Versuchen GOLD - Frei
நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் அரசாங்கத்தின் வெற்றி விரிவுபடுத்தப்பட வேண்டியது அவசியம்
Virakesari Daily
|July 11, 2025
இலங்கையின் நவீன வரலாற்றில் இடம்பெற்ற மிகவும் பாரதூரமான பொருளாதார வீழ்ச்சியை வெற்றிகொள்வதற்கு அரசாங்கங்கள் கடந்த மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலமாக முயற்சித்து வருகின்றன. தற்போதைய அரசாங்கம் மழுப்பலின்றி சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதன் மூலமும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் சுயாதீனமாகச் செயற்படுவதற்கு அனுமதிப்பதன் மூலமும் அதன் மீது சர்வதேச பங்காளி களும் பொதுமக்களும் நம்பிக்கை வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது.
இந்த நம்பகத்தன்மை முன்னைய அரசாங்கங்கள் இதுகாலவரை பெறத்தவறிய ஒரு வாய்ப்பை இன்றைய அரசாங்கத்துக்கு வழங்குகிறது. இந்த நம்பிக்கையை போரின் மரபுக்கு முகங்கொடுப்பதற்கும் இன்னமும் பிளவுபட்டிருக்கும் நாட்டை ஒன்றுபடுத்துவதற்கும் அரசாங்கத்தினால் பயன்படுத்த முடியும், பயன்படுத்தவும் வேண்டும்.
சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் புதிய உறவுமுறை இந்த நம்பகத்தன்மையின் தெளிவான அறிகுறியாகும். சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச்சபை கடந்தவாரம் விரிவுபடுத்தப்பட்ட நிதியுதவி திட்டத்தின் நான்காவது மீளாய்வை நிறைவுசெய்து இன்னொரு 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு விடுவிப்பதற்கு அதிகாரமளித்திருக்கிறது.
முன்னைய மீளாய்வுகளின்போது செலவின நிலுவைகள் குறித்து அறிவிக்கத் தவறியதை ஒப்புக்கொண்ட அரசாங்கம், அதன் தரவுகளின் நேர்மையை மேம்படுத்துவதற்கு எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளை விளக்கிக்கூறியதை அடுத்து, அதே அமர்வில் நிறைவேற்றுக்குழு விட்டுக்கொடுப்பைச் செய்திருக்கிறது. அபராதத்தை விதிப்பதற்குப் பதிலாக சர்வதேச நாணய நிதியம் அரசாங்கம் எடுக்கவிருப்பதாகக் கூறிய திருத்த நடவடிக்கைகளையும் நிதித் துறை வெளிப்படைத்தன்மை மீதான ஆழமான பற்றுறுதியையும் ஏற்றுக்கொண்டு சலுகை காட்டியிருக்கிறது.
கடனுதவிகளைப் பெறும் நாடுகள் தவறான தகவல்களை வெளியிடும்போது, சர்வதேச நாணய நிதியம் உதவியை முடக்கி விடும். 2001 ஆம் ஆண்டில் உக்ரேனிலும் 2004 ஆம் ஆண்டில் டொமினிக்கன் குடியரசிலும் அவ்வாறு நடந்தது. ஆனால், இலங்கை விடயத்தில் இந்தத் தடவை அவ்வாறு சர்வதேச நாணய நிதியம் நடந்துகொள்ளாததன் மூலம் சீர்திருத்தம் மீதான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் அதற்கு இருக்கும் நம்பிக்கையை வெளிக்காட்டியிருக்கிறது. வரி அதிகரிப்புகளும் மானியங்கள் வாபஸும் மக்களின் பொருளாதார இடர்பாடுகளை அதிகரித்திருக்கின்றன. ஆனாலும் அரசாங்கம் அத்தகைய நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொள்கிறது.
Diese Geschichte stammt aus der July 11, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
