Versuchen GOLD - Frei
பவள விழா காணும் பாரதத்தின் கம்பீரம்
Virakesari Daily
|September 17, 2025
உலக வல்லரசான அமெரிக்காவின் வரி மிரட்டலுக்கு அனைத்து நாடுகளும் அஞ்சிநிற்கின்ற போது... அதனை கண்டுகொள்ளாமல் ரஷ்யா, சீனா இந்தியா என வேறு திசையில் அமெரிக்காவுக்கு இணையாக காய் நகர்த்தி அமெரிக்க ஜனாதிபதியையே மிரள வைத்துள்ளார் ஒரு தேநீர் வியாபாரியின் மகன்.
ஏழ்மை நிறைந்த இந்தியாவில் ஏழை தாய்க்கு பிறந்து ஒருகாலத்தில் ரயில் நிலையத்தில் தேநீர் விற்றுக்கொண்டிருந்த சிறுவன் அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் நிகராய் நின்று ஏழைகள் நிறைந்த நாடு என்ற நிலையை மாற்றி இந்தியாவை வல்லரசு இந்தியாவாக மாற்ற முயற்சிப்பான் என்று யார் நினைத்திருக்கக் கூடும். பல தசாப்தங்களாக தொட முடியாமல் வன்முறைகள் நிறைந்து இருந்த ராம ஜென்ம பூமியான அயோத்தியில் இராமனுக்கு ஆலயம் அமைத்து பட்டாபிஷேகம் நடத்தப்போவது இவர்தான் என யாரும் நினைத்திருக்கமாட்டார்கள். தனது மகள்களின் குங்குமத்தை அழித்தவர்களுக்கு குங்குமம் எனும் பெயராலேயே செந்தூர் என தீவிரவாதிகளுக்கு எல்லைதாண்டி பதிலடி கொடுப்பார் என்றும் இராஜ ராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் விழா எடுத்து சிலை வடிக்கப் போவது இவர் என்றும் யார் அறிந்திருப்பர்.
இந்தியாவில் நீண்ட காலம் பதவியில் இருக்கும் இரண்டாவது பிரதமர் என்ற பெருமையும் இந்தியாவில் மிக நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்த காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையும் இந்த தேநீர் விற்கும் சிறுவன் அடைவான் என அந்த சிறுவனே அறிந்திருக்கமாட்டான். ஆனால் ஏழை தாயின் மகன் தனது கடின உழைப்பினால் பாரதத்தின் தன்னிகரில்லா பிரதமராக உருவெடுத்து இந்தியாவை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்றுகொண்டிருக்கின்றார். அவர்தான் இன்றைய பாரத பிரதமர் நரேந்திர மோடி.
முன்பெல்லாம் இந்திய பிரதமரா ..? என்று சில பிரதமர்களை இந்தியாவிலேயே சிலர் கேலி செய்த சம்பவங்கள் உள்ளன. ஆனால் மோடி உலகளவில் சக்தி மிக்க தலைவராக பார்க்கப்படுகின்றார். உலகின் மிக சக்தி மிக்க 10 மனிதர்களின் பட்டியலிலும் மோடி இடம் பெற்றுள்ளார்.
இந்தியா இவரது ஆட்சியில் சக்தி மிக்க நாடாக மாறியுள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் என அனைத்து நாடுகளும் மோடியின் நட்பை பாராட்டுகின்றன.
குஜராத்தில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, பா.ஜ.க.வில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து, தற்போது இந்தியாவின் பிரதமராக பதவியில் இருக்கின்றார்.
Diese Geschichte stammt aus der September 17, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
