Vuélvete ilimitado con Magzter GOLD

Vuélvete ilimitado con Magzter GOLD

Obtenga acceso ilimitado a más de 9000 revistas, periódicos e historias Premium por solo

$149.99
 
$74.99/Año

Intentar ORO - Gratis

திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறையில் இந்திய அளவில் புதிய சாதனைகள்

DINACHEITHI - CHENNAI

|

May 31, 2025

மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலுடன்; உதயநிதி ஸ்டாலினின்முன்னெடுப்புகளால் திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறையில் இந்திய அளவில்பல புதியசாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது என தமிழக அரசு அறிக்கையில்தெரிவித்துஉள்ளது.

திராவிட மாடல் அரசின் விளையாட்டு மேம்பாட்டு துறையில் இந்திய அளவில் புதிய சாதனைகள்

இது குறித்த தமிழக அரசின் அறிக்கை வருமாறு :- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இளைஞர்களை ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுத்திடவும், சிதறிக் கிடக்கும் அவர்கள் ஆற்றலைத் திரட்டிடவும், அவர்களை மன உறுதி படைத்தவர்களாகவும், எதிர்கால வாழ்வை நம்பிக்கையோடு எதிர்கொள்பவர்களாகவும் உருவாக்கும் பெரும் பொறுப்பை நிறைவேற்றும் பொருட்டு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சிறப்பான பணிகளுக்கு ஊக்கமளித்து வருகிறார்கள்.

அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இளைஞர் நலனிலும், விளையாட்டுக் கலை வளர்ச்சியிலும் சிறப்புக் கவனம் செலுத்தி; பல்வேறு புதிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றின் பயனாக இந்திய அளவில் தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டுத் துறை பல சாதனைகளை நிகழ்த்தி; இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் சென்னை எனப் புகழ் வளர்த்து வருகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் விளையாட்டு மேம்பாட்டுத்துறை நிகழ்த்தியுள்ள முக்கிய சாதனைகள் விவரம்:

திராவிட மாடல் அரசு நடத்திய முக்கிய விளையாட்டுப் போட்டிகள்

44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய திட்டமிடல் காரணமாக, இந்திய வரலாற்றில் முதன்முறையாகவும் தமிழ்நாடு அரசும் இந்திய சதுரங்கக் கூட்டமைப்பும் இணைந்து ஏறத்தாழ 114 கோடி ரூபாய்ச் செலவில் மாமல்லபுரத்தில் உலகப் புகழ் பெற்ற 44-வது செஸ் ஒலிம்யாட் போட்டி திராவிட மாடல் அரசினால் நடத்தப்பட்டது. உலக நாடுகள் எல்லாம் வியக்கும் வண்ணம் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 வரை ஒரு பண்பாட்டுத் திருவிழாவாக செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. உலகின் 186 நாடுகளைச் சார்ந்த 1654 சதுரங்க விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். அவர்கள் வேறு எந்த நாட்டிலும் காணாத வகையில், தமிழ்நாட்டரசின் விருந்தோம்பலைக் கண்டு வியந்து மகிழ்ந்து போற்றிய வரலாறு நிகழ்ந்தது.

அதன் பயனாக, சென்னை இனி உலகின் முன்னணி விளையாட்டு நகரம் எனப் புகழ்க் கொடி நாட்டிடத் தொடங்கியது. ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஆசிய செஸ் கூட்டமைப்பின் சார்பில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு " Man of the Year" என்கின்ற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

சென்னை ஃபார்முலா- 4 கார் பந்தயம் 2024

MÁS HISTORIAS DE DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சென்னையில் இருந்து 170 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த போது ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல், நேற்று காலை சென்னைக்கு தென்கிழக்கே 150 கி.மீ தொலைவில் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

பூர்த்தி செய்த எஸ்.ஐ.ஆர். படிவங்கள் வழங்குவதற்கான கால அவகாசம் டிச.11-ந்தேதி வரை நீடிப்பு

“16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும்” என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளது

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

சிவகங்கை அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து- 11 பேர் உயிரிழப்பு

காயம் அடைந்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி

time to read

1 min

December 01, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

சென்னையை நெருங்கியது டிட்வா புயல்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா புயல் வடக்கு- வடமேற்கு திசையில் மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. வடக்கு - வடமேற்கில் நகர்ந்து 30-ந்தேதி வட தமிழ்நாடு, புதுவை, ஆந்திர கடற்கரைகளுக்கு அருகே தென்மேற்கு வங்கக்கடலை வந்தடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 30, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

டிசம்பர் மாதத்தில் 3 மெகா திட்டங்கள்- தமிழக அரசு அறிவிக்கிறது

தமிழகத்தில் அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான அறிவிப்பு பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் மாதம் தொடக்கத்தில் வெளிவர வாய்ப்பு இருக்கிறது. தேர்தல் அறிவிப்பு வந்துவிட்டால், தமிழக அரசால் புதிய திட்டப்பணிகளை அறிவித்து செயல்படுத்த முடியாது. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதிதாக செயல்படுத்த வேண்டிய திட்டங்களை விரைவில் தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளை தொடங்கி உள்ளார். தற்போதைய நிலையில் அடுத்த மாதம் (டிசம்பர்) மாதம் 3 மெகா திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

time to read

1 mins

November 30, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழகத்திற்கு மேலும் 10 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைப்பு

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்திற்கு கூடுதல் தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் வரவழைக்கப்பட்ட உள்ளதாக துணை கமாண்டர் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

November 30, 2025

DINACHEITHI - CHENNAI

சென்னையை நோக்கி ‘டித்வா' புயல் நகருகிறது

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது

time to read

2 mins

November 29, 2025

DINACHEITHI - CHENNAI

புயலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்

மு.க.ஸ்டாலின் பேட்டி

time to read

1 min

November 29, 2025

DINACHEITHI - CHENNAI

DINACHEITHI - CHENNAI

தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும்

சென்னையை நோக்கி “டித்வா\" புயல் நகருகிறது. இந்த நிலையில் 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரியில் பலத்த மழை பெய்யும். மழையால் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

November 29, 2025

Translate

Share

-
+

Change font size