Facebook Pixel மோடியின் சீன விஜயம் உலக பொருளாதாரத்தில் புதிய ஒழுங்கை உருவாக்குமா? | Virakesari Daily – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மோடியின் சீன விஜயம் உலக பொருளாதாரத்தில் புதிய ஒழுங்கை உருவாக்குமா?

Virakesari Daily

|

August 27, 2025

வல்லரசு நாடுகளுக்கிடையிலான அதிகாரப் போட்டிகள் புவிசார் அரசியலை எப்போதும் தணிய விடாது கொந்தளிப்பாகவே வைத்திருக் கின்றது. பல்வேறு புதிய சவால்களுக்கு மத்தியில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடி சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்த விஜயம் குறித்து பல உலக நாடுகள் அவதானம் செலுத் தியுள்ள நிலையில், அமெரிக்காவுடனான சமீபத் திய பொருளாதார மோதல்களுக்கு பதிலளிக்கும் வகையில், உலக பொருளாதாரத்தில் மாற்று ஒழுங்கை உருவாக்குவதற்கான ஒரு விஜயமாக அமையும் என்றும் கூறப்படுகின்றது. எவ்வாறா யினும் ஆசியாவின் இரண்டு பெரிய நாடுகளுக்கு இடையேயான உயர் மட்ட பேச்சுவார்த்தையை மீள ஆரம்பிக்கும் நோக்கில், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ கடந்த 18 ஆம் திகதி திங்கட் கிழமை இந்தியாவுக்கு விஜயம் செய்து தொடர்ச் சியான இருதரப்பு சந்திப்புகளை முன்னெடுத்தி ருந்தார்.

- லியோ நிரோஷ தர்ஷன்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையி லான சந்திப்பு, இருநாட்டு தலைவர்களின் உயர் மட்ட விரிவான பேச்சுவார்த்தைக்கான களத்தை மீள அமைத்துள்ளது. எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் செப்டம்பர் 1 ஆம் திகதி வரை தியான் ஜினில் நடைபெறவுள்ள ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சி மாநாட்டின் இடையே சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடனான சந்திப்பு தொடர்பில் தான் ஆவலுடன் உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

உச்சி மாநாட்டின் முடிவுகளுக்கு சாதகமான சூழ் நிலையை உருவாக்கும் வகையில், புது டில்லி மற்றும் பெய்ஜிங் நேரடி விமான சேவைகள் மற்றும் எல்லை வர்த்தகத்தை மீண்டும் தொடங் கவும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை விரிவுப டுத்தவும் ஒப்புக்கொண்டுள்ளன. இதேவேளை எல்லை சர்ச்சைகளுக்கு குறைந்தது மூன்று புதிய எல்லைக் கட்டுப்பாட்டு அமைப்புகளை நிறுவு வதற்கும் இதன் போது இணக்கப்பாடுகள் எட் டப்பட்டுள்ளன. மேலும், எதிர்பாராத விதமாக, தாய்வான் விவகாரம் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீக்கு ஒரு முக்கியமான இராஜதந்திர வெற்றி யாக அமைந்தது.

புது டில்லியில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டி ருந்தபோதே, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், 'தாய்வான் சீனாவின் ஒரு பகுதி' என்று வாங் யீடம் கூறியதாக பெய்ஜிங்கில் இருந்து தக வல்கள் வெளியானது. அதே நேரத்தில், இந்தியா 'சீனாவின் ஒரு கொள்கையை தொடர்ந்து கடைப்பி டிக்கிறது' என்று இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் அஜித் தோவால் கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை உடனடியாக தெளிவுப டுத்த விரைந்த புது டில்லி அதிகாரிகள், தாய்வான் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டில் எந்த மாற் றமும் இல்லை என்று மறுத்தனர். இந்தியாவின் கவனம் தாய்வானின் பொருளாதாரம், தொழில் நுட்பம் மற்றும் கலாசாரத்தில் தொடர்ந்தும் உள் ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீயின் முதன்மை சந்திப்பு இந்தியாவின் தேசிய பாது காப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனாக இருந் தது. இருவருமே இருதரப்பு அரசாங்கங்களின் 'சிறப்புப் பிரதிநிதிகளாக' நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகுதியில், எல்லைப் பிரச்சினைகளின் சிக் கலான அரசியல் பரிமாணங்களைக் கையாளும் ஒரு உயர்மட்ட பேச்சுவார்த்தைக்கு அவர்கள் இரு வரும் தலைமை தாங்குகின்றனர்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size