Versuchen GOLD - Frei

உச்சத்தை தொட்ட இதழியல் பயணத்தின் வெற்றிகரமான ஒரு வீச்சு

Virakesari Daily

|

August 06, 2025

படைப்பாளிகளோடும் பத்திரிகை வாசகர்களோடும் கரங்களைப் பற்றிய வண்ணம் 95 ஆண்டுகள் பயணிக்கும் இலங்கை ‘வீரகேசரி'

- ஆர். என். லோகேந்திரலிங்கம் கனடா உதயன் வார இதழ் பிரதம ஆசிரியர்

ஊடகத்துறையில் அச்சுப் பதிப்பாக வெளிவரும் பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளின் ஒவ்வொரு வெளியீட்டையும் இதழ்கள் என்று நாம் உச்சரிக்கும் போது எமக்கு மலர் ஒன்று தான் ஞாபகத்துக்கு வரும்.

பூக்களைப் பார்க்கும் போதும் அல்லது அவற்றை கைகளில் ஏந்தியவண்ணம் இருக்கின்ற நேரத்திலும் பக்தி கலந்த உணர்வு எம் உடலின் நரம்புகளின் ஊடாக பரவுவதை நாம் அனுபவிக்க முடிகிறது.

இதைப்போலவே ஒரு பத்திரிகைப் பிரதியையோ அன்றி சஞ்சிகையின் பிரதியொன்றையோ கைகளில் எடுத்து ஒவ்வொரு பக்கமாக புரட்டுகின்ற போது நாம் பலவற்றைச் சிந்திக்கின்றோம். அந்தப் பொழுதில் ஏதோ ஒரு வகையான பரவசத்தின் எல்லையை நாம் எட்டுவதற்கு காரணம் அதில் நாம் வாசிக்கப்போகின்ற அல்லது வாசித்த செய்திகளோ, அன்றி இலக்கியப் படைப்புக்களோ, அன்றி நகைச்சுவைத் துணுக்குகளோ எவையாயினும், எம் வாசிப்பு ரசனைக்கு ஏற்ப அவை எம்மை திருப்தியடையச் செய்யும் வல்லமை மிக்கவை என்பதை மறுப்போர் எவரையுமே நாம் காண முடியாது.

இவ்வாறாக மலர்களின் இதழ்களுடன் ஒப்பிட்டு அச்சு இதழ்களை நாம் பார்த்தாலும் ஒரு பத்திரிகையை அச்சிட்டு வெளியிடுவது என்பது எவ்வளவு சவால்களும் சிரமங்களும் நிறைந்த ஒரு பணியென்பதை அந்தத் துறையில் ஈடுபட்டவர்கள் மாத்திரமே அறிவார்கள். சுமார் ஐந்து இலட்சம் தமிழர்கள் வாழும் கனேடிய தேசத்தில் 29 ஆண்டுகளாக ஒரு வாரப் பத்திரிகையை வெளியிட்டு அதன் ஆசிரியராகப் பணியாற்றி பெற்ற அனுபவ உணர்வோடு 'வீரகேசரி' பத்திரிகையின் தனித்துவம் கண்டு நான் வியந்து நிற்கின்றேன். பல்வேறு துறையினரையும் தன்னுடன் இணைத்து அவர்களது முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு தானும் உயர்ந்து நிற்கின்ற காலப்பகுதியில் தன் தலையை உயர்த்தியவண்ணம் நிமிர்ந்து நிற்கும் ஒரு வெற்றியாளனைப் பார்ப்பது போல 'வீரகேசரி' பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தையும் அதற்கு அடித்தளமிட்ட பெருந்தகைகளை பெருமிதத்தோடு நினைத்துப் பார்க்கின்றேன். அதற்கு மேலாக உச்சத்தை தொட்ட தனது இதழியல் பயணத்தின் வெற்றிகரமான வீச்சை எட்டியவண்ணம், அந்தப் பயணத்தின் ஒரு நூற்றாண்டின் நிறைவை அடைவதற்கு இன்னும் எஞ்சியிருப்பவை சில ஆண்டுகளே என்பதை அறிகின்றபோது, அந்த சாதனையும் உலகத் தமிழர்களால் கொண்டாடப்பட வேண்டிய நாளுக்காக அனைவரும் காத்திருப்பதும் எமக்குரிய பாரிய கடமை என்று உணர்ந்தவனாக பாராட்ட விரும்புகின்றேன்.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size