்க ஏற்பாடு: மத்திய அமைச்சர் தகவல்

இந்தியாவில் உள்ள பெரு (மெட்ரோ) நகரங்களில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க மாநில அரசுகளை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது என்று மத்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்தார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Madurai

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Madurai

வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை

கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 mins

January 05, 2026

Translate

Share

-
+

Change font size