Intentar ORO - Gratis
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றம்
DINACHEITHI - MADURAI
|September 05, 2025
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று தமிழ்நாடு ரைசிங் ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டத்தில், இங்கிலாந்து நாட்டின், இலண்டன் நகரில் உள்ள வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தில், இங்கிலாந்து அமைச்சர், நாடாளுமன்ற துணை செயலாளர் (இந்தோ-பசிபிக்) கேத்தரின் வெஸ்ட் அவர்களை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாடு- இங்கிலாந்து ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்தார். இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பு. உமாநாத், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மருத்துவர் தாரேஸ் அகமது, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
-
ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் மாற்றங்கள் நேற்று அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் படி இன்சூரன்சு மாத தவணைத்தொகை குறைகிறது. சிகரெட்டுக்கு 40 சதவீதவரி விதிக்கப்பட்டுள்ளது. பால், வெண்ணை விலை குறைகிறது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 56-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்றது. இதில், அனைத்து மாநிலங்களின் நிதி மந்திரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார். ஜி.எஸ். டி.யை 5 சதவீதம், 18 சதவீதம் என 2 அடுக்குகளாக குறைப்பது பற்றியும், வரிகுறைப்பு பற்றியும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
முன்னதாக இந்தியா முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை உறுதி செய்யும் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த 2017ம் ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமலுக்கு வந்தது. கலால் வரி, வாட், சேவை வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஜி.எஸ். டி. என்ற ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன. நாட்டின் மறைமுக வரி அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்த இந்த ஜி.எஸ்.டி. 4 அடுக்குகளை கொண்டிருந்தது. அதன்படி 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 வகையான வரி விகிதத்தின் கீழ் அனைத்துப்பொருட்கள் மற்றும் சேவைகள் ஒருங்கிணைக்கப்பட்டன. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்து 8 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இந்த ஜி.எஸ்.டி. விகிதங்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.
Esta historia es de la edición September 05, 2025 de DINACHEITHI - MADURAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - MADURAI
DINACHEITHI - MADURAI
ஒரே சமயத்தில் இரு காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து மோன்தா புயலாக மாறியது. இது திங்கட்கிழமை ஆந்திராவில் கரையை கடந்தது.
1 min
November 01, 2025
DINACHEITHI - MADURAI
16 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆன செஸ் வீரர் இளம்பரிதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
சென்னையைச் சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் ஏ.ஆர். இளம்பரிதி. இவர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபன் செஸ் தொடரில் விளையாடினார். இந்த போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றார்.
1 min
November 01, 2025
DINACHEITHI - MADURAI
சென்னை மறைமலை நகரில் ரூ. 3,250 கோடி முதலீட்டில் புதிய வாகன என்ஜின் தொழிற்சாலை
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது
1 mins
November 01, 2025
DINACHEITHI - MADURAI
போர்டு நிறுவனம்: தங்கள் மீள்வரவு நல்வரவாகட்டும் - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இணைய பதிவு
முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். உலகில் போர், பொருளாதார நெருக்கடிகள் என எண்ணற்ற அரசியல் நிலையற்ற சூழல்கள் நிலவி வந்தாலும், முதலமைச்சரின் அமெரிக்க பயணம் போர்டு தொழிற்சாலையை மீண்டும் தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறது. இந்த உலகளாவிய நிறுவனத்தின் மூலம் கூடுதல் முதலீடுகளும், வேலைவாய்ப்பும் கிடைக்க இருக்கிறது என அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியுள்ளார். இந்தநிலையில், முழு ஆற்றலுடன் சென்னைக்கு மீண்டும் வருகிறது போர்டு நிறுவனம் என முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில், ஃபோர்டு நிறுவனம் 3,250 கோடி ரூபாய் முதலீட்டில் அடுத்த தலைமுறை வாகன இஞ்சின் உற்பத்தி அலகைத் தனது மறைமலை நகர் தொழிற்சாலையில் அமைக்கவுள்ளது. மிக நீண்ட, நம்பிக்கை கொண்ட உறவினைப் புதுப்பிக்கும் வகையில் இந்த ஆற்றல்மிகு மீள்வருகை அமைந்துள்ளது. இந்த முக்கிய முதலீட்டினால் 600 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் உதிரி பாகச் சூழலும் வலுவடையும்.
1 min
November 01, 2025
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடிக்கு, முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம்
\"பொறுப்பான பதவிக்குரிய மாண்பை இழந்து விட வேண்டாம். தமிழர்கள் மீதான வன்மத்தை அரசியலுக்கு பயன் படுத்தாதீர்கள்\" என பிரதமர் மோடிக்கு , முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min
November 01, 2025
DINACHEITHI - MADURAI
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன் கிராமத்தில் தெய்வீக திருமகனார் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகளுடன் ஆன்மிக விழாவாக தொடங்கியது. அதனை தொடர்ந்து நேற்று அரசியல் விழாவாக நடந்தது.
1 mins
October 31, 2025
DINACHEITHI - MADURAI
மதுரையில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து உரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட சி.பி. ராதாகிருஷ்ணன் 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். கோவை, திருப்பூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர் முதன்முறையாகநேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார்.
1 min
October 31, 2025
DINACHEITHI - MADURAI
கண்ணியம், ஒற்றுமை, சுயமரியாதையின் பக்கம் உறுதியாக நின்றவர் முத்துராமலிங்கத்தேவர்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
October 31, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. கடும் எதிர்ப்பு
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
1 min
October 30, 2025
DINACHEITHI - MADURAI
தேர்தல் ஆணையம் முக்கிய ஆலோசனை
வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தொடர்பாக
1 min
October 30, 2025
Translate
Change font size
