Versuchen GOLD - Frei
ஒரு கசப்பான உண்மை மீண்டுவர என்ன வழி?
Virakesari Daily
|August 08, 2025
இலங்கை பொருளாதார நெருக்கடியி லிருந்து மீண்டு வருகின்ற போதிலும் பேரண்ட பொருளாதார குறிகாட்டிகள் சிறந்த நிலையில் காண்பித்தாலும் கூட 22 மில்லியன் மக்களைக் கொண்ட இலங்கை அதில் 26 சதவீதத்தினரை வறுமைக்குள் ளேயே வைத்திருக்கிறது. இலங்கையை பொறுத்தவரையில் இதுவொரு கசப்பான உண்மையாகும்.
-
வறுமை என்பது உலகளாவிய ரீதியில் ஒரு சவாலாகவே நீடிக்கிறது. குறிப்பாக, இலங்கை போன்ற வளர்ந்து வரும் நாடுகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் சவால்களால் வறுமையின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி, அதன் குடிமக்கள் அனைவரும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து, கண்ணியமான வாழ்க்கை வாழ்வதில் தான் தங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரம் அண்மைக் காலங்களில் பல சவால்களை எதிர்கொண் டது. அதன் விளைவாக வறுமை தாண் டவமாடுகிறது. உலக வங்கி, உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகள் வெளியி டுகின்ற தரவுகளின்படி, இலங்கையில் வறுமை தற்போது 25.9 சதவீதமாக உள் ளது. அதாவது இலங்கையில் சுமார் 6 மில் லியன் (60 இலட்சம்) மக்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் தர நியமங்களின்படி, ஒரு நாளைக்கு இரண்டு டொலர்களுக்கும் குறைவாக வருமானம் பெறுபவர்கள் வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
கடந்த காலங்களைப் பொறுத்தவரையில், 1990 களில் இலங்கையில் வறுமை வீதம் மிக அதிகமாகக் காணப்பட்டது. எனினும், அதன் பின்னர் வறுமையைக் குறைப்பதற் கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட் டன. குறிப்பாக, 2000ஆம் ஆண்டுகளில் வறுமைக் குறைப்பில் குறிப்பிடத்தக்க முன் னேற்றம் ஏற்பட்டது. சமுர்த்தி உள்ளிட்ட நீண்டகால அபிவிருத்தித் திட்டங்களும் ஓரளவு கை கொடுத்தன. இதன் விளைவாக, 2019ஆம் ஆண்டளவில் வறுமை வீதம் சுமார் 14 சதவீதமாக குறைந்தது. (அட்டவ ணையை பார்க்கலாம்)
ஆனால், 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற் பட்ட பொருளாதார நெருக்கடி, டொலர் தட்டுப்பாடு, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி (ஒரு டொலருக்கு 380 ரூபா), பணவீக்க அதிகரிப்பு, வாழ்க்கைச் செலவு உயர்வு, இறக்குமதி நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் வறுமை மீண்டும் தலை விரித்தாடத் தொடங்கியது. அத்தியாவசியப் பொருட்களான எரிபொருள், எரிவாயு, மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை இறக்கு மதி செய்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. இந்தச் சூழலில் 2023ஆம் ஆண்டளவில் வறுமை வீதம் மீண்டும் 26 ஆக உயர்ந்தது.
Diese Geschichte stammt aus der August 08, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
