Facebook Pixel வாய்ப்பின் வாசலைத் திற! | Dinamani Dharmapuri - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

வாய்ப்பின் வாசலைத் திற!

Dinamani Dharmapuri

|

May 05, 2025

எந்த ஒரு வேலையையும் தெரிந்து வைத்திருந்தால், அது எத்தகைய நன்மை பயக்கும் என்பதை நம் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய ஓய்வு நேரத்தை அவர்கள் ஆக்கபூர்வமான கற்றலில் செலவு செய்ய வேண்டும்.

வீட்டில் ஒரு குழாய் அடைத்துக் கொண்டு, தண்ணீர் வரவில்லை. ஒரு மின்விசிறியை மாற்ற வேண்டும். ஆக மொத்தத்தில் அரை மணி நேர வேலை. வழக்கமாக ப்ளம்பிங், எலெக்ட்ரிகல் வேலை செய்யும் நபரை அழைத்தோம். அவர் வரவில்லை. மீண்டும் அழைத்தோம். பயனில்லை. ஆகவே அவரை விட்டுவிட்டு வேறு ஒரு புதியவரைத் தொடர்பு கொண்டோம். அவரோ, தான், சிறிய வேலைக்கெல்லாம் வர இயலாது என்று கூறிவிட்டார். பத்து நிமிஷம் வேலையாக இருந்தாலும், ஒருநாள் கூலி தர வேண்டும்' என்றார். வேலை இல்லாமல் சும்மா இருந்தாலும் பரவாயில்லை, ஆனால் சின்ன வேலையை ஒப்புக்கொள்ள மறுப்பது எந்தவிதத்தில் சரி என்று புரியவில்லை.

முன்பெல்லாம் ஒவ்வொரு பகுதியிலும் நிறைய குழாய் பணி தெரிந்தவர்களும், மின் நுட்பர்களும் இருப்பார்கள். நமக்கு அறிமுகமானவர்களே பல பேர் இருப்பார்கள். எந்த ஒரு சிறு வேலையாக இருந்தாலும் உடனே வந்து செய்து கொடுப்பார்கள். இப்போது அவ்வாறு தென்படுவதில்லை. அதற்கென உள்ள பெரிய பெரிய நிறுவனங்களை தொலைபேசியில் அழைத்தால், அவர்கள் அந்தந்த வேலைக்கு உரிய நபர்களை அனுப்புகிறார்கள்.

மின்னழுத்த ஏற்ற இறக்கம் காரணமாக மின் சாதனங்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. எப்பொருள் எப்போது சேதமடையும் என்று சொல்ல முடியவில்லை. அவ்வாறு பழுதடைந்து விட்டால், அவற்றைச் சரி செய்ய பழுது நீக்குபவர்களை அழைத்தால், அவர்கள் பழுது நீக்கி சரி செய்வதற்குப் பதில், புதியதை வாங்கிக்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்கள். பயன்படுத்திவிட்டு தூக்கிப் போடும் கலாசாரம் பெருகி வருகிறது. தேவையான உதிரி பாகங்களும் கிடைப்பதில்லை.

குழல் விளக்கு எரியாமல் போனால், நாமே கடைக்குப் போய் புதியதை வாங்கி வந்து மாட்டி விடுவோம். ஆனால் தற்போது எல்.இ.டி விளக்குகளை அவ்வாறு நம்மால் மாற்ற முடியாது. அது குறித்து தெரிந்தவர்களால் மட்டுமே முடியும். சாதாரண விளக்குகள் மற்றும் ஃப்ளோரசன்ட் விளக்குகளை விட எல்.இ.டி விளக்குகள் அதிக ஆற்றல், திறன் கொண்டவை, பல மடங்கு ஆயுள்காலம் கொண்டவை என்பதால் நாம் எல்.இ.டி விளக்குகளுக்கு மாறிவிட்டோம். ஆகவே, அடுத்தவர் தயவு தேவை.

MÁS HISTORIAS DE Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இந்தியாவின் எரிசக்தி தேவை அதிகரிப்பால் சர்வதேச சந்தைகளில் மாற்றம் ஏற்படும்

ரஷியா கணிப்பு

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

அறிமுகத்தில் அசத்தும் மனவ் சுதர்: இந்தியாவின் கட்டுப்பாட்டில் முலன்பூர் டெஸ்ட்

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 564 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் காலமானார்

தேசிய விருது வென்ற பிரபல மலையாள நடிகர் சலிம்குமார் (56) காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

கேரளம்: 'ஷிகெல்லா' தொற்றால் 4 வயது சிறுமி உயிரிழப்பு

அசுத்தமான குடிநீர் மற்றும் உணவு மூலம் பரவக் கூடிய 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டு, கேரளத்தில் 4 வயது சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து, மாநிலம் முழுவதும் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

மாற்றமே வெற்றிக்கான பயணம் !

நம்மைச் சுற்றி கணந்தோறும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நிச்சயம் நடக்கும் என்று எதிர்பார்த்து நாம் காத்திருந்த மாற்றங்களை விட, நாம் நினைத்தே பார்க்காத மாற்றங்களும், கற்பனையிலும் காண விரும்பாத மாற்றங்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

time to read

2 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

6 நிமிஷங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை

பெரு நகரங்களில் குறைந்த காத்திருப்பு நேரம்

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகப் பதிவு: குவைத் செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டு சிறை

ஈரானுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கருத்துப் பதிவிட்ட குவைத் அரசுத் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

மேட்டூரிலிருந்து ஜூன் 12-இல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு இல்லை

ஆகஸ்ட் இறுதியில் திறக்க வாய்ப்பு?

time to read

1 mins

June 08, 2026

Dinamani Dharmapuri

இறைச்சி, மீன்கடைகளை வாரணாசிக்கு வெளியே மாற்ற மாநகராட்சி ஒப்புதல்

உத்தர பிரதேச மாநிலம், வாரணாசி நகருக்கு உள்ளே அமைந்திருக்கும் அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளை புறநகர்ப் பகுதிகளுக்கு மாற்ற வாரணாசி மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

time to read

1 min

June 08, 2026

Dinamani Dharmapuri

ஸ்வெரெவுக்கு முதல் கிராண்ட்ஸ்லாம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ் ஞாயிற்றுக்கிழமை சாம்பியன் ஆனார். இறுதிச்சுற்றில், இத்தாலியின் ஃப்ளாவியோ கோபோலி வீழ்த்திய அவர், தனது நீண்டகால கனவான முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தைக் கைப்பற்றினார்.

time to read

1 min

June 08, 2026

Translate

Share

-
+

Change font size