Intentar ORO - Gratis
ரூ.52 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்
DINACHEITHI - KOVAI
|July 04, 2025
சென்னை ஜூலை 4தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(3.7.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு,சாஸ்திரி நகரில்நடைபெற்றநிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ளமாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.
-
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் "மக்களைத் தேடி மருத்துவம்" சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் "இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்- 48" போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 7.5.2022 அன்று சட்டப்பேரவை விதி எண் 110 கீழ், தமிழ்நாடு மக்களின் சுகாதாரத் தேவைகளை மென்மேலும் மேம்படுத்திடும் விதத்தில் தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப் போல, நகர்ப்புறங்களில் மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது மருத்துவமனைகளில் கூட்டம் அதிகமாகி வருகிறது. இந்நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவ சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் 177 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அதன் படி முதல்கட்டமாக, பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் 125 கோடி ரூபாய் செலவில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு 6.6.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, சிறப்பான முறையில் இயங்கி வருகின்றன. அதன் இரண்டாம் கட்டமாக, 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தலா 25 இலட்சம் ரூபாய் செலவில் புதியதாக அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டன. மேலும், அடையாறு, சாஸ்திரி நகரில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை பார்வையிட்டார்.
Esta historia es de la edición July 04, 2025 de DINACHEITHI - KOVAI.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE DINACHEITHI - KOVAI
DINACHEITHI - KOVAI
நடக்க இருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வோம்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி
1 mins
February 22, 2026
DINACHEITHI - KOVAI
தொகுதி பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இன்று பேச்சுவார்த்தை
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
February 22, 2026
DINACHEITHI - KOVAI
டெல்லி செங்கோட்டை, முக்கிய கோவில்களுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்
உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு
1 min
February 22, 2026
DINACHEITHI - KOVAI
இந்தியா-பிரேசில் வர்த்தகத்தை 5 ஆண்டுகளில் ரூ.1.81 லட்சம் கோடிக்கு மேல் உயர்த்த இலக்கு நிர்ணயம்
டெல்லியில் நேற்று பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வாவுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
February 22, 2026
DINACHEITHI - KOVAI
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார், ஓ. பன்னீர் செல்வம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்.
1 min
February 21, 2026
DINACHEITHI - KOVAI
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலு இழந்தது
வானிலை ஆய்வு மையம் தகவல்
1 min
February 21, 2026
DINACHEITHI - KOVAI
முதல்வர் மு.க. ஸ்டாலின் . தோழமை கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
மதுரையில் இன்று தென்மண்டல தி.மு.க. தேர்தல் முகவர்கள் மாநாடு
1 mins
February 21, 2026
DINACHEITHI - KOVAI
சட்டசபை தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையர் அடுத்த வாரம் தமிழகம் வருகை
தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில சட்டசபைகளின் 5 ஆண்டுகால பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது.
1 min
February 21, 2026
DINACHEITHI - KOVAI
இலங்கையில் தவிக்கும் தமிழக மீனவர்கள் நாடு திரும்ப தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
1 min
February 20, 2026
DINACHEITHI - KOVAI
தமிழ்நாடு சட்டசபைக்கு ஏப்ரல் மாதம் தேர்தல்: இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாகிறது
1 mins
February 17, 2026
Translate
Change font size
