Facebook Pixel தேவை விழிப்புணர்வு...! | Dinamani Dindigul & Theni - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

தேவை விழிப்புணர்வு...!

Dinamani Dindigul & Theni

|

March 05, 2025

இணையவழி மோசடிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக உருவெடுத்து வருகின்றன.

குறிப்பாக, வங்கிகளின் பெயரில் நடைபெறும் ஆன்லைன் பண மோசடிகளால் பொதுமக்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

எண்ம பரிவர்த்தனை முறையால் வங்கிச் சேவைகள் எளிமையாகி விட்ட நிலையில், நாளுக்கு நாள் புதிது புதிதாக ஆன்லைன் மோசடிகள் நிகழ்ந்து வருகின்றன.

இணையம் மற்றும் கைப்பேசி செயலி பரிவர்த்தனை போன்றவற்றை வங்கிகள் ஊக்குவித்து வருகின்றன. பெரும்பாலான வங்கிகள் இந்த இணையவழி சார்ந்த தொழில்நுட்பங்களைக் கையாள வெளிப்பணி ஒப்படைப்பு மூலம் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. அந்த நிறுவனப் பணியாளர்கள் வங்கிகளின் கணினி தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும்போது, அவர்களில் சிலர் வாடிக்கையாளர்களின் விவரங்களை இணையவழி குற்றவாளிகளுக்கு விற்றுவிடுவதாக மத்திய இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.

வங்கிகளின் தரவுகளைப் பெறும் இணையக் குற்றவாளிகள், அந்த வங்கிகளின் சர்வர்களில் உள்நுழைந்து வாடிக்கையாளர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில், பண மோசடிகளில் ஈடுபடுகின்றனர். வங்கிகளின் சர்வர்களில் உள்நுழைந்து வாடிக்கையாளர்களின் விவரங்களைப் பார்வையிடும் இணையக் குற்றவாளிகள், தங்களுக்கு வாய்ப்பானவர்களுக்கு வலைவீசுகின்றனர். இதைத் தடுக்க பொதுத் துறை, தனியார் வங்கிகளின் நிர்வாகம் சார்ந்த உயர் அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது.

MÁS HISTORIAS DE Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ஸ்வீடனைப் பின்பற்றலாம் !

இந்தியாவில் சொந்தங்கள் விட்டுப் போகக்கூடாது, சொத்துகள் கைமாறி விடக் கூடாது போன்ற நோக்கங்களுடன் அத்தை, மாமா பிள்ளைகள் போன்ற உறவுகளுக்குள் திருமணம் செய்யும் வழக்கம் காலம் காலமாக இருந்து வருகிறது.

time to read

2 mins

June 27, 2026

Dinamani Dindigul & Theni

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

பி.ஆர்.பி. கிரானைட் நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இந்த நிறுவனத்துக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க வியாழக்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Dindigul & Theni

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை 308 கன அடியில் இருந்து 193 கன அடியாக குறைந்தது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு: 8 பேர் கைது

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் வங்கி ஊழியர்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். காணிக்கை எண்ணுதல் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களைக் கணக்கிடும் பணியில் தொடர்புடைய இவர்களிடம் இருந்து ரூ.79.85 லட்சம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

time to read

1 mins

June 27, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

விழிப்புணர்வு ஓட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்பு

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்

time to read

1 min

June 27, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

சறுக்கிய இந்தியா; சாதித்த அயர்லாந்து

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் அயர்லாந்து 34 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி கண்டது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dindigul & Theni

ஐரோப்பிய நாடுகளுக்கு 100% வரி

'அமெரிக்க நிறுவனங்களின் எண்ம சேவைகளுக்கு வரி விதிக்கும் நாடுகளின் இறக்குமதிப் பொருள்களுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும்' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dindigul & Theni

சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ் உட்பட 3 நிறுவனங்களின் ஐபிஓ

தமிழகத்தைச் சேர்ந்த பிரபல மின்னணு சாதன விற்பனை நிறுவனமான சத்யா ஏஜென்ஸீஸ், டோரண்ட் கேஸ், கனோகர் எலக்ட்ரிக்கல்ஸ் ஆகிய 3 நிறுவனங்கள் பொதுப் பங்கு வெளியீட்டுக்கு (ஐபிஓ) இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) ஒப்புதல் அளித்துள்ளது.

time to read

1 min

June 27, 2026

Dinamani Dindigul & Theni

தமிழ்நாடு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் நியமனம்

தமிழ்நாடு கிரிக்கெட் அணிகளுக்கு புதிய பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

time to read

1 min

June 26, 2026

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

பிரதமர் மோடியுடன் அமேசான் சிஇஓ சந்திப்பு: ரூ.1.22 லட்சம் கோடி கூடுதல் முதலீடு அறிவிப்பு

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமெரிக்காவின் அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) ஆண்டி ஜாசி, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

time to read

1 min

June 26, 2026

Translate

Share

-
+

Change font size