Versuchen GOLD - Frei
ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி!
Dinamani Karur
|May 19, 2025
2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமர் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.
நூறு ஆண்டுகள் நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பிறகு, 1947-இல் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. ஆனால், இவ்வளவு பெரிய நாட்டை, இயற்கை வளம், அறிவாற்றல், ஆன்ம பலம் உள்ள மக்களைக் கொண்ட நாட்டை, அப்படியே கொடுத்தால் உலக வல்லரசாகி விடுவார்கள் என பிரிட்டன் காலனிய அரசு நினைத்தது. அதனால்தான், முஸ்லிம்களுக்காக தனி நாடு வேண்டும் என்ற, 'முஸ்லிம் லீக்'கின் கோரிக்கையை ஏற்று, இந்தியாவை இரண்டாகப் பிளந்தனர். முஸ்லிம்களுக்காக பாகிஸ்தான் என்ற நாடு உருவாக்கப்பட்டது.
இதனால், பாகிஸ்தான் பகுதியில் இருந்து பல கோடி ஹிந்துக்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். பல லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டனர். இதனால், ஆனந்தக் கண்ணீரோடு பெற வேண்டிய சுதந்திரத்தை, ரத்தக் கண்ணீரோடு பெற்றோம்.
சுதந்திர இந்தியாவின் முதல் துணைப்பிரதமராக, உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற சர்தார் வல்லபபாய் படேலின் உறுதியான நடவடிக்கையால் இன்றைய இந்தியா கட்டமைக்கப்பட்டது. ஆனால், காஷ்மீரின் ஒரு பகுதியை ஆயுதமேந்திய கும்பலை அனுப்பி பாகிஸ்தான் ஆக்கிரமித்துக் கொண்டது. அத்துடன் நிற்காமல் இந்தியாவின் பிரிக்க முடியாததொரு அங்கமான காஷ்மீர் பள்ளத்தாக்கையும் அபகரிக்கும் நோக்கத்தில் அன்று முதல் இன்று வரையில் பயங்கரவாத செயல்களை அங்கே பாகிஸ்தான் அரங்கேற்றி வருகிறது.
'இந்தியாவுடன் நேரடியாக மோதி, ஒரு நாளும் வெல்ல முடியாது' என்பது பாகிஸ்தான் அரசுக்கும், ராணுவத்துக்கும் தெரியும். அதனால்தான், பல பயங்கரவாதக் குழுக்களுக்கு பணம், ஆயுதம், பயிற்சி கொடுத்து அவர்கள் வாயிலாக காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்து வருகிறது.
பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்கும்போதெல்லாம், இந்திய அரசு அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கும். ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளிடம், பாகிஸ்தானின் பயங்கரவாதப் பின்னணியை ஆதாரங்களோடு அம்பலப்படுத்தும். உலகின் பல முக்கிய நாடுகளிடமும், பயங்கரவாதச் செயல்களுக்கு பாகிஸ்தான் துணை நின்றதற்கான ஆதாரங்களை வழங்கும்.
Diese Geschichte stammt aus der May 19, 2025-Ausgabe von Dinamani Karur.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Karur
Dinamani Karur
ஹெச்சிஎல் நிகர லாபம் 11% சரிவு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்கின் நிகர லாபம் கடந்த டிசம்பர் காலாண்டில் 11.2 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
January 14, 2026
Dinamani Karur
காலிறுதியில் பஞ்சாப், விதர்பா வெற்றி
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3 மற்றும் 4-ஆவது காலிறுதி ஆட்டங்களில் முறையே பஞ்சாப், விதர்பா அணிகள் செவ்வாய்க்கிழமை வெற்றி பெற்றன.
1 min
January 14, 2026
Dinamani Karur
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் செயல்பட்ட 42 தங்கும் விடுதிகளுக்கு ‘சீல்’
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 42 தங்கும் விடுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை 'சீல்' வைக்கப்பட்டது.
1 min
January 14, 2026
Dinamani Karur
சீனாவைச் சேர்ந்த ஆபரேட்டர்களால் சைபர் மோசடி: 8 பேர் கும்பல் கைது
தமிழகப் பெண் புகாரில் நடவடிக்கை
1 min
January 14, 2026
Dinamani Karur
நியூஸிலாந்துடன் இன்று 2-ஆவது ஆட்டம் ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
இந்தியா - நியூஸிலாந்து மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டம் குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் புதன்கிழமை (ஜன.
1 min
January 14, 2026
Dinamani Karur
அரசியல் சாசனத்தின் போதாமைகள் இவை..!
அண்மையில் நடிகர் விசயின் படம் தணிக்கைக் குழுவால் நிறுத்தப்பட்ட போது, அது உயர்நீதிமன்றம் வரை சென்று, ஈரிருக்கை நீதிமன்றத்தின் கேட்பு நிலையில் தற்போது இருக்கிறது!
2 mins
January 14, 2026
Dinamani Karur
அரையிறுதியில் கர்நாடகம், சௌராஷ்டிரம்
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் கர்நாடகம், சௌராஷ்டிரம் அணிகள் அரை யிறுதி ஆட்டத்துக்கு திங்கள்கிழமை முன்னேறின.
1 min
January 13, 2026
Dinamani Karur
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
January 13, 2026
Dinamani Karur
பெண்கள் ஆபாசமாக சித்தரிப்பு குரோக் ஏஐ-க்கு எதிராக பிரிட்டனில் விசாரணை
தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான எக்ஸ்-ஏஐ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலியான குரோக், பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து பிரிட்டனின் ஒழுங்காற்று அமைப்பான தகவல் அலுவலகம் (ஆஃப்காம்) திங்கள்கிழமை விசாரணை தொடங்கியுள்ளது.
1 min
January 13, 2026
Dinamani Karur
மாற்றத்தைப் பார்வையில் தொடங்குவோம்!
சமூகத்தின் அசைக்க முடியாத அடித்தளம் கல்வி.
2 mins
January 13, 2026
Translate
Change font size
