Intentar ORO - Gratis
அரியலூரில் 426, கரூரில் 415, பெரம்பலூரில் 256 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
Dinamani Karur
|August 28, 2025
விநாயகர் சதுர்த்தி விழா வையொட்டி அரியலூர் மாவட்டத்தில் 426 விநாயகர் சிலைகள் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
-
அரியலூர் / கரூர் / பெரம்பலூர், ஆக.27:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்திலுள்ள விநாயகர் கோயில்களில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
அரியலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், மீன்சுருட்டி, செந்துறை, பொன்பரப்பி, தா.பழூர், திருமானூர், திருமழபாடி, கீழப்பழுவூர் உள்ளிட்ட 426 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க காவல் துறை அனுமதி அளித்தது. இதை யடுத்து அந்த இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பல இடங்களில் சிறியது முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் நடத்தப்பட்டது.
பிரச்னைக்குரிய இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதிகாலை முதலே விநாயகருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. வீடுகளிலும், விநாயகர் சிலைகள் வைத்து, அவல், பொறி, பழங்கள் படைத்து மக்கள் வழிபட்டனர்.
அரியலூர் கடைவீதிகளில் விற்பனைக்கு வந்த களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய விநாயகர் சிலைகளை போட்டி போட்டு வாங்கிச் சென்றனர். இந்த ஆண்டு 3 முதல் 13 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகளுக்கு மட்டுமே காவல் துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய இடங்களில் யாரும் சிலைகளை வைக்கக் கூடாது என்று எச்சரித்துள்ளனர். உரிய அனுமதி பெற்ற பின்பே சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட முழுவதும் விதவிதமாக கோணத்தில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வருகிறது.
தா.பழூர்: அரியலூர் மாவட்டம், தா.பழூரில் விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூர்: கரூர் மாவட்டத்தில் 415 இடங்களில் விநாயகர் சிலைகள் புதன்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
Esta historia es de la edición August 28, 2025 de Dinamani Karur.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Karur
Dinamani Karur
இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.
1 min
May 17, 2026
Dinamani Karur
வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி
சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.
1 mins
May 17, 2026
Dinamani Karur
பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்
பிரேமலதா விஜயகாந்த்
1 min
May 17, 2026
Dinamani Karur
உயர்ந்தவற்றுள் உயர்ந்தது
செய்யுளைப் பொருளாலும், சொல்லாலும் அழகுபடுத்துவதே அணி.
2 mins
May 17, 2026
Dinamani Karur
கலம் தொடா மகளிர்
சங்க இலக்கியங்களில் நாம் காணும் சில சடங்குகள் இன்றைக்கும் நமது இல்லங் களில் தவறாது கடைப்பிடிக்கும் சடங்குக ளாக இருக்கின்றன.
1 mins
May 17, 2026
Dinamani Karur
சிறப்பாகச் செயல்பட்டு வரும் சென்னை எம்.ஓ.பி. பெண்கள் கல்லூரியின் இதழியல் துறை
சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.ஓ.பி. வைணவ மகளிர் கல்லூரியின் இதழியல் (Journalism) துறை 2003-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
1 min
May 17, 2026
Dinamani Karur
தனித்துவ அடையாள அட்டை பெறாத 7.54 லட்சம் விவசாயிகள்!
இருபது மாதங்களுக்கும் மேலாக கால அவகாசம் வழங்கியும்கூட தமிழகத்தில் சுமார் 7.54 லட்சம் விவசாயிகள் தனித்துவ அடையாள அட்டை பெறுவதற்கு முன்வரவில்லை.
2 mins
May 17, 2026
Dinamani Karur
மணிப்பூர்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை தீவிரம்
மணிப்பூரில் குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களால் பரஸ்பரம் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை முழுமையாக விடுவிப்பதற்காக, சமூக அமைப்புகளுடன் மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
May 17, 2026
Dinamani Karur
அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது
நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
1 min
May 17, 2026
Dinamani Karur
கபடியில் கலக்கும் 'இளம்புயல்'
தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட காளத்திமடம் எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த 'இளம்புயல்' கபடி அணியின் பதினான்கு வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் திறந்தவெளி, அரசு நடத்தும் கபடி போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
1 mins
May 17, 2026
Translate
Change font size
