Versuchen GOLD - Frei
கல்லறை வீரர்கள்
Virakesari Daily
|June 20, 2025
மரணத்தின் பின்னர் என்ன நடக்கும்? ஆவிகள் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்திய 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புதைபொருள் அகழ்வு ரெறக்கோட்டா வீரர்கள் என அழைக்கப்படும் இந்தக் களிமண் பொம்மைகளின் வயது ஏறக்குறைய 2,500. இவற்றை சீனாவின் பண்டைய தலைநகராகிய ஷியான் நகரில், 1974 ஆம் ஆண்டு அகழ்ந்தெடுத்தார்கள்.
-
வயலொன்றில் கிணறு தோண்டும்போது, தற்செயலாக இந்த ரெறக்கோட்டா வீரர்கள் வெளிப்பட்டிருக்கின்றனர். இதுவே சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அகழ்வென்று நம்பப்படுகிறது. கி.மு 210 இல் இறந்த சீனாவின் ஷிஹுவாங் என்னும் பேரரசனின் கல்லறை இது என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சீன வரலாற்றைப் பற்றிய பல அரிய தகவல்களையும் இந்தக் கல்லறை பகிரங்கப்படுத்தியுள்ளது. அத்துடன் யுனெஸ்கோ நிறுவனத்தினால் பாதுகாக்கப்பட வேண்டிய கலாசார, பாரம்பரிய முக்கியத்துவம் பெற்ற இடமாக 1984 இல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் அகழ்வாராய்ச்சிகள்
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதற்கொண்டு சீனஇராட்சியத்தை ஆட்சி செய்த 13 அதிமுக்கிய சீன வம்சங்களின் ஆட்சியின் போது ஷியான் நகரம்தான் தலைநகராக இருந்திருக்கிறது. சென்ஸி மாநிலத்திலுள்ள லிஸான் மலைக்கு வடக்கே ஷியான் நகர் அமைந்துள்ளது. இங்கு பல கல்லறைக் கட்டடங்கள் காணப்படலாம் என நம்பப்படுவதால் லிஸான் மலையை அண்டிய பகுதிகளில் தற்போதும் அகழ்வாராய்ச்சிகள் நடந்து வருகின்றன.ஆவிகள் அழிவதில்லை
பொதுவாக மனிதன் இறந்த பின் அவனுடைய ஆவி அழிவதில்லை என்ற நம்பிக்கையின் அடிப்படையில் பண்டைக்கால மனிதர்கள் மரணச் சடங்குக்குப் பெரும் முக்கியத்துவம் அளித்தனர். அரசன் இறக்கும்பொழுது, அவனது மெய்க்காவலர்கள் மற்றும் படையிலேயே மிகச்சிறந்த 100 -300 வீரர்களை உயிரோடு அடக்கம் செய்து விடுவர். மன்னனின் மறுமையிலும் இவர்களே காத்து நிற்க வேண்டும் என்ற நோக்கோடு காலங்காலமாய் நடந்து வந்த வழக்கம் இது. இந்த நம்பிக்கையில் உருவாகிய கல்லறை சிற்பக்கலை, ஓவியம், எழுத்து வளர்ச்சி, சிற்பம், சிலைவடித்தல் முதலிய பல்வேறு பண்டைக்கால கலைகளைப் பிரதிபலிக்கும் கட்டடங்களாக இன்று திகழ்கின்றன. இயற்கை நில அமைவைப் பயன்படுத்தி மலைப்பகுதிகளைச் சார்ந்து கல்லறை கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நான்கு பக்கங்களும் சுவரால் கட்டப்பட்டுள்ள கல்லறைகளுக்கு நான்கு பக்கங்களிலும் நுழைவாயில்கள் உள்ளன. நான்கு மூலைகளிலும் முக்கோண வடிவிலான சிறிய கட்டடங்களும் உள்ளன.
கல்லறை வீரர்கள்
Diese Geschichte stammt aus der June 20, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

