Versuchen GOLD - Frei
வாசக ஞானம் வளர...
Dinamani Namakkal
|November 10, 2025
பொதுவாக, வாசிப்புத் திறன் குறைந்து விட்டது என்று வருத்தப்படுபவர்கள் அதற்காக மாற்று நடவடிக்கை என்ன எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், தனி நபர்கள், நிறுவனங்கள் தன்னளவில் செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. வாசிப்பில் ஆர்வம் உடைய நண்பர் ஒருவர் எப்போதும் தன் வரவேற்பறையில், நாளிதழ்களை, வார, மாத இதழ்களை வாங்கி வைத்திருப்பார். தேவையான நேரங்கள் தவிர, தொலைக்காட்சிப் பெட்டி அவர் வீட்டில் ஒளிர்வதே இல்லை.
வந்திருப்பவர்கள் அவசர, அவசியமின்றி, கைப்பேசியைப் பயன்படுத்தினால் ஒழிய அதை அவர் நாகரிகமாகத் தவிர்க்கச் சொல்லிவிடுவார். ஆர்வத்தோடு இதழ்களைப் படிப்பவர்களுக்கு அவகாசம் அளிப்பார்; தேவையெனில், வீட்டுக்குச் சென்று படித்து விட்டுத் தரவும் இசைவார்.
எழுத்தாள நண்பர் ஒருவர், 'திண்ணை நூலகம்' ஒன்றையே தன் வீட்டில் நிறுவிச் செயல்படுத்தி வருகிறார். அழ.வள்ளியப்பாவின் புதல்வி தேவிநாச்சியப்பன், சிறுவர் சங்கத்தின் மூலமாக மாதம் ஒரு முறை தமது இல்லத்தில் சிறார்களையும் பெற்றோரையும் இணைத்து, பேசவும் நடிக்கவும் சொல்லவும் செய்து வருகிறார்.
இதுபோல், இலக்கிய ஆர்வம் உடைய மருத்துவர்கள், ஜோதிடர்கள், பொதுமக்கள் தொடர்புடைய தனியார் நிறுவனங்கள் அமைத்திருப்பவர்கள் தங்களின் வரவேற்பறையில் காத்திருப்பவர்களுக்காக நாளிதழ்களையும், பருவ இதழ்களையும், நூல்களையும் வைத்திருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
நாள்தோறும் நாளிதழ்களை வாங்கி வாசகர்களின் நேரத்தைப் பயனுள்ள வகையில் ஆக்கிக் கொள்ள உதவும் 'மெஸ்களும்' இருக்கின்றன. சில நாள்களில் மதிய உணவு வேளைகளில், சோறு தீர்ந்துவிட்ட நிலையில் மறு உலைவைத்து ஆகும் வரை பொறுத்திருந்து உண்பவர்களாக வாடிக்கையாளர்கள் காத்திருப்பதையும் பார்த்திருக்கிறேன். அந்த வேளைகளில் அவர்களது பொறுமைக்கும் பசிக்கும் விருந்தளிப்பதாக, தினமணி உள்ளிட்ட நாளிதழ்கள் வைக்கப் பெற்றிருக்கின்றன. புதுவை மெஸ் ஒன்றில், இந்த வழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.
'காலை வேளையில் இல்லப் பணிகள், அலுவலகத்துக்குக் கிளம்புதல் ஆகிய நெருக்கடிகளுக்கு மத்தியில் நாளிதழ்களைப் படிக்க நேரம் கிடைப்பதில்லை. மாலைக்குப் பிறகு, அன்றையச் செய்திகள் பழையதாகி விடுகின்றன. எனவே, மதிய வேளையில் உணவுக்கு இடையில், செய்திகள் படிக்க ஏதுவாக இந்தச் சூழல் இருக்கிறது' என்கிறார் வாடிக்கையாளர் ஒருவர்.
'தொடங்கிய காலத்தில், அதிகம் செய்தித் தாள்கள் கிடைக்காத போது, அவற்றைப் படிப்பதற்காகவே, எங்கள் மெஸ்ஸுக்கு வருவார்கள். அப்போது தொடங்கிய பழக்கம், இப்போதும் நடைமுறையில் உள்ளது' என்று அந்த மெஸ் உரிமையாளர் குறிப்பிடும்போது, ஒருவிதப் பெருமிதம் அவர்தம் முகத்தில் தவழ்ந்தது.
Diese Geschichte stammt aus der November 10, 2025-Ausgabe von Dinamani Namakkal.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Namakkal
Dinamani Namakkal
உத்தரகண்ட் முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரி காலமானார்
உத்தரகண்ட் முன்னாள் முதல்வரும், பாஜக முதுபெரும் தலைவருமான புவன் சந்திர கந்தூரி, வயது மூப்பு சார்ந்த உடல் நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 91.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மே 25 வரை மழைக்கு வாய்ப்பு
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
பாகிஸ்தான் டெஸ்ட் தொடர்: வெல்லும் முனைப்பில் வங்கதேசம்
பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. இதனால் 2 ஆட்டங்கள் தொடர் முழுவதுமாக அந்த அணியின் வசமாகலாம் எனத் தெரிகிறது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை
இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.
1 mins
May 20, 2026
Dinamani Namakkal
பாமக கொள்கையும், தவெக கொள்கையும் ஒன்றுதான்!
பாமகவின் கொள்கைகளும், தவெகவின் கொள்கைகளும் 90 சதவீதம் ஒன்றாகவே உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
மேற்கு வங்க ஃபால்டா பேரவைத் தொகுதி மறுதேர்தல்: 'போட்டியில் இருந்து விலகுவதாக' திரிணமூல் வேட்பாளர் அறிவிப்பு
மேற்கு வங்க மாநிலம் ஃபால்டா பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள மறுதேர்தலில் போட்டியிடாமல் விலகுவதாக திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் ஜஹாங்கீர் கான் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
ஆபத்தான தெரு நாய்கள் கருணை கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி
வெறி நாய்கள், குணப்படுத்த முடியாத அளவுக்கு நோய் பாதிப்புக்கு உள்ளான நாய்கள், ஆபத்தான தெருநாய்களை கருணைக் கொலை செய்ய முதல்முறையாக அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக மக்களவை தலைவரிடம் விசாரணைக் குழு அறிக்கை
தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் விசாரணை குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
1 min
May 20, 2026
Dinamani Namakkal
அணுமின் உற்பத்தியில் தனியார் நிறுவனங்கள்: அச்சத்தைப் போக்க முயற்சிக்கப்படும்
அணுசக்தி விபத்தால் ஏதேனும் துரதிருஷ்டவசமான சம்பவம் ஏற்பட்டால், அதற்கு இழப்பீடு நிர்ணயிக்க நீதிமன்றங்களுக்கு உள்ள அதிகாரம் தொடர்பான அச்ச உணர்வைப் போக்க முயற்சிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2 mins
May 20, 2026
Dinamani Namakkal
வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்
ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்
1 mins
May 20, 2026
Listen
Translate
Change font size

