Facebook Pixel இந்த வார விசேஷங்கள் | Dinakaran Delhi - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

இந்த வார விசேஷங்கள்

Dinakaran Delhi

|

July 05, 2025

5.7.2025 - சனி பெரியாழ்வார் திருநட்சத்திரம் பெரியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருவில்லிபுத்தூரில் ஆனி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக அவதரித்தவர் 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர்.

இந்த வார விசேஷங்கள்

திருவில்லிபுத்தூரில் கோயில் கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களைப் பறித்துப் பூமாலையாகச் சாற்றுவதைக் கைங்கர்யமாகக் கொண்டிருந்தார். ஆண்டாளின் வளர்ப்புத் தந்தை. ஆண்டாளைத் திருவரங்கம் அரங்கனுக்கு மணம் முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார்.

பாண்டியன் வல்லபதேவ பாண்டியனுக்கு எழுந்த ஐயம் தீர்க்கும் பொருட்டு மதுரையில் நடைபெற்ற சமய வாதத்தில் வென்ற பெரியாழ்வார், அரசனால் அளிக்கப்பட்ட பட்டத்து யானை மீது வரும்பொழுது திருமால் திருமகளோடு கருட வாகனத்தில் வானத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்குக் கண்ணேறு (கண் திருஷ்டி) விழுந்துவிடுமோ என்றஞ்சிப் பாடியதே திருப்பல்லாண்டு.

"எல்லோரையும் காப்பாற்றும் இறைவனை, ஒரு தாய் பாவனையில், தன் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமே என்று அஞ்சி, மங்கல வாழ்த்துப் பாடுவது போல் பொங்கும் பரிவு கொண்டு பல்லாண்டு பாடியதால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட "பெரியாழ்வார்" என அரங்கன் அழைக்க, பின்னர் இதுவே இவர் பெயராகிப் போனது. இன்றும் சாற்றுமறை எனும் வைணவ தினசரி வழிபாட்டின் தொடக்கத்திலும் முடிவிலும், வைணவக் கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டின்போதும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும்போதும், பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்ட பின்னரே சுவாமியைத் திருக்கோயிலுக்குள் எழுந்தருளச் செய்கின்றனர். இவ்வழக்கம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ராமானுசர் கொள்கைகளைப் பின்பற்றும் பிறபகுதி வைணவக் கோயில்களிலும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

வடமொழி வேதங்களுக்கு “ஓம்" ஆதாரமாக இருந்து தொடக்கமும் முடிவும் ஆவதுபோல் நாலாயிர திவ்யப் பிரபந்தத்திற்கு இந்தத் 'திருப்பல்லாண்டு' விளங்குகிறது. கண்ணனைப் பிள்ளையாகப் பாவித்து இவர் பாடிய பாடல்கள் பிற்காலத்தில் பிள்ளைத்தமிழ் என்னும் சிற்றிலக்கியம் தோன்ற முன்னோடியாக அமைந்தன.

MÁS HISTORIAS DE Dinakaran Delhi

Dinakaran Delhi

துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளருக்கு உரிய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது

உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

பறக்கும் படை வாகன சோதனையில் ரூ.30,000 லஞ்சம் வாங்கிய ஏட்டு, துணை தாசில்தார் சஸ்பெண்ட்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே அருந்தவபுலம் பகுதியில் கடந்த 22ம்தேதி பறக்கும் படை அலுவலர் ரமேஷ் மற்றும் தலைமை காவலர் வெங்கடேசன் உள்ளிட்ட பறக்கும்படை குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

39 சதவீத வாக்குகளுடன் தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி

புதிய கருத்துக்கணிப்பு வெளியீடு

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

இந்தியாவிடம் கோஹினூர் வைரத்தை ஒப்படைக்க வேண்டும்

இங்கிலாந்து மன்னர் சார்லசிடம் நியூயார்க் மேயர் வலியுறுத்தல்

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

எல்நினோ தன்மை உருவாக வாய்ப்புள்ளதால் இந்தாண்டு கோடைகாலம் செப்டம்பர் வரை நீடிக்கும்

ஈரப்பத வெப்ப அலையை எதிர்கொள்ள தயாராக வேண்டும் சுற்றுச்சூழல் - கால நிலை ஆய்வாளர்கள் கருத்து

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

மத்தியபிரதேசத்தில் சரக்கு வேன் கவிழ்ந்து 16 பேர் பலி

மத்தியபிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் கடந்த புதன் கிழமை (ஏப்.

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

தொழிலாளர்கள் போராடி பெற்ற உரிமைகளை ஒன்றிய அரசு ஒவ்வொன்றாக பறிக்கிறது

பொன்குமார் கடும் கண்டனம்

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகளுக்கு கூடுதலாக ரூ.10,000 கட்டணம்

விமான எரிபொருள் விலை உயர்வால் ஹஜ் பயணிகள் கூடுதலாக ரூ.

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

Dinakaran Delhi

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தி.மு.க வேட்பாளர்கள் சந்திப்பு

வெற்றிவாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்

time to read

1 min

May 01, 2026

Dinakaran Delhi

226க்கும் மேலான தொகுதிகளில் வெற்றி பெறுவோம்

மம்தா நம்பிக்கை

time to read

1 min

May 01, 2026

Translate

Share

-
+

Change font size