Facebook Pixel சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்! | Dinamani Chennai – newspaper – Lesen Sie diese Geschichte auf Magzter.com

Versuchen GOLD - Frei

சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!

Dinamani Chennai

|

October 03, 2025

உலகின் மிகப் பெரிய கலாசார, பண்பாட்டு இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவாக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) உயர்ந்திருக்கிறது என்றால், அதன் பின்னணியில் டாக்டர் ஹெட்கேவாரின் தொலைநோக்குச் சிந்தனையும், 'குருஜி' கோல்வல்கரின் இயக்கத்தைக் கட்டமைக்கும் பேராளுமையும், பாலாசாகேப் தேவரஸின் சித்தாந்தச் செயலாக்கமும் இருப்பதை, நூற்றாண்டு விழாவின்போது நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

- குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்

சீரிய தலைமை-கட்டுப்பாடான இயக்கம்!

அந்த மூவரால் வடிவமைக்கப்பட்ட பாதையில், அடுத்த மூவரின் சீரிய தலைமையில் ஈடு இணையற்ற இயக்கமாக ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் வெற்றி நடைபோடுகிறது.

1925-ஆம் ஆண்டு விஜயதசமி நாளன்று 'டாக்டர்ஜி' என்று அழைக்கப்பட்ட கேசவ பலிராம் ஹெட்கேவார் ஐந்தாறு இளைஞர்களுடன் தொடங்கிய பாதுகாப்புக்கான குழு ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடி இன்று மகத்தான பேரியக்கமாக உருப்பெற்றிருக்கிறது. தேசபக்தி, கட்டுப்பாடு, ஒழுக்கம், ஈடுபாடு, சகோதரத்துவம் உள்ளிட்ட பண்புகளை உள்ளடக்கியதாக அந்த இயக்கத்தை உருவாக்கியதால்தான் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

எனது 16-வயதில் முதல்முறையாக ஆர்.எஸ்.எஸ். ஷாகாவில் (கூட்டத்தில்) கலந்து கொண்டபோது எனக்கு போதிக்கப்பட்ட கருத்து- தனிமனித ஒழுக்கம் பேணிப் பாதுகாக்கப்பட்டால்தான் ஓர் உயர்ந்த, நல்ல சமுதாயத்தைக் கட்டமைக்க முடியும் என்கிற உயர்ந்த சிந்தனை. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் இணையும் ஒவ்வொருவருக்குமான அடிப்படை இலக்கணமாக இந்தக் கட்டளை இருப்பதால் தான் ஆர்.எஸ்.எஸ். மிகப் பெரிய, மிகச் சிறந்த இயக்கமாக உருவாகியிருக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். என்பது ஏதோ ஹிந்து மதத்தையும், பாரதத்தின் பண்பாட்டுக் கூறுகளையும், அகண்ட பாரத தேசத்தையும் பாதுகாப்பதற்கான இயக்கம் மட்டுமே என்று நினைப்பவர்கள், அந்த இயக்கத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாதவர்கள். மிகச் சிறந்த ஒழுக்கமான நற்பண்புகளுடன்கூடிய தனி மனிதர்களை உருவாக்குவதுதான் (மேன் மேக்கிங்) ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலையாய கடமையாகக் கருதப்படுகிறது. அதற்காகத்தான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அத்தனை துணை அமைப்புகளும், பல்வேறு துறைகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ். இயக்கம் வளர்ந்ததற்கு என்ன காரணம் என்று கேட்பவர்கள், அந்த இயக்கம் தன்னலமில்லாமல் செய்யும் சேவைகள் குறித்த புரிதல் இல்லாதவர்கள். தேசத்தின் எந்தவொரு பகுதியில் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டாலும், கலவரத்தால் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களின் சேவைக்காக ஓடிச் செல்லும் முதல் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.ஸாகதான் இருக்கும்.

WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai

Dinamani Chennai

செப்.6-இல் குரூப் 1 தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை, ஜூன் 23: குரூப் 1 முதல்நிலைத் தேர்வு வரும் செப்.6-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணி யாளர் தேர்வாணையம் (டி.என் பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

பாகிஸ்தான் தலைவர்களுடன் ஈரான் அதிபர் சந்திப்பு

பிராந்திய அமைதி, அமெரிக்க ஒப்பந்தம் குறித்து ஆலோசனை

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர நலன்களை மதிப்பது அவசியம்

இந்தியாவும் சீனாவும் பரஸ்பர முக்கிய நலன்களை மதிப்பது அவசியம்; இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட முக்கிய கருத்தொற்றுமையை நடைமுறைப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

அமோனியா கசிவு சம்பவம்: முதல்வரிடம் முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்து தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட சிறப்புக் குழு, முதல்வர் ஜோசப் விஜய்யிடம், முதல்கட்ட அறிக்கையை செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

சென்னைப் பல்கலைக்கழக விளையாட்டு விருதுகள் வழங்கும் விழா

சென்னைப் பல்கலைக்கழக உடற்கல்வித் துறை சார்பில் விளையாட்டு விருதுகள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் ரூ.60 கோடி கையாடல்: மூத்த ஐஏஎஸ் அதிகாரி கைது

ஹரியாணா அரசின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.60 கோடிக்கு மேல் கையாடல் செய்ததாக, அந்த மாநில கல்வி-வேளாண் துறை முன்னாள் முதன்மைச் செயலரும், மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான பங்கஜ் அகர்வாலை சிபிஐ கைது செய்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

மாமன்றக் கூட்டத்தில் தனி இடம் ஒதுக்க வேண்டும்: காங்கிரஸ் குழுத் தலைவர் கோரிக்கை

சென்னை மாமன்றக் கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு என தனியிடம் ஒதுக்க வேண்டும் என அந்தக் கட்சி குழுத் தலைவர் எம்.எஸ். திரவியம் வலியுறுத்தியுள்ளார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

தமிழகத்தில் பசுமை எரிசக்தி திட்டங்கள் என்எல்சி இந்தியா-இந்தியன் ஆயில் ஒப்பந்தம்

தமிழகத்தில் பசுமை எரிசக்தித் திட்டங்களை மேம்படுத்துவதற்காக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் இணைந்து புதிய கூட்டு நிறுவனம் ஒன்றை அமைக்கவுள்ளதாக என்எல்சி இந்தியா செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Chennai

Dinamani Chennai

மத்திய சிறுபான்மையினர் துறை இணையமைச்சர் ராஜிநாமா

மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் நிறைவு

time to read

1 min

June 24, 2026

Translate

Share

-
+

Change font size