Versuchen GOLD - Frei
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க; இலங்கையின் விதியின் புதல்வி
Virakesari Daily
|July 03, 2025
2025 ஜூன் 29 ஆம் திகதி தனது 80 ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, 1994 நவம்பரில் இலங்கையின் முதலாவது பெண் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகத் தெரிவாகியதன் மூலம் வரலாறு படைத்தவர். சந்திரிகா அல்லது சி.பி.கே. என்று பிரபல்யமாக அறியப்படும் குமாரதுங்க, 1994 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் 62 சதவீதமான வாக்குகளைப் பெற்றார்.
பிறகு, 1999 டிசம்பரில் நடைபெற்ற தேர்தலில் 51 சதவீதமான வாக்குகளுடன் மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவானார். அவர் 1994 நவம்பர் தொடக்கம் 2005 நவம்பர் வரை 11 வருடங்களாக ஜனாதிபதியாக பதவியில் இருந்தார்.
ஜனாதிபதியாகத் தெரிவாவதற்கு முன்னர் சந்திரிகா மூன்று மாதங்கள் பிரதமராகவும் பதவி வகித்தார். 1994 ஆகஸ்டில் பிரதமராக பதவியேற்றமை இன்னொரு முக்கியத்துவம் வாய்ந்த உலக சாதனையாக அமைந்தது. தந்தையையும் தாயையும் பிரதமராகக் கொண்ட ஒருவர், பிரதமராக வந்த முதல் சந்தர்ப்பமாகவும் அது வரலாற்றில் பதிவானது. அவரது தந்தையார் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1959 ஆண்டு வரை இலங்கையின் பிரதமராக இருந்தார். தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்க முதலில் 1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1965ஆம் ஆண்டு வரையும், அடுத்து 1970 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டு வரையும் பிரதமராகப் பதவி வகித்தார்.
சந்திரிகா குமாரதுங்க ஒரு பிரகாசமான, ஆனால் சர்ச்சைக்குரிய அரசியல் ஆளுமை. மக்கள் மத்தியில் ஒரு கலப்பான பிரதிபலிப்புக்களை அவர் ஏற்படுத்தினார். சிலர் அவரை நேசித்து மெச்சினார்கள் ... அதேவேளை, வேறு சிலர் அவரை வெறுத்தார்கள். சந்திரிகா செய்த காரியங்கள் பலவற்றுக்கும் செய்யாத காரியங்கள் பலவற்றுக்கும் குற்றப் பொறுப்புடையவர். மக்களினால் தேர்தல் ஒன்றில் தெரிவு செய்யப்பட்டு பதவிக்கு வந்த அரசியல் தலைவர், ஒவ்வொருவரையும் பொறுத்தவரை இது உண்மையே. தேர்தல் பிரசாரங்கள் அலங்காரக் கவிதை நடையில் இருக்கின்ற அதேவேளை, ஆட்சிமுறை கடினமான உரைநடையில் காணப்படுகிறது.
சந்திரிகா 1994 ஆம் ஆண்டில் அதிகாரத்துக்கு தெரிவு செய்யப்பட்டபோது, ஒரு சமாதானத் தேவதை என்று போற்றப்பட்டார். சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரப் போவதாகக் கூறியே அவர் மக்களிடம் வாக்குக் கேட்டார். ஜனாதிபதி சந்திரிகா தமிழீழ விடுதலைப் புலிகளுடனான கொடூரமான போரை முடிவுக்குக் கொண்டுவந்து, பேச்சுவார்த்தை மூலமாக இணக்கத் தீர்வொன்றைக் காண்பதன் மூலமாக நிலைபேறான சமாதானத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு குறுகியகால மோதல் ஓய்வுக்குப் பிறகு, போர் கவலைக்குரிய வகையில் மீண்டும் மூண்டது.
Diese Geschichte stammt aus der July 03, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
