Facebook Pixel கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி | DINACHEITHI - CHENNAI - newspaper - Lee esta historia en Magzter.com

Intentar ORO - Gratis

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

DINACHEITHI - CHENNAI

|

September 29, 2025

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் பலியாகி இருக்கிறார்கள். உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தமிழக அரசிடம் கவர்னர் ஆர்.என். ரவி அறிக்கை கேட்டுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் பலி: உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

காயம் அடைந்து மருத்துவ மனையில் சிகிச்சை பெறுவோரை பார்த்து மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 39 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த துயரமான சம்பவத்தால், கரூர் மாவட்டம் முழுவதும் இன்று துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கரூரில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.

கரூர் எம்.பி. ஜோதிமணி, செய்தியாளர்களிடம் பேசியதாவது;-

"கரூரில் நிகழ்ந்திருப்பது வார்த்தைகளால் சொல்ல முடியாத, நெஞ்சு வெடிக்கக் கூடிய துயரமான சம்பவம். தொக்குப்பட்டி, பசுபதிபாளையம், ஏமூர், காந்திகிராமம் என பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு என்ன ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. கரூர் மிகவும் அமைதியான ஊர். இது போன்ற அமைதியான ஊரை பார்க்கவே முடியாது. நான் இந்த ஊரில் பிறந்து வளர்ந்திருக்கிறேன். இங்கு இப்படி ஒரு துயரத்தை பார்த்ததே இல்லை. காரணத்தைப்பற்றியோசிக்கும் மனநிலையில் நான் இப்போது இல்லை. சனிக்கிழமை என்பது சம்பளம் போடும் நாள். கரூரில் சனிக்கிழமை என்பது பரபரப்பான நாளாக இருக்கும்.

கூட்டம் நடத்துவதற்கு நகருக்கு உள்ளேயே இடம் வேண்டும் என்று கேட்டார்கள். முதலில் உழவர் சந்தையை கேட்டார்கள். ஆனால் காவல் துறையினர் கூட்ட நெரிசலை கணித்துதான் இந்த இடத்தை கொடுத்திருக்கிறார்கள். நம் மக்களுக்கு நடந்தது இனிமேல் தமிழகத்தில் யாருக்கும் நடக்கக் கூடாது." இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கரூர் தவெக பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன.

MÁS HISTORIAS DE DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை , சென்னையில், உறுதிமொழியை வாசித்து முதல்வர் விஜய் நேற்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பேரணி நடைபெற்றது.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - CHENNAI

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் கலெக்டர்கள், போலீஸ் அதிகாரிகள் மாநாடு

29, 30-ந் தேதி நடக்கிறது

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - CHENNAI

போதைப்பொருளை ஒழிக்கும் பணியில் சிறப்பாக செயல்பட்ட 15 போலீசாருக்கு முதல் அமைச்சர் பதக்கம்

2026 ஆம் ஆண்டின் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி (26.06.2026), காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்த ஆணை.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - CHENNAI

தூய்மைப் பணிகளைத் தனியார் மயமாக்கும் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகளில் தூய்மை பணிகளை தனியார் மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட்டது.

time to read

1 min

June 27, 2026

DINACHEITHI - CHENNAI

பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் விஜய் கடிதம்

\"நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யக்கூடாது., விற்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்\" என பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருக்கிறார்.

time to read

1 mins

June 26, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

இந்த ஆண்டு மின் கட்டண உயர்வு இல்லை வெள்ளை அறிக்கையை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டார்

மின் வாரியத்தின் நிதி, செலவினங்கள் குறித்த வெள்ளை அறிக்கையை மின்வாரிய தலைமையகத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் நேற்று வெளியிட்டுள்ளார்.

time to read

1 min

June 26, 2026

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

127.21 கோடி மதிப்பிலான 300 அரசு பேருந்துகளை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்

பொதுப் போக்குவரத்தை கணிசமாக மேம்படுத்தும் வகையில், 127.21 கோடி ரூபாய் மதிப்பிலான 300 புதிய அரசுப் பேருந்துகளைத் தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று தொடங்கி வைத்தார்.

time to read

1 min

June 26, 2026

DINACHEITHI - CHENNAI

பாஸ்போர்ட் குடியுரிமைக்கான ஆதாரம் அல்ல

பாஸ்போர்ட் , குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 26, 2026

DINACHEITHI - CHENNAI

உதவிப் பொறியாளர்கள் உள்பட 401 பேருக்கு பணி நியமன ஆணைகள்

முதலமைச்சர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 25, 2026

DINACHEITHI - CHENNAI

எல்நினோ அபாயம்: தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்படும்?

எல்-நினோ தாக்கத்தால் தமிழகம் உட்பட 27 மாநிலங்களில் உள்ள 226 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 25, 2026

Translate

Share

-
+

Change font size