Versuchen GOLD - Frei
பழைமை பேணும் கோட்டை நகரம்
Virakesari Daily
|July 02, 2025
இலங் இலங்கையின் தென் மேற்கு முனையில் அமைந்திருக்கிறது காலி நகரம். 16ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் கைக்கு வருமுன் கிம்கதித்த என அழைக்கப்பட்டது.
-
அப்போது காலி பிரதான துறை முகமாக விளங்கியது. டச்சு காலனித்துவ ஆட்சியின்போது காலி உச்ச அபிவிருத்தியைக் கண்டது.
இங்குள்ள பிரதான நதி ஜின்கங்கை யாகும். இது ஜிந்தோட்டவில் கடலுடன் கலக்கிறது. 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட கடற்கோளினால் (சுனாமி) காலி நகரில் பல்லாயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
கடலுக்குள் பாறைகள் இயற்கை அரணாக அமைய ஐரோப்பியர் கட்டிய கோட்டைக்கு காலி ஒரு சிறந்த உதாரணமாகும். இதில் ஐரோப்பியக் கட்டடக்கலையும் தெற்காசிய மரபுகளும் இணைந்துள்ளன. காலி கோட்டையைப் பாதுகாக்கப்பட வேண்டிய உலக புராதன இடமாக யுனெஸ்கோ 1988ஆம் ஆண்டு அங்கிகரித்துள்ளது. இக் கோட்டை இலங்கையின் பெரும்பாலான கோட்டைகள் போன்று கடலும் நிலமும் உள்ள சிறிய குடாப் பகுதியில் கட்டப்பட்டிருக்கிறது. கோட்டைக்கு அருகில் கடலில் பெரும் பாறைகள் உள்ளன.
காலியில் உள்ள வேறு முக்கியமான இடங்களாக, புனித மரியாள் பேராலயம், சிவன் கோவில், அமன்கல்ல என்னும் வரலாற்று ரீதியான உல்லாச ஹோட்டல் ஆகியன விளங்குகின்றன.
தென்னிலங்கையில் பிரதான நகரமாக விளங்கும் இந்நகரில் சுமார் ஒரு இலட்சம் பேர் வாழ்கிறார்கள். இவர்களில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாகவும் சிறுபான்மையாக முஸ்லிம்களும் மிகச் சிறிய எண்ணிக்கையில் தமிழர்களும் வசிக்கிறார்கள்.
கொழும்பில் இருந்து இந்நகரை இணைத்து மாத்தறை வரை கடலோரப் புகையிரதப் பாதை காணப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் மைதானமும் நகரின் மத்தியில் உள்ளது. காலி பழைமையைப் பேணிப் போற்றும் அதேவேளை, உல்லாசப் பயணிகளின் சொர்க்கபுரியாகவும் சர்வதேச ரீதியில் புகழ் பெற்று விளங்குகிறது.
காலிக் கோட்டைக்குக் கிழக்குப் பகுதியில் றுமஸ்ஸல்லகந்த என்ற மிகப் பெரிய மலை காணப்படுகிறது. இராமாயணத்தில் இடம்பெற்ற சில சம்பவங்களுடன் இம்மலை தொடர்புடையது என உள்ளூர் கர்ணபரம்பரைக் கதைகள் கூறுகின்றன.
Diese Geschichte stammt aus der July 02, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
