Versuchen GOLD - Frei
அத்வைதம் - வெற்றிக்கு வழி!
Dinamani Dharmapuri
|March 04, 2025
முழுமனதோடு ஆணித்தரமாக நம்பும் ஒன்றை 'வேதவாக்கு' என்று சொல்வது வழக்கம். வேதவாக்கு என்றால் என்ன? வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள். ஆக, வேதங்கள் சொல்வதே நமக்குப் பிரதானம். ஏன் வேதங்கள் நம் வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன? வேதத்தில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது?
தத்துவம் என்பதை வேதாந்தம் என்று சொல்கிறோம். வேதம், அந்தம் என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து வேதாந்தம் ஆகிறது. வேதத்தின் இறுதிப் பகுதியாக வருவதனால் இப்பெயர் ஏற்பட்டது. வேதத்தின் முடிந்த முடிவாக இருப்பதனாலும் வேதாந்தம் என்று சொல்லலாம். உபநிஷதங்கள் என்றும் இதனைச் சொல்கிறோம்.
வேதாந்தத்துக்கு நம் அன்றாட வாழ்வில் அவசியம் இருக்கிறதா? தத்துவம் எல்லாம், வாழ்க்கையே வெறுத்துப் போனவர்கள் பேசுவதும் படிப்பதும் என்றுதானே கேள்விப்பட்டிருக்கிறோம்? ஆனால், வேதவாக்குக்கு எப்படி அன்றாட வாழ்வில் இத்தகைய மதிப்பு உண்டாயிற்று? எனில், உலகியல் வாழ்க்கையில் இதற்கு இடம் உண்டா?
வேதம் சொல்லும் தத்துவம் அத்வைதம். இந்தத் தத்துவமானது 'நான் யார்?' என்ற ஆன்மத் தேடலுக்கு விடை சொல்வது என்று கேட்டிருப்போம். ஆனால், இது ஆன்மத் தேடலோடு நம் அன்றாட வாழ்வை வெற்றிகரமாக வாழ்வதற்கும் கற்றுத் தருவது ஆகும். சமூக வாழ்க்கை சிறக்கவும், தனிமனித வாழ்க்கை மேம்படவும் இது உதவும்.
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ சமூகம் மலர அத்வைதம் வழிகாட்டுகிறது. அத்வைதம் என்றால் இரண்டாக இல்லாமல் இருப்பது என்று பொருள். அதாவது, இந்த மண்ணின் ஜீவன்கள் அனைத்தும் ஒன்றே, வேறுவேறானவை அல்ல. இதனை எளிமையாகப் புரிந்து கொள்ள பாரதி, காக்கை குருவி எங்கள் ஜாதி- நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம் என்று விளக்கினார். அதாவது, அத்வைதம் மனிதர்கள் அனைவரும் சமம் என்பதையும் தாண்டி இந்த உலகமே ஒரே பொருள் என்கிறது.
'யஸ்தே கந்தஹ புருஷேணு ஸ்த்ரீஷு பும்ஸுஹு பாகோ ருசிஹி யோ அஸ்வேஷு வீரேஷு யோ ம்ருகேஷுத ஹஸ்திஷு கன்யாயாம் வர்சோ யத் பூமே தேனாஸ் மாம் அபி ஸம் ஸ்ருஜ மா நோத்விக்ஷத கஸ்சன' இது அதர்வண பூமி சூக்த 25-ஆம் மந்திரம். இதன் பொருள், உன் மணம் ஆண்களிடத்தும் பெண்களிடத்தும் உள்ளது. உன் ஆண்மையும் கம்பீரமும் மக்களிடத்தில் உள்ளது. அது வீரனிடத்திலும் குதிரையிலும் காணப்படுகிறது. அதை வனவிலங்கிடமும், யானையிடத்திலும் காணலாம். உன்னுடைய பிரகாசம் இளம் பெண்களிடத்தில் மிளிர்கிறது, இத்தனையையும் எனக்குக் கொடு, என்னை எவரும் வெறுக்காமல் இருக்கட்டும்.
Diese Geschichte stammt aus der March 04, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேல் ட்ரோன்கள் கொள்முதல் அதிகரிப்பு
ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு இஸ்ரேலிடம் இருந்து செயற்கைக்கோள் இணைப்புடன் கூடிய ஹெரான் மார்க்-2 ட்ரோன்களை கூடுதலாக கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
December 03, 2025
Dinamani Dharmapuri
டித்வா புயல்: வானிலை கணிப்பு தவறியது
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்
1 min
December 03, 2025
Dinamani Dharmapuri
பிகார் பேரவைத் தலைவராக பாஜகவின் பிரேம் குமார்
பிகார் சட்டப்பேரவைத் தலைவராக பாஜக மூத்த தலைவர் பிரேம் குமார் (74) ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
1 min
December 03, 2025
Dinamani Dharmapuri
இரண்டாவது நாளாக தத்தளித்த சென்னை...!
குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்
1 mins
December 03, 2025
Dinamani Dharmapuri
காசி மாநகரில் தேமதுரத் தமிழோசை!
உலகின் ஆன்மிகத் தலைநகரமாக போற்றப்படும் புனிதத் தலம், காசி என்று பரவலாக அழைக்கப்படும் வாரணாசி. பாரதத்தின் நீண்ட நெடிய வரலாற்றில் அதன் பண்பாட்டு மையமாக தொன்றுதொட்டு திகழும் காசியில் நால்வர் தேவாரமும், கபீர்தாசின் பரவசமூட்டும் பக்திப் பாடல்களும் ஒருங்கே ஒலிக்கும். இஸ்லாமியராக இருந்தாலும் அதிகாலையில் காசி விஸ்வநாதரை தனது ஷெனாய் வாத்தியத்தில் பூபாளம் வாசித்துத் துயில் எழுப்பும் உஸ்தாத் பிஸ்மில்லா கான் வாழ்ந்த இடம்.
3 mins
December 03, 2025
Dinamani Dharmapuri
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Dharmapuri
இலங்கையில் சிக்கிய இந்தியப் பயணிகள் அனைவரும் மீட்பு
டித்வா புயலால் இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவித்த இந்தியப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர்.
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Dharmapuri
தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்
தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
December 02, 2025
Translate
Change font size

