Versuchen GOLD - Frei

டிரம்பை சமாளிக்க இந்தியாவிடம் உள்ள வழி என்ன?

Virakesari Daily

|

August 12, 2025

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்துள்ள 50% வரி ஆசிய பிராந்தியத்தில் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வரியாகும். இந்த வரி ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும். முன்னதாக, டிரம்ப் இந்தியா மீது 25 சதவீத வரி விதித்திருந்தார். இதன் பின்னர், ரஷ்யாவிடமிருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதால் ஏற்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்த 25 சதவீத கூடுதல் வரியை அறிவித்துள்ளார்.

டிரம்பை சமாளிக்க இந்தியாவிடம் உள்ள வழி என்ன?

அமெரிக்காவும், ஐரோப்பாவும் ரஷ்யாவிடமிருந்து யுரேனியமும், உரமும் வாங்கும் நிலையில் இந்தியாவுக்கு எதிராக இரட்டை நிலைப்பாடு எடுக்கப்படுவது ஏன் என இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது. பிபிசி இந்தியின் வாராந்திர நிகழ்ச்சியான 'தி லென்ஸ்' இல், கலெக்டிவ் நியூஸ்ரூமின் செய்தித்துறை இயக்குநர் முகேஷ் ஷர்மா, இந்தியாவின் மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள், இந்தியா-அமெரிக்க உறவு மற்றும் தற்போதைய சூழலில் இந்தியாவுக்கு முன் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் பற்றி பேசினார். இந்த விவாதத்தில், முகேஷ் ஷர்மாவுடன் இந்தியாவின் முன்னாள் வெளியுறவு செயலர் ஷஷாங்கும், ராஜ்ஜிய விவகார பத்திரிகையாளர் ஸ்மிதா ஷர்மாவும் பங்கேற்றனர்.

இந்தியா - அமெரிக்கா உறவுகள் மாறுகின்றனவா?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரண்டாம் முறையாக பதவியேற்றது முதலே வரிகள் பற்றிய விவாதங்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன. வரிகள் விஷயத்தில் டிரம்ப் தொடர்ந்து இந்தியாவை குறிவைத்து வருகிறார். ஆனால் இதற்கு முன், இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுகள் ஒவ்வொரு நிர்வாகத்தின்கீழும் தொடர்ந்து மேம்பட்டு வந்ததாக கூறப்பட்டது. இதைப் போன்றதொரு சூழலில், இந்தியா அமெரிக்கா இடையேயான உறவுகள் மாறுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது. கடந்த 20 முதல் 25 ஆண்டுகளில் இந்தியா மற்றும் அமெரிக்காவில் எந்த அரசு ஆட்சிக்கு வந்தாலும் சரி, அது உலகில் உருவாகும் புதிய தரநிலைகளுக்கு ஏற்ப தங்களது பரஸ்பர உறவை வடிவமைக்க முயற்சி செய்திருப்பதாக இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த ஷஷாங் சொல்கிறார். இந்தியா அமெரிக்கா இடையேயான தற்போதைய உறவுகளின் நிலைக்கு டிரம்பின் அணுகுமுறைதான் காரணம் என நிபுணர்கள் கருதுகின்றனர். "ஒரு புறம் டொனால்ட் டிரம்ப், அவரது ஆளுமை மற்றும் அரசியல் இருக்கிறது. டொனால்ட் டிரம்பிற்கு கொள்கைகளோ, விதிகளோ, நெறிமுறைகளோ இல்லை. 2016ல் அவர் முதல் முறை அதிபரானதுபோது அவருடைய நிர்வாகம் எவ்வாறு செயல்பட்டது என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்," என்றார் ஸ்மிதா ஷர்மா.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size