Versuchen GOLD - Frei
ரஷ்யாவில் தமிழக மருத்துவ மாணவரை யுக்ரேன் போர் முனைக்கு அனுப்ப முயற்சி
Virakesari Daily
|July 29, 2025
தமிழ்நாட்டில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர் ஒரு வழக்கில் சிறையில் உள்ள நிலையில், ரஷ்ய அதிகாரிகள் அந்த மாணவரை ரஷ்ய படையில் இணைந்து யுக்ரேனுக்கு எதிராகப் போரிட கட்டாயப்படுத்தப்படுவதாக மாணவரின் பெற்றோர் கூறியுள்ளனர்.
-
கடலூரை சேர்ந்த சரவணன் மற்றும் அவரது மனைவி பாமா, தங்கள் மகன் கிஷோரை காப்பாற்றி தாய்நாட்டுக்கு அழைத்து வருமாறு கோரி, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீருடன் மனு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளனர். மேலும் தங்கள் மகன் "போருக்கு அனுப்பப்படுவதைத் தடுக்க இந்தியா சார்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர்கள் முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக இந்திய வெளியுறவுத் துறையுடன் இணைந்து மாணவரை காப்பாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரஷ்ய தூதரகம் என்ன கூறுகிறது?
கடலூர் மாணவருடன் சேர்ந்து கைதாகி சிறையில் இருக்கும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மாணவரின் நிலை என்ன? ரஷ்ய சிறையில் இந்திய மாணவர் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே இருக்கும் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் சரவணன். அவர் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.
அவரது 22 வயதான மகன் கிஷோர், கடந்த 2021ஆம் ஆண்டு மருத்துவம் பயில ரஷ்யா சென்றார். ரஷ்யாவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த நிதீஷ் என்ற மற்றொரு இந்திய மாணவருடன் சேர்ந்து அவர் படித்து வந்துள்ளார். அங்கு, இவர்கள் இருவரும் 3 ரஷ்ய மாணவர்களுடன் சேர்ந்து ஒரே அறையில் தங்கியிருந்தனர்.
கிஷோருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த ரஷ்ய மாணவர்கள் ஒரு கொரியர் நிறுவனத்தில் பகுதி நேரமாக வேலை செய்து வந்துள்ளனர். இந்த நிலையில், வாடிக்கையாளர்களிடம் பொருட்கள் விநியோகிக்கும்போது, அவர்கள் வைத்திருந்த ஒரு பார்சலில் போதைப் பொருள் இருந்தது, ரஷ்யா போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 3 ரஷ்ய மாணவர்களும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுடன் ஒரே அறையில் தங்கியிருந்த காரணத்தால், இந்திய மாணவர்களான கிஷோர், நிதீஷ் இருவரும் சந்தேகத்தின் பேரில் 2023ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டனர்.
அவர்களை சிறையில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கு பெற்றோர்கள் சார்பாக இந்தியாவில் இருந்தபடியே மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்குப் பலன் ஏதும் கிடைக்கவில்லை. அதனால் இரு மாணவர்களும் தற்போது வரை சிறையில் உள்ளனர்.
Diese Geschichte stammt aus der July 29, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

