The Perfect Holiday Gift Gift Now

அறிவின் அமுதூற்று ‘நூலகம்’!

Dinamani Karur

|

August 12, 2025

மக்களைக் கொன்றால் ஒரு தலைமுறையைத்தான் அழிக்க முடியும்; அதேநேரத்தில், நூலகங்களை அழித்தால் ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிட முடியும். அதைத்தான் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் செய்தார்கள்.

- ஔவை ந. அருள்

இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தேசிய நூலக தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக, ஒரு நாட்டின் நூலக வளர்ச்சியைக் கொண்டே அந்த நாட்டின் அறிவுச் செழுமை அளவிடப்படுகிறது. இந்தியாவில் தற்போது எங்கெங்கும் தேர்வுப் பயிற்சிக் களங்களும், உயர் பதவி தேர்வுக்கூடங்களும் பரவியிருக்கின்றன. அந்த மாணவர்களுக்கு விருந்தோம்புகைகளாக நூலகங்கள்தான் மிளிர் கின்றன. எங்கள் நூலகத்தை எந்த நேரமும் நாங்கள் மூடுவதில்லை என்று அறிவிக்கும் நூலகங்கள் வளர்ந்து வருகின்றன.

நடமாடும் நூலகங்கள் வீதி முனைகளில் நிற்பதெல்லாம் நமக்குப் பெருமையாக இருக்கிறது. நூலக விழாக்கள், நூலக இதழ்கள் பெருகி வருகின்றன. புத்தகங்கள் படிப்பது மூளைக்கு நலமளிக்கக்கூடிய ஒன்று. புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கும், அறிவாற்றலைப் பெருக்கிக்கொள்ளவும், சவால்களை எதிர்கொள்வதற்கும், எழுத்தாளராக உருவாகவும், வெளிப்படையான அறிவார்ந்த உரையாடல்கள் நடத்தவும் புத்தகங்கள் படிப்பது அவசியமாகிறது.

கி.மு. 300-ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் அருமை-பெருமைகளைக் கேட்டு வியந்த மாவீரன் அலெக்சாண்டர், எகிப்தின் எழிலில் மயங்கி ‘அலெக்சாண்டிரியா’ என்ற நகரை உருவாக்கினார். அங்குதான் மிகப் பெரிய நூலகத்தை எழுப்பினார். உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களை எல்லாம் திரட்டி 10 லட்சம் புத்தகங்களை அந்த நூலகத்தில் வைத்தார்.

அந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காகவே உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் அலெக்சாண்டிரியாவுக்கு வந்தனர். அங்கிருந்துதான் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் தத்துவங்கள், விஞ்ஞானம், அளவையியல், புவியியல், சமய தத்துவார்த்தங்கள் பரவத் தொடங்கின.

எகிப்தியர்கள் பாப்பிரஸ் (தருப்பை) புல்லில் தயாரிக்கப்பட்ட ஏடுகளில் எழுதி அலெக்சாண்டிரியாவில் இருந்த நூலகத்தில் சேமித்து வைத்திருந்தனர். ரோமானியர்களில் புகழ்வாய்ந்த ஜூலியஸ் சீசர், ரோம் நாட்டில் வாழ்ந்த வசதியானவர்களிடம் நன்கொடை வாங்கி பொது நூலகங்களை அமைத்தார். கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இப்படி 28 பொது நூலகங்கள் நிறுவப்பட்டிருந்தன.

WEITERE GESCHICHTEN VON Dinamani Karur

Dinamani Karur

எல்லாவற்றையும் வாசியுங்கள்

தமிழைக் கற்காமலேயே தமிழ்நாட்டில் பட்டங்கள் பெறமுடியும்.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிக்க இரு மாத சிறப்பு திட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, காலாவதியான தனிநபர் பாலிசிகளைப் புதுப்பிப்பதற்கான இரு மாத சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

பிரயாக்ராஜ் மார்கழி மேளா தொடக்கம்

லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

Dinamani Karur

நீரில் விழுந்த நெருப்பு!

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தும் இந்த உலகின் அல்லது பிரபஞ்சத்தின் அடிப்படையான மூலப் பொருள்கள் எனப்படுகின்றன.

time to read

1 mins

January 04, 2026

Dinamani Karur

வருடச் சிவந்த மலரடிகள்

சைவ வைணவ சமயங்கள் தங்கள் இறைவனை மனைவி மக்களோடு வாழ்பவனாகவே காட்டியுள்ளன.

time to read

2 mins

January 04, 2026

Dinamani Karur

அசல் பட்டு... தங்கத்துக்கு நிகர்!

“பட்டு என்பது தூய்மை, தெய்வீகத்தின் அடையாளம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

வங்கதேச வீரர் முஸ்தபிஸுர் ரஹ்மானை விடுவித்தது கேகேஆர்

பிசிசிஐ உத்தரவு எதிரொலி

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

எம்பியை ஈங்குப் பெற்றேன்!

உடன்பிறந்தோரின் பாசத்தை பல்வேறு தமிழ் இலக்கியங்களில் நாம் பார்த்து வருகிறோம்.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

யுனைடெட் கோப்பை: வாவ்ரிங்கா வெற்றி தொடக்கம்

யுனைடெட் கோப்பை டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் ஆர்தரை வீழ்த்தி முதல் வெற்றியை ஈட்டியுள்ளார் நிகழ் சீசனுடன் ஓய்வு பெறவுள்ள சுவிட்சர்லாந்தின் ஸ்டேன் வாவ்ரிங்கா.

time to read

1 min

January 04, 2026

Dinamani Karur

ஃபோர்ஸ் மோட்டார்ஸ் விற்பனை 49% உயர்வு

முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஃபோர்ஸ் மோட்டார்ஸின் மொத்த விற்பனை கடந்த டிசம்பர் மாதம் 49 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

January 04, 2026

Translate

Share

-
+

Change font size