Versuchen GOLD - Frei

அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் செம்மணி புதைகுழி விவகாரம்

Virakesari Daily

|

July 17, 2025

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி விவகாரமானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் செம்மணி புதைகுழி விவகாரம்

அத்துடன் உள்நாட்டிலும் சர்வதேச தரப்பிலும் இந்த விவகாரம் தற்போது பேசுபொருளாக மாறியிருக்கின்றது.

செம்மணியில் தற்போது இடம்பெற்ற முதலாம்கட்ட அகழ்வுப் பணியில் 64 மனித எலும்புக் கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த எலும்புக் கூடுகளில் சிறுவர்கள், பெண்கள் என பலதரப்பட்டவர்களும் அடங்குகின்றனர்.

சிறுவயதையொத்த சில எலும்புக் கூடுகளும் மீட்கப்பட்டிருந்தன. அந்த எலும்புக்கூடு ஒன்றுடன் நீல நிற புத்தகப் பை ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. அதனைவிட விளையாட்டு பொம்மை ஒன்றும் கைப்பற்றப்பட்டிருந்தது. புத்தகப் பையும் விளையாட்டு பொம்மையும் கைப்பற்றப்பட்டமையானது வயது வேறுபாடின்றி படுகொலை செய்யப்பட்டு இப்பகுதியில் மக்கள் புதைக்கப்பட்டமையை அம்பலப்படுத்தியிருக்கின்றது.

செம்மணி புதைகுழியில் முதலாம் கட்ட அகழ்வுப் பணி நிறைவுக்கு வந்ததையடுத்து, இந்த விவகாரம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன.

நேற்று முன்தினம் செம்மணி விவகாரம் சம்பந்தமான வழக்கு விசாரணை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற போது, கையளிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் புதைகுழியின் உண்மைத்தன்மையை வெளிப்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.

அகழ்வுப் பணியில் ஈடுபட்ட தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்துக்கு அளித்துள்ள அறிக்கையில், செம்மணி மனித புதைகுழி அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன என தான் கருதுவதாகத் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்வது போன்று அங்கிருந்து மீட்கப்பட்ட எலும்புக் கூட்டுத் தொகுதிகள் காணப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. செம்மணி மனித புதைகுழி அடையாளம் காணப்பட்ட குறித்த பகுதியில் குற்றவியல் சம்பவங்கள் இடம்பெற்றமைக்கான தடயங்கள் உள்ளன, வழமையாக உடல்கள் நல்லடக்கம் செய்வது போன்று, புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகள் காணப்படவில்லை, இந்த விடயம் தொடர்பில் மேலதிக ஆய்வுகள் தேவை என்ற கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size