Intentar ORO - Gratis
இளம்பெண்களின் இசை பிரவாகம்!
Dinamani Dindigul & Theni
|October 12, 2025
சென்னையைச் சேர்ந்த இளம்பெண் இசைக் கலைஞர்கள் ஒன்றிணைந்து 'பிரவாகம்' என்ற இசைக் குழுவைத் தொடங்கி, நாடு முழுவதும் இசை மழை பொழிந்து வருகிறார்கள். கர்நாடக சங்கீதம், மெல்லிசை, இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தி இசை நிகழ்ச்சி என வெவ்வேறு வடிவங்களில் இந்தக் குழுவினர் வழங்கி வரும் புதுமையான நிகழ்ச்சிகள் இசை ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றிருக்கின்றன. அவர்களைச் சந்தித்துப் பேசினோம்:
'பிரவாகம்' இசைக் குழுவை எப்போது ஆரம்பித்தீர்கள்?
இசையில் ஆர்வமுடைய இளம் பெண் இசைக்கலைஞர்கள் ஒன்றிணைந்து, 2017-ஆம் ஆண்டு 'பிரவாகம்' இசைக் குழுவை ஆரம்பித்தோம். எங்கள் குழுவில் நாங்கள் மொத்தம் நான்கு பேர் இருக்கிறோம். ஜனனி ஹம்சினி, வாய்ப்பாட்டு கலைஞர். அஞ்சனி சீனிவாசன், வீணை வாசிப்பார். ரங்கப்பிரியா, வயலின் இசைக் கலைஞர். அஸ்வினி, மிருதங்கம் மற்றும் கொன்னக்கோல் வாசிப்பார். இதுதவிர, தேவைக்கேற்ப பெண் இசைக் கலைஞர்களையும் எங்கள் குழுவில் சேர்த்துக் கொண்டு இசைக் கச்சேரிகளை வழங்கி வருகிறோம். நாடு முழுவதிலும் இதுவரை சுமார் 300 இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம். அதில் கோயில் கச்சேரிகள், கல்யாணக் கச்சேரிகள், சபா கச்சேரிகள், மெல்லிசைக் கச்சேரிகள் போன்றவையும் அடங்கும். முழுக்க முழுக்க இசைக் கருவிகளை மட்டுமே பயன்படுத்தியும் இசை நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம்.நீங்கள் வழங்கியிருக்கும் குறிப்பிடத்தக்க இசை நிகழ்ச்சிகள்?
மயிலை கபாலீஸ்வரர் ஆலயம், சென்னை ஆர்.ஆர். சபா, பெங்களூர் சுப்பிரமணிய சுவாமி ஆலயம் போன்ற இடங்களில் நடத்திய இசைக் கச்சேரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சென்னை பாரத் கலாச்சாரில் நடந்த மார்கழி உற்சவம் நிகழ்ச்சியிலும், திருச்சி மார்கழி உற்சவம் நிகழ்ச்சியிலும், சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியிலும் வழங்கிய கச்சேரிகள் என்றென்றும் மறக்க முடியாதவை.Esta historia es de la edición October 12, 2025 de Dinamani Dindigul & Theni.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Dinamani Dindigul & Theni
Dinamani Dindigul & Theni
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை சிலியுடன் இன்று மோதுகிறது இந்தியா
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் வெள்ளிக்கிழமை சிலியுடன் மோதுகிறது இந்தியா.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
உயிர் காக்கும் சித்த மருத்துவம்!
அட்கொல்லி நோயான 'புற்றுநோய்' நீண்ட நெடிய வரலாறு கொண்டது. 'மருத்துவத்தின் தந்தை' ஹிப்போக்ரடீஸ் கி.மு. 400-இல் 'கார்சினோஸ்' என்று புற்றுநோயை குறிப்பிட்டுள்ளார். அதுவே பின்னர் 'கார்சினோமா' எனும் புற்றுநோய் கட்டியின் பெயருக்கு வித்திட்டது.
2 mins
November 28, 2025
Dinamani Dindigul & Theni
டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா
சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
2 mins
November 28, 2025
Dinamani Dindigul & Theni
காலிறுதிச்சுற்றில் தன்வி, மன்ராஜ்
சையது மோடி இன்டர்நேஷனல் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் தன்வி சர்மா, மன்ராஜ் சிங் ஆகியோர் அசத்தல் வெற்றியுடன் காலிறுதிக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
சீனா: ரயிலில் அடிபட்டு 11 பராமரிப்புப் பணியாளர்கள் உயிரிழப்பு
சீனாவின் தென் மேற்கு நகரமான குன்மிங்கில் வியாழக்கிழமை அதிகாலை ரயில் பாதையில் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் மீது சோதனை ரயில் ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
இம்ரான் கான் நலமாக உள்ளார்: சிறை அதிகாரிகள்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (73) அடியாலா சிறையில் நலமுடன் உள்ளதாக சிறைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர். சமூக ஊடகங்களில் அவரது உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும் அவர்கள் கூறினர்.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி
இபோ, நவ. 27: சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டி யில் இந்தியா 3-2 கோல் கணக்கில் நியூஸிலாந்தை வியாழக்கிழமை வென்றது.
1 min
November 28, 2025
Dinamani Dindigul & Theni
சீவா பிள்ளையல்ல... தமிழ்ப் பிள்ளை!
கடந்த நவ.
2 mins
November 27, 2025
Dinamani Dindigul & Theni
நாளை தொடங்குகிறது எஃப்ஐஎச் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை
சென்னை, நவ. 26: எஃப்ஐஎச் ஆட வர் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டி சென்னை, மதுரையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
1 min
November 27, 2025
Dinamani Dindigul & Theni
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார்
தமிழக மக்களுக்காக எதையும் செய்யத் தயார் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.
1 min
November 27, 2025
Translate
Change font size

