Versuchen GOLD - Frei
யாழ்ப்பாண மனிதப் புதைகுழி, திசாநாயக்க அரசாங்கத்துக்கு ஒரு சோதனை
Virakesari Daily
|July 21, 2025
உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கும் இலங்கையின் வடக்கு யாழ்ப்பாண மாவட்டத்தின் மனிதப் புதைகுழிப் பகுதி தமிழ் மக்களின் மனக்குறைகளை தீர்த்துவைப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அரசாங்கத்தை ஒரு சோதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
-
முன்னாள் போர் வலயங்களில் ஒன்றான யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியான செம்மணியில் இந்த வருடம் பெப்ரவரியில் இந்து தகனசாலை ஒன்றை நிர்மாணிப்பதற்காக நிலத்தை தயார்ப்படுத்திக் கொண்டிருந்த வேளை மனித எலும்புகளைக் கண்டெடுத்ததை அடுத்து தொழிலாளர்களால் மனிதப்புதை குழிப் பகுதி கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு அறிவித்ததை அடுத்து அந்த நிலப்பகுதியை தோண்டி மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு யாழ்ப்பாணம் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் உதவியுடன் சிரேஷ்ட தொல்லியல் நிபுணர், தடயவியலிலும் மானிடவியலிலும் நிபுணத்துவம் பெற்றவர்கள் உட்பட சட்ட மருத்துவ அதிகாரிகள் உள்ளடங்கிய நிபுணர்கள் குழுவொன்று, தற்போது மக்கள் செல்ல முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டிருக்கும் புதைகுழிப் பகுதியை அகழும் பணிகளில் ஈடுபட்டுவருகிறார்கள்.
அகழ்வுப் பணிகளுடன் பரிச்சயம் கொண்ட உத்தியோகபூர்வ வட்டாரங்களிடமிருந்து பெறக்கூடியதாக இருக்கும் தகவல்களின் பிரகாரம் இதுவரையில் 75 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
இவற்றில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. பாடசாலைப் பைகள் மற்றும் தனிப்பட்ட உடைமைகளும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன.
தினமும் கண்டெடுக்கப்படும் பல எலும்புக்கூடுகள் பற்றிய தகவல்கள் தலைப்புச் செய்திகளாக ஊடகங்களில் வெளியாகிக்கொண்டிருப்பதற்கு மத்தியில், அதிகரிக்கும் எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை உள்ளூர் மக்களுக்கு குறிப்பாக காணாமல்போன தங்களது அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மையை அறிவதற்காக வருடக்கணக்காக போராடிக் கொண்டிருக்கும் உறவினர்களை பெரும்வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.
விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து அரச ஆயுதப்படைகள் கொடிய உள்நாட்டுப்போரை முடிவுக்குக் கொண்டுவந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், காணாமல்போனவர்கள் பற்றிய உண்மையைக் கண்டறிவதில் மக்கள் தொடர்ந்தும் உறுதியாக இருக்கிறார்கள். போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
"தனது 21 வயது சகோதரன் 1996 ஆம் ஆண்டில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்ட நேரத்தில் இருந்து பொன்னம்பலம் ஆறுமுகசாமி அவரை கண்டறிவதற்கான முயற்சியிலேயே தனது பெருமளவு நேரத்தையும் சக்தியையும் செலவிட்டு வருகிறார்."
Diese Geschichte stammt aus der July 21, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
