Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr
The Perfect Holiday Gift Gift Now

சங்கப் புலவரின் சான்றாண்மை

Dinamani Vellore

|

July 20, 2025

பரிசில் பெற்று வாழும் சங்கப் புலவர்கள் புரவலர்களை வாழ்க்கையரேனும் எவர்க்கும் அஞ்சாது யாண்டும் மெய்யே கூறி அறம் நிலைக்கச் செய்யும் சான்றோராக விளங்கியதைப் புறநானூறு சிறப்பாகக் கூறும்.

- முனைவர் கா.ஆபத்துக்காத்தபிள்ளை

அத்தகையோர் தங்களைப் பாடுவதைப் பெரும்பேறாக மன்னர்கள் கருதினர்; புலவரால் பாடப்பெற்றால் வீடுபேறு கிட்டும் என நம்பினர். 'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வானவூர்தி எய்துப (புறம் 24-28) என்ற பாடல் வரிகளே அதற்குச் சான்றாகும். புலவர் பிசிராந்தையார் யாண்டு பலவாக நரையின்றி வாழ்நற்கு கூறும் பல காரணங்களுள் 'ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே' (புறம். 191 வரி 6-7) என்பதை தலையாயக் காரணமாகக் கூறுவார். சான்றோர் பெருமையை இது உணர்த்தும். இத்தகு சான்றோருள் ஒருவராகத் திகழ்ந்தவர் கோவூர்கிழார் எனும் புலவர் பெருமகனார்.

அவர் காலத்தில் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவேந்தர்களும் தமிழகத்தைத் தங்களுக்கே உரிமையானது என்ற தன்னல உணர்வுகொண்டு வாழ்ந்தனர். சிலசமயம் ஒரே குலத்தவரே தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதும் உண்டு. அவ்வகையில் சோழன் நலங்கிள்ளியையும் சோழன் நெடுங்கிள்ளியையும் குறிக்கலாம். இருவரும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டனர். அவர்களை அமைதிப்படுத்தி உயிர்களைச் சாவிலிருந்து மீட்க புலவர் கோவூர்கிழார் அம்மன்னர்களிடம் சென்று நாட்டில் அமைதி ஏற்படுத்த முனைந்ததைப் புறநானூறு 44 மற்றும் 45-ஆம் பாடல்களில் அறிய முடிகிறது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Vellore

Dinamani Vellore

1 லட்சம் சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி

மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சார்ஜிங் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Vellore

மனப்பிறழ்வும்...சமூகப் பிறழ்வும்!

உலகில் கவலையற்ற மனிதர்களாக இருப்போர் யார் என்றால் ஞானிகள், மனநலன் பாதித்தோர், குழந்தைகள் என்று கூறுவது உண்டு.

time to read

2 mins

December 20, 2025

Dinamani Vellore

4 நாள் சரிவுக்குப் பின் பங்குச் சந்தை உயர்வு

நவம்பரில் அமெரிக்க நுகர்வோர் விலைப் பணவீக்கம் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததால் அந்த நாட்டு மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை குறைக்கும் என்ற நம்பிக்கை மேலும் வலுப்பெற்று உலக சந்தைகளில் ஏற்பட்ட உயர்வுக்கு ஏற்பவும் புதிய அந்நிய முதலீட்டு வரவும் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் நான்கு நாள் சரிவுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 20, 2025

Dinamani Vellore

Dinamani Vellore

பெண்ணையாறு வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

பெண்ணையாறு விவகாரத்தில் கர்நாடக அரசு விதிகளை மீறி செயல்படுவதாக குற்றஞ்சாட்டியும், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது.

time to read

1 mins

December 20, 2025

Dinamani Vellore

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.

time to read

1 min

December 20, 2025

Dinamani Vellore

தங்கம் பவுனுக்கு ரூ.480 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.

time to read

1 min

December 20, 2025

Dinamani Vellore

மக்களிடமிருந்து துப்பாக்கிகளைத் திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு

பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி

time to read

1 min

December 20, 2025

Dinamani Vellore

கரூர் சம்பவம்: நெரிசல் ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு ஆய்வு

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையக் குழுவினர் வெள்ளிக்கிழமை கரூருக்கு வந்து ஆய்வு செய்தனர்.

time to read

1 min

December 20, 2025

Dinamani Vellore

பி.ஆர்.பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்திவைப்பு

ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை சேதப்படுத்திய வழக்கில், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட 13 ஆண்டுகள் சிறைத் தண்டனையை நிறுத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

December 20, 2025

Dinamani Vellore

புதிய ஊரக வேலை திட்டம்: டிச. 24-இல் திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டத்துக்கு மாற்றாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள புதிய ஊரக வேலை திட்ட மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி தமிழகம் முழுவதும் கூட்டணிக்கட்சிகளுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

time to read

1 min

December 20, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back