Intentar ORO - Gratis
வளர்ச்சிக்கு வித்திடும் பயிற்சி!
Dinamani Karaikal
|January 13, 2026
மத்திய அரசு வருகிற 2047ஆம் ஆண்டை நோக்கி இந்தியாவை இட்டுச்செல்ல பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்து வருகிறது.
ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது இந்தியாவை 21-ஆம் நூற்றாண் டுக்கு அழைத்துச் செல்கிறேன் என்று பல்வேறு முன்னெடுப்புகளை மேற் கொண்டார். அதில் ஒன்று கணினி மயமாக்குதல்; அடுத்து, உள்ளாட்சியை வலுப்படுத்தி, மக்களை அதிகாரப்படுத்தி மக்களாட்சியை உண்மையான பிரதிநிதித் துவ மக்களாட்சியாகவும், பங்கேற்பு மக்க ளாட்சியாகவும் மாற்றியமைக்கத் திட்ட மிட்டார். அதுதான் அடுத்த எதிர்காலம் என்று அழைக்கப்படும் புதிய தடத்துக்கு ஒரு நாட்டை அழைத்துச் செல்வது.தற்போது அந்த நிலையில்தான், '2047-ஐ நோக்கி' என்ற முன்னெடுப்பு கள். அதில் ஒன்றாக கிராமப்புற மேம் பாட்டில் பெரும் மாற்றங்களையும் அடிப்படை மாற்றங்களையும் கொண் டுவர 8,000 வட்டார வளர்ச்சி அலுவலர் களுக்கு ஆறு நாள்கள் பயிற்சியளிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது. வட்டார வளர்ச்சி அலுவலர்களின் பார்வை யில், உளவியல் திறனில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிட்டால் அந்த வட்டா ரத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சி களிலும் மாற்றங்களைக் கொண்டு வந்து விடலாம் என எண்ணி, அந்தப் பொறுப்பை லால் பகதூர் சாஸ்திரி பெயரில் இயங்கும் இந்திய ஆட்சிப் பணியாளர்களுக்கு பயிற் சியளிக்கும் நிறுவனமும், தேசிய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் நிறுவனமும் இணைந்து நடத்தப் பணிக்கப்பட்டுள்ளது. பயிற்சியில் கூற வேண்டிய கருத்துகள் பயிற்சி வல்லுநர்களைக் கொண்டுதொகுக் கப்பட்டுள்ளன. அவற்றைச் சரிபார்த்து எந்த முறைமையில் அந்தப் பயிற்சி அளிக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்து, அவற்றை சரிபார்க்க ஒரு சிறிய குழுவை உருவாக்கியுள்ளனர். அதில் நீண்டநாள் ஊராட்சித் துறையில் மாநிலச் செயலர்க ளாக இருந்த சில ஐஏஎஸ் அதிகாரிகளை யும், பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் சில ஆட்சிப் பணியாளர்களையும் உறுப்பினர் களாக்கியிருந்தனர். அதில் என்னையும் உறுப்பினராக்கி செயல்படப் பணித்தனர்.
அந்தச் சிறிய குழுவை அழைத்து இரண்டு நாள் கருத்துப் பட்டறையை ஹைதராபாதில் உள்ள தேசிய ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் நடத்தினர். அது கருத்துப் பட்டறை என்றழைக்கப்படாமல் எழுத்துப் பட்டறை எனப் பெயரிட்டு அத்தனை கருத் துக் கோப்புகளையும் சரிபார்க்கக் கூறினர்.
Esta historia es de la edición January 13, 2026 de Dinamani Karaikal.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Karaikal
Dinamani Karaikal
நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்
இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Karaikal
இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்
எடப்பாடி பழனிசாமி அழைப்பு
1 min
May 19, 2026
Dinamani Karaikal
புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்
அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்
1 min
May 19, 2026
Dinamani Karaikal
நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து
தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Karaikal
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Karaikal
வரலாறு படைத்தார் யானிக் சின்னர்
'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'
1 min
May 19, 2026
Dinamani Karaikal
கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !
உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.
3 mins
May 19, 2026
Dinamani Karaikal
தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி
'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
May 19, 2026
Dinamani Karaikal
விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி
தவெக தலைவர் விஜய் முதல்வரானது வியப்பு கலந்த மகிழ்ச்சி என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.
1 min
May 18, 2026
Dinamani Karaikal
சைலெட் டெஸ்ட்: 232-க்கு கட்டுப்பட்ட பாகிஸ்தான்
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
1 min
May 18, 2026
Listen
Translate
Change font size

