Versuchen GOLD - Frei

தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!

Dinamani Thoothukudi

|

August 29, 2025

சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.

- முனைவர் வைகைச்செல்வன்

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். இது தமிழர்களுக்கு பெருமைக்குரிய தருணம்.

'இண்டி' கூட்டணி குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதர்சன் ரெட்டியை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து குடியரசு துணைத் தலைவர் தேர்தல் உறுதியாகி உள்ளது. இது சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல். எனவே, அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து ஒரு வேட்பாளரைத் தேர்வு செய்துள்ளன என்று 'இண்டி' கூட்டணி தரப்பு தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ் பின்னணியில் இருந்து வந்தவர்; பாஜகவில் 40 ஆண்டு காலமாக ஊறித் திளைத்தவர் சிபிஆர் என்று திமுக விமர்சிக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அவர்களில் இருந்துதானே ஒருவரை நியமிக்க முடியும் என்பதை நாம் எளிதில் மறந்து விடக்கூடாது. 2002-ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் திமுக இடம்பெற்றிருந்தபோது, ஆர்.எஸ்.எஸ் பின்னணியுடைய ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் பைரோன் சிங் ஷெகாவத்தைக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் ஆதரித்து வெற்றி பெறச் செய்தபோது, கொள்கை ஞானோதயம் திமுகவுக்கு ஏற்படாதது ஏன்?

தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தமிழர்கள் வாக்களிப்பது ஒரு சித்தாந்த மோதல் என்று அவர்கள் தரப்பு சொல்வதை, எந்தவொரு தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். தமிழ்நாட்டின் மீதும், தமிழ் மொழியின் மீதும், தமிழ்நாட்டின் மதிப்பீடுகள் மீதும், தமிழக மக்கள் மீதும் அக்கறை கொண்டவர்கள் ஒரு தமிழனின் உயர்வைத் தட்டிப் பறிக் கிற தேர்தல் போட்டியை ஏற்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Thoothukudi

சோம்நாத் - சுயமரியாதைப் பெருவிழா

ஆயிரம் ஆண்டுகளின் அணையாத நம்பிக்கை (1026-2026)

time to read

1 mins

January 05, 2026

Dinamani Thoothukudi

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: போட்டி ஏற்பாடுகள் தொடக்கம்

மதுரை அவனியாபுரத்தில் வருகிற 15-ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Thoothukudi

வடலூர் தருமசாலையில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை

கடலூர் மாவட்டம், வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய வளாகத்தில் உள்ள தருமசாலை அருகே ஞாயிற்றுக்கிழமை புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

time to read

1 min

January 05, 2026

Dinamani Thoothukudi

ஜி.டி.நாயுடு ஆவண இணையப் பக்கம் தொடக்கம்

அறிவியல் அறிஞர் ஜி.டி. நாயுடுவின் அரிய ஆவணங்கள் அடங்கிய சிறப்பு இணையப் பக்கத்தை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.

time to read

1 min

January 05, 2026

Dinamani Thoothukudi

தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ஆய்வு

திருநெல்வேலியில் தாமிரவருணி ஆறு பகுதிகளில் நீர்ப் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.

time to read

1 mins

January 05, 2026

Dinamani Thoothukudi

மதுரையில் ஜன.7-இல் புதிய தமிழகம் கட்சி மாநாடு

புதிய தமிழகம் கட்சியின் 7-ஆவது மாநில மாநாடு வரும் ஜன.

time to read

1 min

January 05, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

தனியார் அணுமின் உற்பத்திச் சட்டம்: குறைகள் களையப்பட வேண்டும்

அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா அண்மையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டது.

time to read

2 mins

January 05, 2026

Dinamani Thoothukudi

பணம் உள்ளே... ஜனம் வெளியே...

எவ்வளவு பணம் செலவழித்து இந்தப் பொருளை வாங்கத்தான் வேண்டுமா என்று சாமானிய மனிதன் யோசிக்கிறான்.

time to read

3 mins

January 05, 2026

Dinamani Thoothukudi

வெளிநாட்டு நன்கொடை முறைகேடு வி.டி.சதீசனுக்கு எதிராக சிபிஐ விசாரணை: கேரள ஊழல் தடுப்பு பிரிவு பரிந்துரை

கேரளத்தில் 'புனர்ஜனி' எனும் மறுவாழ்வு திட்டத்துக்காக வெளிநாட்டு நன்கொடை திரட்டியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக காங்கிரஸைச் சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் மீது மாநில லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு குற்றஞ்சாட்டியுள்ளது.

time to read

1 mins

January 05, 2026

Translate

Share

-
+

Change font size