Facebook Pixel ரணில் விக்கிரமசிங்கவை இலக்குவைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா? | Virakesari Daily – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

ரணில் விக்கிரமசிங்கவை இலக்குவைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா?

Virakesari Daily

|

September 11, 2025

சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா?

ரணில் விக்கிரமசிங்கவை இலக்குவைக்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறதா?

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐந்து தசாப்தங்களுக்கும் அதிகமான காலமாக அரசியலில் இருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினராக, பிரதிநிதி அமைச்சராக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக, எதிர்க்கட்சி தலைவராக, பிரதமராக, ஜனாதிபதியாக பதவிகளை வகித்த விக்கிரமசிங்க அரசியலில் பயனிழந்துபோன ஒரு சக்தி என்று அடிக்கடி வர்ணிக்கப்பட்டு வந்திருக்கிறார். உறுதிவாய்ந்த ரணில் அரசியல் களத்தில் வலிமையுடன் திரும்பவும் குதித்து எப்போதுமே தனது எதிரிகளை தவறு என்று நிரூபித்து வந்திருக்கிறார். அண்மைய நிகழ்வுகள் மன எழுச்சி மிக்க ரணில் தன்னை எளிதில் தள்ளுபடி செய்துவிடக்கூடிய ஒரு ஆள் அல்ல என்று மீண்டும் நிரூபிக்கக்கூடும் என்பதற்கான அறிகுறியாக தோன்றுகின்றன.

ரணில் விக்கிரமசிங்க 2025 ஆகஸ்ட் 22ஆம் திகதி குற்றப்புலனாய்வு பொலிஸாரினால் (சி.ஐ.டி.) கைது செய்யப்பட்டு பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் 5 (1) பிரிவு மற்றும் தண்டனைச் சட்டக்கோவையின் 386 & 388 பிரிவுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார். அவர் ஆகஸ்ட் 26ஆம் திகதிவரை நான்கு நாட்களுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதிபதி நிலுப்புலி லங்காபுரவினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன் மூலமாக விக்கிரமசிங்க இலங்கையின் வரலாற்றில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட முதலாவது முன்னாள் ஜனாதிபதியாகவும் முன்னாள் பிரதமராகவும் விளங்குகிறார்.

கைவிலங்கிடப்பட்ட நிலையில் அவர் சிறைச்சாலை வாகனத்தில் மகசீன் சிறைச்சாலைக்கு கூட்டிச்செல்லப்பட்டார். அங்கு சென்ற பிறகு முன்னாள் ஜனாதிபதியின் உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. முதலில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பிறகு அங்கிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

விக்கிரமசிங்கவுக்கு இரத்தக்குழாய்களில் மூன்று அடைப்புகள் ஏற்பட்டிருப்பதாகவும் இதயத்தசைகள் அழுகல், நீரிழிவு மற்றும் சுவாசப்பைத் தொற்று நோய் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கண்டறியப்பட்டது. இந்த நோய்களின் விளைவான பாதிப்புகள் வெளித்தோற்றத்தில் தெரியவராது. கடந்த ஏழு வருடங்களாக இருதயநோயினால் விக்கிரமசிங்க பாதிக்கப்பட்டிருக்கிறார்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size