Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

அமெரிக்காவில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

Dinamani Dindigul & Theni

|

September 28, 2025

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் வரும் அக்டோபர் மூன்றாம் தேதி தொடங்கி மூன்று நாள்களுக்கு உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற இருக்கிறது. 'உலகத் தமிழர் பொருளாதார அமைப்பின்' சார்பில் நடத்தப்படவிருக்கும் பன்னிரண்டாவது பொருளாதார மாநாடு இது. இந்த மாநாட்டின் நோக்கம், ஆக்கம், தாக்கம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் உலகத் தமிழர் பொருளாதார கழகத்தின் தலைவரும், வழக்குரைஞருமான முனைவர் வி.ஆர்.எஸ். சம்பத் விரிவாகப் பேசினார். அதன் தொகுப்பு:

- -எஸ். சந்திர மௌலி

உலகத் தமிழர் பொருளாதார அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் நோக்கமே, இயற்கையாகவே தமிழர்களுக்கு தங்கள் வாழ்விலே செல்வச் செழிப்பை உருவாக்க வேண்டும். தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்கிற எண்ணம்தான். ஆனால், தங்களுடைய அந்த எண்ணத்தின் செயலாக்கம் மிகவும் குறைவு. இன்று, உலகம் முழுவதிலுமாக லட்சக் கணக்கான தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். அந்தத் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பல்வேறு அமைப்புகளை நடத்தி வருகிறார்கள். அந்தத் தமிழ் அமைப்புகளுடைய செயல்பாடுகளைக் கூர்ந்து கவனித்தால் நமக்கு ஒரு விஷயம் புலப்படும்.

தமிழ் அமைப்புகளின் செயல்பாடுகள் அனைத்துமே இலக்கியம் சார்ந்ததாகவோ, கலை சார்ந்ததாகவோ இருக்கும். அதாவது, பட்டிமன்றம், இலக்கியச் சொற்பொழிவுகள், நாடகம், நடனம், கர்நாடக இசை, சினிமா பிரபலங்கள் மற்றும் திரை இசை, சார்ந்ததாகவே இருக்கும். உலகத்தின் எந்த நாட்டுக்குப் போனாலும் இதைத்தான் நாம் பார்க்க முடியும். தமிழ் மொழியின் அடிப்படையில் அறிவு சார் மற்றும் வர்த்தகம், பொருளாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகள் கிடையாது.

சிந்தி இனத்தவரை எடுத்துக் கொள்ளுங்கள் ... அவர்களுக்கென்று இந்தியாவில் தனி மாநிலம் கிடையாது. ஆனால், அவர்கள் ஒருங்கிணைந்து 'சிந்தி வர்த்தகக் கழகம்' உருவாக்கி, வர்த்தக ரீதியாக உலகமெங்கும் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். குஜராத்திகளுக்கு ரத்தத்திலேயே வர்த்தகம் ஓடுகிறது. உலகத்தில் எங்கே சென்றாலும் அவர்கள் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள். பஞ்சாபியர்களும் அப்படித்தான். தொழில், வர்த்தகத் துறைகளில் மிகவும் வெற்றிகரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். ஆந்திராவினரும் அப்படியே! கேரளாவை எடுத்துக் கொண்டால், உலகமெங்கும் சென்று பல்வேறு துறைகளிலும் சிறப்பாகப் பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

வாஜ்பாய் அளித்த யோசனை

MÁS HISTORIAS DE Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி

இங்கிலாந்து கோல் மழை

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size