Facebook Pixel ‘வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்’ | DINACHEITHI - NELLAI - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

‘வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாத இருவர்...? தமிழகத்தை மேற்கோள் காட்டி மத்திய அரசு வாதம்’

DINACHEITHI - NELLAI

|

May 22, 2025

“வக்பு திருத்தச் சட்டத்தின்படி வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் இருவர் மட்டுமே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் எண்ணிக்கையில் சிறுபான்மையினராகவே இருப்பார்கள்” என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தனது வாதத்தில் தெரிவித்தார். அத்துடன், 'தமிழகத்தில் அர்ச்சகர்கள் மாநில அரசால் நியமிக்கப்படுகிறார்கள்' என்று அவர் தனது வாதத்தில் மேற்கோள் காட்டினார்.

வக்பு திருத்தச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு இடைக்கால தடை விதிப்பது தொடர்பான வாதம் உச்ச நீதிமன்றத்தில் இரண்டாவது நாளாக நேற்று (மே 21) நடைபெற்றது. தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தின்போது, “வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்திருப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. மாறாக, பொது நலனுக்காக தனிநபர்களால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 102 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு சட்டம் குறித்து எங்களுக்கு (அரசுக்கு) கவலை இருந்தது. அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில் நாங்கள் மிகவும் கவனமாக இருந்தோம். கூட்டு நாடாளுமன்றக் குழுவால் விரிவான செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. 25 வக்பு வாரியங்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதற்கு முன் இப்படி ஒரு விவாதம் நடந்ததே இல்லை எனும் அளவுக்கு விவாதங்கள் நடத்தப்பட்டு பிறகு நாடாளுமன்றம் மசோதாவை நிறைவேற்றியது. 2013 வரை, ஒரு முஸ்லிம் மட்டுமே வக்பு கொடுக்க முடியும். தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு யார் வேண்டுமானாலும் வக்பு உருவாக்கலாம் என்று திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதே நேரத்தில் எப்போதுமே ஒரு முஸ்லிம் மட்டுமே வக்பு கொடுக்க முடியும் என்று சட்டங்கள் கூறுகின்றன.

தற்போதைய சட்டம் வக்பு அல் - அவுலாதை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, வக்பு நிறுவனரின் குடும்பத்தைச் சேர்ந்த மகள்கள் உட்பட அனைத்து சந்ததியினரும் நிரந்தரமாக சொத்துகளை நிர்வகிக்க முடியும். இது ஒரு நல்ல விஷயம். தனி நபர்களுக்கும் வக்புகளுக்கும் இடையிலான எந்தவொரு தகராறும் தகுதிவாய்ந்த நடுவரால் தீர்ப்பளிக்கப்படும்" என தெரிவித்தார்.

அப்போது குறிக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "ஒரு குறிப்பிட்ட சொத்து அரசுக்கானதா, வக்புக்கானதா என்பதை முடிவு செய்யக் கூடியவராக உள்ள அதிகாரி ஓர் அரசு ஊழியர் என்பதை மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்" என்ற வாதத்தை முன்வைத்தார். இதற்கு பதில் அளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "அரசு நிலத்தின் மீது யாருக்கும் உரிமை இல்லை. முழு நாடும் நிலத்தின் உரிமையாளர். பொதுமக்களுக்காக அரசு நிலத்தை அறக்கட்டளையாக வைத்திருக்கிறது.

MÁS HISTORIAS DE DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் மரணம் : உடனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படும்

சினிமா இயக்குனர் - நடிகர் பாக்ய ராஜ் நேற்று காலை மறைந்தார். அவருக்கு வயது 73 நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

time to read

1 min

June 28, 2026

DINACHEITHI - NELLAI

புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு

மத்திய மந்திரிசபை இன்று மாற்றம் ? செய்யப்பட இருப்பதாக தெரிய வருகிறது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு பதவி கிடைக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய நிதி மந்திரியாக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

time to read

1 mins

June 28, 2026

DINACHEITHI - NELLAI

உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - NELLAI

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

29, 30-ந் தேதி நடக்கிறது

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - NELLAI

தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - NELLAI

பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல

பாஸ்போர்ட் , குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 26, 2026

DINACHEITHI - NELLAI

வேளச்சேரி செல்லும் சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது வீரமரணமடைந்த மேஜர் முகுந்த வரதராஜன் அவர்களின் தியாகத்தைப் போற்றுகின்ற வகையில், தாம்பரம் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட தாம்பரம் இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி வரையிலான சாலைக்கு \"மேஜர் முகுந்த வரதராஜன் சாலை\" எனப் பெயர் சூட்டி உத்தரவிட்டுள்ளார்கள்.

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - NELLAI

உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்

முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - NELLAI

தமிழ் நாட்டில் மின் வெட்டை தவிர்க்க வேண்டும்

சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேச்சு

time to read

1 min

June 23, 2026

DINACHEITHI - NELLAI

60 ஆண்டுகால உறவு முறிந்தது

தி.மு.க. கூட்டணியில் இருந்து இந்திய யூனியன் மு.லீக். நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியேறியது. இரு கட்சிகள் இடையேயான 60 ஆண்டுகால உறவு முறிந்தது.

time to read

1 min

June 21, 2026

Translate

Share

-
+

Change font size