Versuchen GOLD - Frei
ஜனாதிபதி திசாநாயக்கவின் கச்சத்தீவு விஜயம் புதுடில்லிக்கும் தமிழ் நாட்டுக்கும் அனுப்பிய சந்தடியற்ற செய்தி
Virakesari Daily
|September 05, 2025
சீனாவின் ரியான்ஜின் நகரில் ஜனாதிபதிகள் ஜின்பிங்குடனும் விளாடிமிர் புட்டினுடனும் கமராக்களுக்கு முன்னால் நின்று பிரதமர் நரேந்திர மோடி தோழமை உறவுகளை வெளிக்காட்டியதை பார்த்து இந்தியா வடக்கு நோக்கி கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்த அதேவேளை, இந்தியாவின் தென்திசை அயல்நாடு புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் சந்தடியில்லாமல் ஒரு செய்தியை அனுப்பியது.
வடமாகாணத்தின் யாழ்ப்பாணத்துக்கு இந்த வருடத்தில் நான்காவது விஜயத்தை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசா நாயக்க எந்த அறிவிப்பும் செய்யாமல் கடற்படையின் அதிவேக படகில் கச்சதீவுக்கு சென்றார். தரிசு நிலமான அந்த தீவில் காலடி வைத்த முதல் இலங்கை ஜனாதிபதி என்ற பெருமைக்கு அவர் உரியவராகியிருக்கிறார்.
அவ்வாறு செய்ததன் மூலமாக ஜனாதிபதி திசாநாயக்க கச்சதீவை இலங்கையின் பிராந்தியம் என்பதை அடையாளப்படுத்தியிருக்கிறார். கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதி. பாக்கு நீரிணையில் உள்ள அந்த தீவு தனக்கே சொந்தம் என்று உரிமை கோரிய இலங்கைக்கு இந்தியா 1974 ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்ட உடன் படிக்கையில் விட்டுக்கொடுத்தது. " இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான கடல் எல்லை மற்றும் அதனுடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பிலான உடன்படிக்கை என்று அது அழைக்கப்படுகிறது. (அந்த உடன்படிக்கை பிறகு 1976ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் எல்லையை வகுப்பதற்கான இன்னொரு உடன்படிக்கைக்கு வழிவகுத்தது)
அவ்வாறிருந்தாலும் இராமேஸ்வரத்துக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் இருக்கும் கச்சதீவு இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளில் திரும்பத் திரும்ப ஒரு உரசலுக்கான விடயமாகவும் விளங்குகிறது. காலனித்துவ யுகத்திலோ அல்லது சுதந்திரத்துக்கு பின்னரான காலப்பகுதியிலோ இந்தியாவின் எந்தவொரு வரைபடத்திலும் எல்லை வரையறை செய்யப்படவில்லை என்ற போதிலும், தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இராமேஸ்வரம் மீனவர்களின் உணர்வுகளை சாந்தப்படுத்துவதற்காக, மக்கள் வாழாத கச்சதீவை " மீட்பது " குறித்து அடிக்கடி பேசுகிறார்கள். பாக்கு நீரிணையின் இருமருங்கிலும் உள்ள மீனவர்களுக்கு இடையில் ( கிடைப்பதற்கு அரிதாக இருக்கும்) வளங்கள் தொடர்பிலான முரண்நிலையே இந்த பிரச்சினையின் மையமாக விளங்குகிறது.
Diese Geschichte stammt aus der September 05, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
