Versuchen GOLD - Frei

நம் தேசத்தின் மீது படிந்திருக்கும் கறையைப் பிரதிபலிக்கிறது செம்மணி

Virakesari Daily

|

July 03, 2025

தவறுகளை இலாவகமாக மறைப்பது தேசப்பற்று அல்ல; சட்டத்தரணிகள், செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டு

- நா.தனுஜா

மனிதப் புதைகுழிகள் கண்டறியப்பட்ட செம்மணியைச் சுற்றி முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள், பாதிக்கப்பட்ட தரப்பினரும் அவர்களது குடும்பத்தினரும் முகங்கொடுத்த துன்பத்தை மட்டுமன்றி, எமது தேசத்தின் மனச்சாட்சி மீது படிந்திருக்கும் கறையையும் சேர்த்தே பிரதிபலிக்கின்றன.

இத்தகைய மிக மோசமான மனித உரிமை மீறல் குறித்த கரிசனையைப் புறக்கணிப்பதோ அல்லது அமைதிகாப்பதோ காயங்களை ஆற்றுவதற்கும், முன்னேறிச் செல்வதற்கும், சர்வதேச சமூகத்தின் நன்மதிப்பைப் பெற்றுக்கொள்வதற்கும் விரும்பும் தேசத்தின் தெரிவாக இருக்காது என சட்டத்தரணிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செம்மணி மனிதப்புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் ஆறாம் நாள் பணிகள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டன. அதன்போது கடந்த ஞாயிற்றுக்கிழமை அடையாளம் காணப்பட்ட நீலநிறப்பையுடன்கூடிய சிறு பிள்ளையினது என்று நம்பப்படும் எலும்புக்கூட்டுத்தொகுதி முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டது. அதுமட்டுமன்றி அந்தப் பை மீட்கப்பட்ட புதைகுழியில் இருந்து சிறு பிள்ளைகள் விளையாடும் பொம்மை ஒன்றும், சிறு பிள்ளையின் காலணி ஒன்றும் மீட்கப்பட்டன.

கடந்த ஞாயிறன்று கண்டறியப்பட்ட பையைப் போன்று நேற்று முன்தினம் கண்டறியப்பட்ட பொம்மையும் சமூகவலைத்தளங்களில் முக்கிய பேசுபொருளாகியுள்ளது.

போராளிகள் அல்லாத அப்பாவிச் சிறுவர்களும் கொன்று புதைக்கப்பட்டிருக்கிறார்கள் என நம்புவதற்கு ஏதுவான சான்றுப்பொருட்களாக இவை பார்க்கப்படுவதுடன், முன்னெப்போதுமில்லாத வகையில் இவை தென்னிலங்கையின் கவனத்தையும் பெருமளவுக்கு ஈர்த்துள்ளன.

WEITERE GESCHICHTEN VON Virakesari Daily

Virakesari Daily

கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

யார் இந்த துனித் வெல்லாலகே?

இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.

time to read

3 mins

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை

19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?

காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்

time to read

2 mins

September 22, 2025

Virakesari Daily

செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி

உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு

ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்

காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர

இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்

பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.

time to read

1 min

September 22, 2025

Virakesari Daily

Virakesari Daily

கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்

கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

time to read

1 min

September 22, 2025

Translate

Share

-
+

Change font size