Versuchen GOLD - Frei
பொருளாதாரத்தை பாதுகாக்க வரிச்சலுகை அவசியமென்பதை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி
Virakesari Daily
|September 15, 2025
அரசாங்கத்தின் தேசிய கொள்கைக் கட்டமைப்பானது, 'வளரும் தேசம் அழகான வாழ்க்கை' என்ற தொனிப்பொருளின் கீழ் வலுவான உற்பத்திப் பொருளாதாரத்தை முன்னெடுத்து நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை அடைவதற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதனடிப்படையில் இலங்கை அரசாங்கம் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுவர சில இறுக்கமான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தமையின் விளைவாக தற்போது பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி வேகமாக முன்னேறிவரும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்ற பட்டியலுக்குள் இலங்கை இடம்பிடித்துக் கொண்டுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட கொவிட் - 19 தொற்று மற்றும் அதனோடிணைந்த பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் இலங்கை இனியும் இல்லையென்றளவு பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவைச் சந்தித்தது. அபிவிருத்தியடைந்து வரும் நாடென்ற நிலையிலிருந்த இலங்கை மீண்டும் வங்குரோத்து நிலைக்குச் செல்ல வேண்டியேற்பட்டது. இந்நிலையில் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற உலக நாடுகளின் தயவால் ஓரளவு பெருமூச்சுவிடக்கூடிய வாய்ப்பு இலங்கைக்குக் கிட்டியது. இதையடுத்து இலங்கை மீண்டும் அபிவிருத்தியடைந்து வரும் நாடென்ற பட்டியலுக்குள் பிரவேசித்து பொருளாதார மீட்சிக்கான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகிறது.
இலங்கையில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் நாட்டைத் தற்போது பொறுப்பேற்ற கையோடு பொருளாதார முன்னேற்றம் தொடர்பான காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றது. அதன் முக்கிய இலக்காக இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி காணப்படுகிறது. மறுபக்கம் புலம்பெயர் மக்களின் முதலீடுகள், வெளிநாட்டு நாணயப் புலக்கத்தை அதிகரித்தல், ஏற்றுமதிச் சந்தையை விஸ்திரப்படுத்தல் போன்ற முக்கிய விடயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் விவசாயத்துறையை மேம்படுத்தும் திட்டங்களுக்கு இந்தியா, கொரியா போன்ற நாடுகள் தற்போது நிதி அனுசரணை வழங்கியுள்ளன. அடுத்தக்கட்டமாக ஆடைத்துறையை மேலும் வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதை அவதானிக்க முடிகிறது. அதேபோன்று பிரித்தானியாவால் ஆடைகளுக்கான வணிக விதிகளைத் தளர்த்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது இலங்கைக்குக் கிடைத்த மற்றுமொரு சாதகமான வாய்ப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.
கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆடைத் துறையினருடனான வரவு செலவுத் திட்டப் பூர்வாங்கக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுர அரசாங்கத்தின் ஆடைத்துறை தொடர்பான நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியிருந்தார்.
Diese Geschichte stammt aus der September 15, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

