Versuchen GOLD - Frei
பண்டைய ராஜதானியாக விளங்கிய பொலன்னறுவை நகரம்
Virakesari Daily
|June 17, 2025
பண்டைய இலங்கையின் (கி.பி. 846– 1302) இரண்டாவது பெரிய தலைநகராக விளங்கியது பொலன்னறுவையாகும். அக்காலத்தில் இந்நகர் 6 கி. மீட்டர் சுற்று வட்டமான உறுதியான சுவரினால் பாது காக்கப்பட்டது.
-
இலங்கையின் மிக நீளமான மகாவலி நதி மீதான அனைத்து குறுக்குப் பகுதி களும் இந்நகரின் கட்டுப்பாட்டில்தான் இருந்தன. பொலன்னறுவையில் உள்ள பரந்துபட்டதும் நன்கு பேணப்படுவதுமான இடிபாடுகள், பண்டைய இலங்கையின் சிறப்பை எடுத்துக் கட்டுபவையாக விளங்குகின்றன. இவற்றில் சில சிறப்பு வாய்ந்த இடங்களும் அடங்கும்.
அரச மாளிகைகள் மற்றும் பௌத்த ஆலயங்களின் அழிவுச்சின்னங்கள், அரச மாளிகைக் கட்டடங்கள், ரான்கொட் விகாரை, லங்காதிலகே கிரி விகாரை, கல் விகாரை, பொலன்னறுவை வட்ட தந்த இல்லம், (வதடகே), சிவன் கோவில், அலகான பிரிவேனா ஆகியவை இந்த அழிவுற்ற சின்னங்களில் சிலவாகும்.
ஒருநாள் அதிகாலையில் புறப்பட்டால் அன்றே இந்த நகரின் முக்கியமான நினைவுச் சின்னங்களைப் பார்த்து விட முடியும்.
தற்போதைய பொலன்னறுவை நகரத்துக்கு வடக்காக, கண்டிக்கு 90 மைல் வடக்காக பொலன்னறுவையின் புராதன அழிவுச் சின்னங்களைப் பார்க்க முடியும். இது கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் இருந்து உள்ளதாகும். அக்கால கட்டத்தில் சோழ அரசர்கள் இலங்கையில் படை எடுப்பை நடத்தி அநுராதபுர நகரைத் தாக்கினர்.
பின் பொலன்னறுவையைக் கைப்பற்றினர்.
1070 ஆம் ஆண்டு றுகுணு பிரதேச இளவரசன் கீர்த்தி, திராவிடர்களைப் போரில் வென்று, அவர்களைத் துரத்தி இலங்கையை விஜயபாகு என்ற பெயரில் ஆண்டான். அநுராதபுரம் பாதுகாப்பற்றது என அவன் தனது இராசதானியாகப் பொலன்னறுவை நகரை ஆக்கிக் கொண்டான்.
அவனது காலத்தில் ஏராளமான ஆலயங்கள், மாளிகைகள், பூங்காக்கள், தோட்டங்கள் மற்றும் பிரமாண்டமான வாவிகள் அங்கு கட்டப்பட்டன. இருப்பினும் 10 ஆம் நூற்றாண்டளவில் தமிழ் அரசர்கள் அடிக்கடி போரிடத் தொடங்கியதால் சிங்கள ராஜதானிகள் கோட்டே, கண்டி ஆகிய இடங்களுக்கு மாற்றப்பட்டன.
பெயர் பெற்ற பிரமாண்டமான பராக்கிரமபாகு நீர்த்தேக்கமும் பொலன்னறுவையில் தான் உள்ளது.
அழிவடைந்த அரச மாளிகைக் கட்டடத் தொகுதியின் நடுவில் பராக்கிரம பாகு மன்னன் கி.பி. (1164-1196) கட்டிய அரச மாளிகையின் சிதைவுகள் காணப்படுகின்றன. அது 7 மாடிகள் உயரம் கொண்ட மரத்திலும் கல்லிலுமான மிகப் பெரும் கட்டிடமாகும். தரை 100 அடி நீளமும் 43 அடி அகலமும் கொண்டது. மேல் தளங்கள் மரத்தினால் ஆனவை. ஆனால், மிகப் பெரிய 10 அடிகளும் உள்ள கீழ் சுவர் மட்டுமே இன்றும் உள்ளது.
Diese Geschichte stammt aus der June 17, 2025-Ausgabe von Virakesari Daily.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size
