Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Mit Magzter GOLD unbegrenztes Potenzial nutzen

Erhalten Sie unbegrenzten Zugriff auf über 9.000 Zeitschriften, Zeitungen und Premium-Artikel für nur

$149.99
 
$74.99/Jahr
The Perfect Holiday Gift Gift Now

என்று முடியும் இந்த 'ரீல்ஸ்' மோகம்?

Dinamani Dharmapuri

|

July 17, 2025

இருபொருள் தொனிக்கும் ஆபாச உரையாடல்களும், பொதுவெளியில் பேசத் தயங்கும், பேசவே முடியாத அருவருக்கத்தக்க சொல்லாடல்களைக் கூச்சமின்றி அப்பட்டமாக அப்படியே பதிவிடும் அநாகரிகமும் விநாடிக்கு விநாடி பெருகி வருகின்றன.

- கிருங்கை சேதுபதி

ரவு, பகல் பாராமல், ஏன் இரவு பகல் வேறுபாடுகள்கூடத் தெரியாமல் கைப்பேசிக்குள் கண் புதைத்து வாழ்வோர் பெருகிய காலமாக மாறி வருகிறது. அதிலும், அண்மைக்காலமாக, சிறியோர் முதல் பெரியோர் வரை, 'ரீல்ஸ்' மோகத்திற்கு உள்ளாகி, அடிமையாகி வருகிறார்கள்.

தன்னைத் தலைவனாக முன்னிறுத்திக் கொண்டு 'தற்படம்' ஆகிய நிலைப்படத்தை (ஸ்டில்) எடுத்து வெளியிட்ட காலம்போய், தன்னையே தலைமைப்பாத்திரமாகக் கொண்டு, தான் செய்யும் அரிய சாதனையை (?) உலகறியச் செய்யும் தொடர்படமாக, கைப்பேசி வழி எடுத்து, அதன்வழி கிடைக்கும் முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட தளங்களில் வெளியிடும் படக்காட்சியே 'ரீல்ஸ்'.

அது பரவலாகிப் பலரும் பார்க்கப்படுவதை, 'வைரலாகிறது' என்கிறார்கள். பார்ப்பதும் ரசிப்பதும், மீள் பதிவிடுவதும் ஆகி, 'வைரஸ்' நோய்போல் பரவி வரும் இப் பற்றுநோய், புற்றுநோய்போல் பலரைத் தன்வயப்படுத்தி வருகிறது.

ஆண், பெண் பேதமில்லாமல், வயது வேறுபாடின்றி, எதையும் எப்போதும் பதிவாக்குவதும், உடன் பதிவிடுவதும், அது எத்தனை பேரால் பார்க்கப்படுகிறது, விருப்பம் (லைக்ஸ்) தெரிவிக்கப்படுகிறது, என்னென்ன பதிலிகள் (கமென்ட்ஸ்) வருகின்றன என்று பார்ப்பதிலுமே பலரது உயிரினைய பொழுதுகள் விரயமாகின்றன.

அதைவிடவும், 'ரீல்ஸை', படமாக்கிய படியே நேரடியாக (லைவ் ஆக) பதிவிடுகிறவர்கள் சாகசம் என்கிற பெயரில் பைத்தியக்காரத்தனமான செயல்களில் வெறித்தனமாக ஈடுபட்டு, தனக்கும் பிறர்க்கும் கேடு விளைவிக்கிறார்கள்; உயிரிழக்கும் ஆபத்துக்கும் உள்ளாகிறார்கள்.

நெடுஞ்சாலைகளில் இரு சக்கர வாகனங்களில் திரைக்காட்சியில் இடம்பெறுவதுபோல் சாகசம் நிகழ்த்தி நேரடிப் படமாக்கி ஒளிபரப்ப விழைவதையும், அவ்வாறு படமாக்கிவரும்போதே விபத்தில் சிக்கி உயிரிழப்பதையும் காண முடிகிறது.

இதுபோன்ற ஒரு நிகழ்வைப் படமாக்க வேண்டி வழிப்போக்கர் ஒருவரிடம் தன் கைப்பேசியைத் தந்து இளைஞர்கள் சாகசம் நிகழ்த்தும்போது, ஆர்வமிகுதியால் படமாக்கும் அவர் சாலையின் நடுவே வந்து பின்புறம் வேகமாய் வந்த வாகனத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை நாம் மறக்க முடியாது.

WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குவிந்தனர்.

time to read

1 min

December 29, 2025

Dinamani Dharmapuri

பிச்சாவரம், கோடியக்கரையில் பறவைகள் கணக்கெடுப்பு

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் வனத் துறை சார்பில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (டிச.

time to read

1 min

December 29, 2025

Dinamani Dharmapuri

ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்

அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.

time to read

2 mins

December 29, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பாரம்பரிய அருங்காட்சியகம்...

சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு. பழனியப்பன் கூறியது:

time to read

2 mins

December 28, 2025

Dinamani Dharmapuri

விருப்பத்தை அடையவே வாழ்க்கை

“கண் பார்வை சவால் இருக்கத்தான் செய்கிறது.

time to read

2 mins

December 28, 2025

Dinamani Dharmapuri

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் 2- ஆம் நாளாக நீடிப்பு

ஊதிய முரண்பாடுகளை களையக் கோரி சென்னையில் சனிக்கிழமை 2-ஆவது நாளாக 1,250 இடைநிலை ஆசிரியர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

time to read

1 min

December 28, 2025

Dinamani Dharmapuri

வேண்டும் வலிமை...

\"நல்ல விஷயங்களை அறியும் விதமாய் சமூக ஊடகங்களில் பயணிக்கிறோம்.

time to read

1 min

December 28, 2025

Dinamani Dharmapuri

ஈழத்து மெல்லிசை மன்னர்

'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம். பி. பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம்.

time to read

1 min

December 28, 2025

Dinamani Dharmapuri

விலை உயரும் ரெனால்ட் கார்கள்

உற்பத்தி செலவு அதிகரிப்பை ஈடுகட்ட ரெனால்ட் இந்தியா நிறுவனம் தனது கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.

time to read

1 min

December 28, 2025

Dinamani Dharmapuri

குமர குருபர அடிகளார் 400

செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத்தோங்கும் வகையில் தம் திருவருட் பெருவாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள்.

time to read

1 min

December 28, 2025

Translate

Share

-
+

Change font size

Holiday offer front
Holiday offer back