Facebook Pixel மதுரையில் சுந்தரராஜப் பெருமாள் தசாவதாரம்: விடிய விடிய பக்தர்கள் தரிசனம் | Dinamani Kanyakumari – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com
Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr

Versuchen GOLD - Frei

மதுரையில் சுந்தரராஜப் பெருமாள் தசாவதாரம்: விடிய விடிய பக்தர்கள் தரிசனம்

Dinamani Kanyakumari

|

May 15, 2025

மதுரை அழகர் கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை, மே 14:

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகர் பச்சைப் பட்டுடுத்தி தங்கக் குதிரை வாகனத்தில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை வைகையாற்றில் எழுந்தருளினார். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, தீர்த்தவாரி நடைபெற்றது. அப்போது, அழகர் வேடமிட்ட பக்தர்கள் சுவாமி மீது தண்ணீர் பீய்ச்சி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து, அன்று பகல் 12 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் அழகர் எழுந்தருளினார். பின்னர், பிற்பகல் 3 மணிக்கு அங்கிருந்து புறப்பாடாகி பல்வேறு மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து, அன்றிரவு அழகர் வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலைச் சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனமாகினார்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை காலை சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு, அழகர் சேஷ வாகனத்தில் சுந்தரராஜப் பெருமாள் திருக்கோலத்தில், வண்டியூர் வைகையாற்றின் மையத்தில் அமைந்துள்ள தேனூர் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்வும், நாரைக்கு முக்தி அளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, கருட வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ராமராயர் மண்டபத்தில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினார். அங்கு சிறப்பு திருமஞ்சன அலங்காரத்துக்குப் பிறகு, நள்ளிரவு 12 மணிக்கு தசாவதார நிகழ்வு தொடங்கியது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

ஊழல் ஒழிப்பு - தொலைநோக்கு கடமை!

இது எந்த உழைப்பும் இல்லாமல், எந்தத் தொழிலும் செய்யாமல் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே சேர்க்கப்படும் திருட்டுப் பணம்.

time to read

3 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

time to read

1 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு

நார்வேயில் பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பின்போது இந்தியா மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டை எழுப்ப முயன்ற விவகாரத்தில், இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

time to read

1 min

May 20, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

பொதுக் குழுவைக் கூட்டினால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு

சி.வி.சண்முகம் திட்டவட்டம்

time to read

1 min

May 20, 2026

Dinamani Kanyakumari

மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை

அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ்

time to read

1 min

May 20, 2026

Dinamani Kanyakumari

இந்தியாவும் இத்தாலியும்: இந்தோ-மத்தியதரைக் கடலுக்கான ஓர் உத்திசார் கூட்டாண்மை

இந்தியாவுக்கும் இத்தாலிக்கும் இடையிலான உறவு தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

time to read

1 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

Dinamani Kanyakumari

வகுப்பறையில் மாணவர்கள் அதிகம் பேச வாய்ப்பளிக்க வேண்டும்

ஆசிரியர்களுக்கு அமைச்சர் ராஜ்மோகன் வலியுறுத்தல்

time to read

1 mins

May 20, 2026

Dinamani Kanyakumari

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Kanyakumari

தென் கொரிய எல்லையில் கடும் பாதுகாப்பு

வட கொரிய அதிபர் உத்தரவு

time to read

1 min

May 19, 2026

Dinamani Kanyakumari

வேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் தமிழக அரசு நடவடிக்கை

நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், வரும் புதன்கிழமை (மே 20) வேலைநிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், தமிழகத்தில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Translate

Share

-
+

Change font size