Versuchen GOLD - Frei

கிர் காட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே வாழும் சிங்கங்களின் வாழ்க்கை எவ்வாறு வேறுபடுகிறது?

Virakesari Daily

|

August 13, 2025

புல்வெளிகள், புதர்க்காடுகள் அல்லது அடர்ந்த காடுகளில் வாழும் மாமிச உண்ணிகளாக சிங்கங்கள் கருதப்படுகின்றன. உலகளவில் சிங்கங்கள் இயற்கையாக வாழும் இடங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காடுகள், மற்றொன்று இந்தியாவின் கிர் காடு. கிர் காடுகளில் வாழும் சிங்கங்கள் ‘ஆசிய சிங்கங்கள்' என்று அழைக்கப்படுகின்றன.

கிர் காட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே வாழும் சிங்கங்களின் வாழ்க்கை எவ்வாறு வேறுபடுகிறது?

இந்த காடு ஜூனாகத், கிர்சோம்நாத் மற்றும் அம்ரேலி மாவட்டங்களில் பரவியுள்ளது. வன விலங்குகளுக்காக இந்த காடு மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிர் தேசிய பூங்கா, கிர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பனியா வன விலங்கு சரணாலயம் ஆகியவை தான் அந்த மூன்று பகுதிகள்.

இவை தவிர, அம்ரேலியில் உள்ள மிதியாலா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஜூனாகத்தில் உள்ள கிர்னார் வனவிலங்கு சரணாலயம் ஆகியவை ஆசிய சிங்கங்களின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, போர்பந்தரில் உள்ள பர்தா வனவிலங்கு சரணாலயத்தையும் சிங்கங்கள் தங்களுடைய வாழ்விடமாக மாற்றியுள்ளன. கடந்த 20-25 ஆண்டுகளில், அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, ஆசிய சிங்கங்கள் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே வரத் தொடங்கியுள்ளன. கிர் காட்டைச் சுற்றியுள்ள சிறிய பாதுகாக்கப்பட்ட காடுகள், ஒதுக்கப்பட்ட காடுகள் மற்றும் வகைப்படுத்தப்படாத காடுகளிலும், ஜூனாகத், கிர் சோம்நாத், அம்ரேலி, பாவ்நகர், ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளின் பள்ளத்தாக்குகளிலும், அணைகளைச் சுற்றியுள்ள புதர்கள் நிறைந்த பகுதிகளிலும், சாகுபடி செய்யப்படாத தனியாருக்குச் சொந்தமான தரிசு நிலங்களிலும், அரசாங்க தரிசு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், பயிரிடப்பட்ட வயல்கள் மற்றும் தோட்டங்களைச் சுற்றியுள்ள புதர்களிலும் சிங்கங்கள் இப்போது குடியேறியுள்ளன.

இந்தப் பகுதிகள் 'கிரேட்டர் கிர்' என்று அழைக்கப்படுகின்றன. போர்பந்தரில் தொடங்கி பாவ்நகரின் தலாஜா தாலுகா வரை கடற்கரையோரத்தில் உள்ள காண்டா அகாசியா மரங்களின் அடர்ந்த காடுகளிலும் சில சிங்கங்கள் குடியேறியுள்ளன. ஆனால், கிர் காட்டிற்கு வெளியே வாழும் சிங்கங்களின் வாழ்க்கையும் காட்டுக்குள் வாழும் சிங்கங்களின் வாழ்க்கையும் ஒன்றாக உள்ளாதா என்ற கேள்விக்கான பதிலைத் தெரிந்து கொள்வோம்.

பாதி சிங்கங்கள் கிர் காட்டிற்கு வெளியே வாழ்கின்றனவா?

குஜராத் வனத்துறையால் 2025ம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் இப்போது 891 ஆசிய சிங்கங்கள் உள்ளன. 2020 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 674 ஆக இருந்தது. அதாவது, ஐந்து ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size