Versuchen GOLD - Frei

மனதில் நிறைந்த மருத மடுமாதா

Virakesari Daily

|

July 15, 2025

மன்னார் மாவட்டத்தில் மடு என்ற இடத்தில் 400 ஆண்டுகள் பழைமையான செபமாலை மாதாவின் தேவாலயம் அமைந்துள்ளது.

மனதில் நிறைந்த மருத மடுமாதா

வருடத்தில் ஆத்துமாக்களின் மாதமாகிய நவம்பர் மாதம் தவிர, ஏனைய 11 மாதங்களும் மடுத்திருத்தலத்தில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இருந்த போதிலும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களே சிறப்பானவையாகும். இலட்சக்கணக்கான மக்கள் இன, மத பேதமின்றி கலந்துகொள்வார்கள்.

imageபோர்த்துக்கேயர் இலங்கையில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலத்தில் மன்னார் வியாபார, பிரயாணத்துறைமுகம் எனத் தனிப்பெருமை பெற்றிருந்தது. தென் இந்தியாவில் இருந்து மன்னாருக்கு வந்த அருட்திரு பிரான்சீஸ் சேவியர் அடிகளாரினால் மன்னாரில் மாத்திரமன்றி அதன் சுற்றுக் கிராமங்களுக்கும் கத்தோலிக்க மதம் பரப்பப்பட்டது. மருதமடு மாதாவின் புராதன தலமாகிய மாந்தையும் புராதன கத்தோலிக்க கிராமமாக மாறியது. போர்த்துக்கேயரின் உதவியுடன் மாந்தைக் கத்தோலிக்கர்கள் செபமாலை மாதாவின் பெயரால் ஒரு பெரிய கோவிலைக் கட்டினார்கள்.

image1656 ஆம் ஆண்டில் போர்த்துக்கேயருடைய ஆட்சி இலங்கையில் முற்றாக அற்றுப்போக, ஒல்லாந்தர் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். அவர்கள் கத்தோலிக்கக் கோவில்களைத் தமது இராணுவ பயன்பாட்டுக்காக ஆக்கிரமித்துக் கொண்டார்கள். இதனால் அச்சமடைந்த மாந்தைக் கத்தோலிக்க மக்கள், செபமாலை மாதாவின் சுரூபத்தைப் பாதுகாப்பான வேறொரு இடத்துக்குக் கொண்டுபோக முடிவெடுத்தார்கள். 1670 இல் ஊரவரின் சம்மதத்துடன் இருபது குடும்பங்கள் மாதா சுரூபத்தை எடுத்துக்கொண்டு கண்டி இராச்சியத்துக்குப் புறப்பட்டார்கள். கண்டிக்குப் போகும் பாதையில் பழைய குளமொன்றிருந்தது. அதற்கு அண்மையிலிருந்த கிராமத்துக்குத் தெய்வாதீனமாக 20 குடும்பங்களும் வந்து சேர்ந்தன. அந்தக் கிராமத்தின் பெயர் மருதமடு. அங்கே கண்டியரசனுக்குச் சொந்தமான திறைசேரியுமிருந்தது. அவர்கள் மாதாவுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக அன்றைய நாளை செபத்தில் செலவழித்தார்கள். யாழ்ப்பாணத்தில் வேதகலாபனை காட்டுத்தீ போல் பரவியது. மருதமடுவோ அமைதி நிறைந்து காணப்பட்டது.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size