Versuchen GOLD - Frei
அரசியல் சர்ச்சையின் இடையில் மலையக மக்களின் உரிமைகள்
Virakesari Daily
|September 16, 2025
மலையகப் பிராந்தியம் (Hill Country / Upcountry) இந்தியாவிலிருந்து பெருந்தோட்ட வேலைகளுக்காக 1823ஆம் ஆண்டில் தமிழ் மக்கள் வரவழைக்கப்பட்டதன் மூலம் உருவானது. இந்த வரலாறு "மலையகம் 200" என்ற நிகழ்வால் அடையாளம் காணப்படுகிறது. பெரும்பாலான இந்த மக்கள் இன்று பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்பு (line room) முறையில் வசித்து வருகின்றனர்.
-
பெரும்பாலும் பெருந்தோட்டங்களில் வாழும் மக்கள், லயன் குடியிருப்பு முறையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்வது மட்டுமன்றி, கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற அடிப்படை வசதிகளும் குறைவாகவே காணப்படுகின்றன. இதனால் சமூகப் பொருளாதாரம் பின்தங்கிய நிலை (socioeconomic backwardness) தொடர்கிறது.
மலையகத்தின் இன்றைய நிலை, அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், செல்ல வேண்டிய தூரம் போன்றவற்றைப் பற்றி பல அமைப்புகள் ஆராய்ந்து விவாதித்து வருகின்றன.
இந்தக் குறைபாடுகள் மற்றும் பின்தங்கிய நிலையை தீர்க்க பெருந்தோட்ட பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டம் - 2018 (New Villages Development Authority Act, No.36 of 2018) ஸ்தாபிக்கப்பட்டது.
அரசாங்க நடவடிக்கைகள்: புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை (2018)
பெருந்தோட்டங்களில் வாழும் மலையக மக்கள், நீண்டகாலமாக வறுமை, சமூக - அரசியல் பின்தங்கல் மற்றும் அடிப்படை வசதிகள் குறைவு போன்ற சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் இந்த நாட்டின் சம உரிமையுள்ள பிரஜைகள் ஆக மாற்றப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம்.
பழனி திகாம்பரம் அமைச்சராக இருந்த போது, 2018 ஆம் ஆண்டின் இறுதிக் காலப்பகுதியில், மலையக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும், அவர்களின் சமூகப் பொருளாதாரப் பின்தங்கிய நிலையின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபை உருவாக்கப்பட்டது.
அந்தரத்தில் உள்ளதா அதிகாரசபை ?
பல ஆட்சிகளின் பிடியிலிருந்து தப்பி சபையின் பணிகளை பெருந்தோட்ட அமைச்சிடம் ஒப்படைத்து, அதிகார சபையை மூடிவிடவேண்டும் என்ற பரிந்துரை அமைச்சரவை மூலம் ஒப்புதல் பெற்றுள்ளது. இதற்கான காரணமாக, அதிகார சபையின் செயற்பாடுகள், திட்ட முன்னேற்றங்கள் மற்றும் நிர்வாக திறன் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததும், பிரதமரால் உயர்மட்ட நிர்வாக உத்தியோகத்தர்களைக் கொண்ட குழு டிசம்பர் 2024 இல் நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பெப்ரவரி 2025 அன்று அளித்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு அதிகார சபையை மூடுவதை சிபாரிசு செய்தது.
Diese Geschichte stammt aus der September 16, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

