Facebook Pixel தெளிவின் திறவுகோல்! | Dinamani Erode & Ooty - newspaper - Lee esta historia en Magzter.com
Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

தெளிவின் திறவுகோல்!

Dinamani Erode & Ooty

|

April 02, 2025

தனிமனித முடிவு என்பது ஒருவர் தன்னிச்சையாக எடுப்பது. சில விஷயங்களில் தனிப்பட்ட முடிவை எடுக்கத் தயங்கி, மற்றவர்களின் ஆலோசனைகள், விருப்பங்கள் அல்லது கட்டாயங்களுக்கு உட்பட்டு அதை ஏற்றுக் கொள்கிறோம். ஒரு தனிப்பட்ட முடிவு, அந்த நபரின் வாழ்க்கையில் நேர்மறையான அல்லது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

ன் உறவினர் கண் மருத்துவர். அவரைப் பார்க்கச் சென்றிருந்தபோது, அவர் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டிருந்ததால், நான் ஓர் அறையில் காத்திருந்தேன். அந்த அறையில் ஓர் உதவியாளர் கண் பரிசோதனை செய்து கொண்டிருந்தார். பலரும் முதல் நான்கு வரிசை எழுத்துகளை எளிதாகப் படித்துவிட்டார்கள். கடைசி இரண்டு வரிசை எழுத்துகளைப் படிக்க கண்ணாடிகளைப் பொருத்தி, பின் படிக்கச் சொன்னார்கள். இது நன்றாகத் தெரிகிறதா? என்று கேட்டுக் கேட்டு, கண்ணாடிகளை மாற்றி மாற்றிப் பொருத்தி, படிக்கச் சொன்னார்கள். அந்த மனிதர் நன்றாகத் தெரிகிறது என்று சொன்னார். இதில் இரு சாராருமே களைத்துப் போய் விடுகிறார்கள். வேறு எந்த சிகிச்சைக்குப் போனாலும், மருத்துவர்கள் நம்மைக் கேட்டு சிகிச்சை செய்யமாட்டார்கள். நோயின் தன்மைக்கேற்ப மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவிடுவார்கள். கண் பரிசோதனை போல இங்கு நம் முடிவு தேவை இல்லை.

எதையுமே நம் விருப்பத்துக்கு விட்டுவிட்டால், நாம் முடிவெடுப்பதில் குழப்பம் அடைகிறோம். நிறையத் தயங்குவோம்; யோசிப்போம். ஒரு புடவை அல்லது நகை வாங்க எவ்வளவு நேரத்தை எடுத்துக் கொள்கிறார்கள்! ஒரு கடையையே புரட்டிப் போட்டுவிடுகிறார்கள். அப்போதும் திருப்தி ஏற்படுவதில்லை. ஒரு புடவை, நம் வாழ்நாள் முழுவதும் கிழிந்து போகாமல் இருக்குமா? அதை வருடத்துக்குப் பத்து முறை உடுத்துவார்களா? இவர்கள் நூற்றுக்கணக்கான புடவைகளை நிராகரிப்பார்கள். இன்னொரு பெண் கையில் வைத்துள்ள புடவையின் மீது கண் போகும். உடனே அது பிடித்துப் போய்விடும். அதைக் கொடுக்கும்படி கேட்பார்கள். அவ்வளவு நேரமும் அந்தப் புடவையை எடுக்கலாமா, வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த அந்தப் பெண், சட்டென்று, தான் அதை எடுத்துக் கொண்டதாகக் கூறிவிடுவார். இவர் ஏமாற்றம் அடைந்துவிடுவார். புடவைக்கே இந்த நிலை என்றால், நகைக்கு எப்படி இருக்கும்?

ஒவ்வொன்றையும் அணிந்து, கண்ணாடியில் பார்த்து, பின் வேறு வடிவமைப்பு வேண்டும் என்று கேட்பது; எதையும் வாங்காமல் பொழுதைப் போக்கிவிட்டு, குளிர்பானம் குடித்து, பின் எழுந்து போய்விடுவது - பாவம், அந்த விற்பனையாளர்கள். இரண்டு கிராம் நகைக்கே அத்தனை தேடல் இருக்கும். கல்யாணத்துக்கு நகை வாங்குவது என்றால் கற்பனையே வயிற்றைக் கலக்குகிறது.

MÁS HISTORIAS DE Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

மதிய உணவுத் திட்ட விரிவாக்கம் அவசியம்

சென்னையின் புகழ்பெற்ற தனியார் பள்ளி ஒன்றில் சில காலம் பணி புரிந்த பிறகு, அரசுப் பள்ளிகளுடன் பணி புரியத் தொடங்கியபோது தனியார், அரசுப் பள்ளி மாணவர்களிடையில் எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்த வேறுபாடு அவர்களின் கல்வித் தரத்திலோ அறிவாற்றலிலோ இல்லை. அது அவர்களின் உடல் வளர்ச்சியில் இருந்தது.

time to read

2 mins

June 22, 2026

Dinamani Erode & Ooty

கேரள முன்னாள் முதல்வர் மகளுக்கு மீண்டும் அழைப்பாணை

பணமுறைகேடு வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி, கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயனின் மகள் வீணா அமலாக்கத் துறை மீண்டும் அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Erode & Ooty

நேஷன்ஸ் கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன்

எஃப்ஐஎச் நேஷன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றியது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Erode & Ooty

'ஏ' அணிகள் தொடர்: இந்தியா சாம்பியன்

இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் நாடுகளின் 'ஏ' அணிகள் இடையேயான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

time to read

1 min

June 22, 2026

Dinamani Erode & Ooty

மேக்கேதாட்டு அணை கூடாது

மேக்கேதாட்டு அணை கட்ட கர்நாடக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அணையை கட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசு அளிக்கக் கூடாது என வலியுறுத்தியும் தமிழக சட்டப் பேரவையில் முதல்வர் சி.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை கொண்டுவந்த தனித் தீர்மானம் அனைத்துக் கட்சிகள் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேறியது.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Erode & Ooty

ஆண்களின் மலட்டுத்தன்மையை குறைக்கும் யோகா: எய்ம்ஸ்

ஆண்களின் மலட்டுத்தன்மையை யோகா குறைக்கும் என்று எய்ம்ஸ் ஆய்வாளர்களின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

நாக் அவுட் சுற்றில் மெக்ஸிகோ

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெக்ஸிகோ தொடர்ந்து இரு வெற்றிகளைப் பதிவு செய்து, முதல் அணியாக நாக் அவுட் சுற்றுக்கு (ரவுண்ட் ஆஃப் 32) வெள்ளிக்கிழமை முன்னேறியது. கனடா, சுவிட்ஸர்லாந்து அணிகள் தங்கள் ஆட்டங்களில் அபார வெற்றி கண்டன.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Erode & Ooty

மேற்கிந்தியத் தீவுகளுக்கு 2-ஆவது வெற்றி

ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில், மேற்கிந்தியத் தீவுகள் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வென்றது.

time to read

1 min

June 20, 2026

Dinamani Erode & Ooty

தியாகத்தின் உருவம் !

உலகில் ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பவர் தந்தை. ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கும், கல்விக்கும், ஒழுக்கத்துக்கும், எதிர்கால வெற்றிக்கும் அடித்தளமாக இருப்பவர் தந்தை.

time to read

2 mins

June 20, 2026

Dinamani Erode & Ooty

Dinamani Erode & Ooty

ரொனால்டோவுக்கு ஏமாற்றம்; போர்ச்சுகல் போராட்டம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியால், கடும் சவால் அளித்த டிஆர் காங்கோவுடன் டிரா செய்ய மட்டுமே முடிந்தது. இந்த ஆட்டத்தில் ரொனால்டோவால் கோலடிக்க முடியாமலும் போனது.

time to read

1 min

June 19, 2026

Translate

Share

-
+

Change font size