Intentar ORO - Gratis

ஏ.டி.ஜி.பி. ஜெயராமுடன் பெண்ணின் தந்தைக்கு என்ன தொடர்பு?

DINACHEITHI - KOVAI

|

June 18, 2025

தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்தவர் வனராஜ். இவரது மகள் விஜயஸ்ரீ (வயது 21). இவரும் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அடுத்துள்ளதனுஷ் (24) என்பவரும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளனர். இருவரும்வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்கள் காதலுக்கு விஜயஸ்ரீயின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் விஜயஸ்ரீ வீட்டை விட்டு வெளியேறி தனுசை திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து வனராஜ் தனது மகளை மீட்டுத் தரும்படி மதுரையைச் சேர்ந்த சப்- இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி என்பவரை அணுகினார். அவர் மூலமாக கே.வி. குப்பம் எம். எல்.ஏ. ஜெகன்மூர்த்தி உதவியை நாடியதாக தெரிகிறது.

பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ஒருவர் காரில் தனுசின் தம்பியான 17 வயது சிறுவன் கடத்தப்பட்டு மீண்டும் பின்னர் அவர் வீட்டின் அருகே விடப்பட்டார். இச்சம்வம் தமிழகம் முழுவதும் பெரும் பரபர ப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ.டி.ஜி.பி. ஜெயராம் கைது செய்யப்பட்டார்.

வழக்கில் ஆஜரான பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ.வுக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதி கண்டனம் தெரிவித்ததோடு விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு உத்தரவிட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் விராலிப்பட்டி, ராமநாயக்கன்பட்டியை இவர் தென்னந்தோப்புகளை குத்தகைக்கு எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதால் கடமலைக்குண்டு அருகே உள்ள செங்குளத்தில் தேங்காய் குடோன் வைத்து தனது தொழிலை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தினார்.

மதுரையைச் சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் தொண்டு நிறுவனத்தில் இயக்குனராக பணிபுரிந்து வந்தார். வருசநாடு பகுதியில் உள்ள பழங்குடியினருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தபோது வனராஜூடன் பழக்கம் ஏற்பட்டது. மகேஸ்வரி சப்- இன்ஸ்பெக்டராக கடந்த 1990ம் ஆண்டு பணியில் சேர்ந்தார். அவர் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் 2 ஆண்டுகளில் அவர் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டார்.

பரபரப்பு தகவல்கள்

பின்னர் கொடைக்கானலில் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவர் வங்கிகள், வெளிநாடுகளில் இருந்து கடன் வாங்கி தருவதாக கூறி பலரையும் ஏமாற்றி வந்ததாக புகார் எழுந்தது. தன்னை ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர் என அறிமுகம் செய்து கொண்டு கருங்காலி மாலைகளையும் விற்பனை செய்து வந்துள்ளார்.

MÁS HISTORIAS DE DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

முதல் கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் 1-ந் தேதி தொடக்கம்

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது.

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - KOVAI

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 4,079 வாக்குச்சாவடி மையங்களிலும், 10, 11-ந் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்கிறது

வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம்

time to read

1 min

January 09, 2026

DINACHEITHI - KOVAI

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு: முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்

ரொக்கப்பரிசுடன் பொங்கல் தொகுப்பு வழங்குவதை, முதலமைச்சர் ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

சூடு பிடிக்கும் தேர்தல் களம்: ஜன.28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?

தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.

time to read

1 min

January 08, 2026

DINACHEITHI - KOVAI

உங்க கனவை சொல்லுங்கள் திட்டம் ஜன. 9-ந் தேதி தொடக்கம்

அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - KOVAI

ரூ.3 ஆயிரத்துடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் பணி

முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 07, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வங்கக் கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்தம்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது.

time to read

1 min

January 06, 2026

DINACHEITHI - KOVAI

தமிழக மாணவர்களுக்கு 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டம்

இன்று முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

time to read

1 min

January 05, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

வெனிசுலா மீது தாக்குதல் : அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டனர்

டிரம்ப் அதிரடி அறிவிப்பு

time to read

1 min

January 04, 2026

DINACHEITHI - KOVAI

DINACHEITHI - KOVAI

தமிழ் நாட்டில் திமுக ஆட்சி தொடரும் : மு.க. ஸ்டாலின் முதல்வராக நீடிப்பார்

லயோலா கருத்துக்கணிப்பில் தகவல்

time to read

1 mins

January 04, 2026

Translate

Share

-
+

Change font size