Versuchen GOLD - Frei
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தும் திட்டமில்லை
Dinamani Chennai
|August 12, 2025
'தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் (என்பிஎஸ்) பலனடைந்து வரும் மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தும் திட்டமில்லை' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
அரசின் கருவூலத்துக்கு அதிக நிதிச் சுமையை ஏற்படுத்தியதால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அரசு நிறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
2004, ஜன.1 அல்லது அதற்குப் பின் ஆயுதப் படைகளைத் தவிர பிற மத்திய அரசுப் பணிகளில் சேர்ந்தோருக்கு ஓய்வூதியம் வழங்கும் நோக்கில் என்பிஎஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுதவிர ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட (யுபிஎஸ்) அறிவிக்கையை கடந்த ஜனவரி மாதம் நிதியமைச்சகம் வெளியிட்டது. 25 ஆண்டுகாலம் அரசுப் பணியை நிறைவுசெய்தவர்கள் இத்திட்டத்தில் இணையத் தகுதிபெற்றவர்களாவர். பணிஓய்வுக்கு முந்தைய 12 மாதங்களில் அவர்கள் பெற்ற ஊதியத்தின் சராசரி கணக்கிடப்பட்டு அதில் 50 சதவீதம் வழங்கப்படுவதை இந்த திட்டம் உறுதிசெய்கிறது.
என்பிஎஸ் திட்டத்தின் கீழ் பலனடைந்து வரும் மத்திய அரசு ஊழியர்கள் யுபிஎஸ் திட்டத்தில் சேரலாம். இந்த இரு திட்டங்களில் ஏதேனும் ஒன்றை மத்திய அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Diese Geschichte stammt aus der August 12, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
பிகார் அமைச்சரவை விரிவாக்கம்: நிதீஷ் குமார் மகன் உள்பட 32 அமைச்சர்கள் பதவியேற்பு
பிகாரில் பாஜக தலைமையிலான அரசின் அமைச்சரவை வியாழக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது.
1 min
May 08, 2026
Dinamani Chennai
சுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: மேற்கு வங்கத்தில் பாஜகவினர் போராட்டம்
மேற்கு வங்கத்தில் பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
May 08, 2026
Dinamani Chennai
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா
புதுச்சேரியில் புதிய அரசு பதவியேற்க ஏதுவாக, தனது முதல்வர் பதவியை என்.ரங்கசாமி வியாழக்கிழமை ராஜினாமா செய்தார்.
1 min
May 08, 2026
Dinamani Chennai
குஜராத்: பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்
குஜராத்தின் கட்ச் மற்றும் தேவ்பூமி துவாரகா மாவட்டங்களில் கடந்த சில நாள்களில் பல கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min
May 08, 2026
Dinamani Chennai
விஜய் வீட்டுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாபஸ்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் வெற்றிபெற்றதையடுத்து, சென் னையில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் வீடு, அலுவலகத்துக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு தற்காலிகமாக வியாழக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.
1 min
May 08, 2026
Dinamani Chennai
சொராபுதீன் ஷேக் என்கவுன்ட்டர் வழக்கு: 22 பேர் விடுதலையை உறுதி செய்த மும்பை உயர்நீதிமன்றம்
அகமதாபாத் அருகே கடந்த 2005-ஆம் ஆண்டு பிரபல ரௌடி சொராபுதீன் ஷேக், அவரின் மனைவி கௌசர் பி, உதவியாளர் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் போலி என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரும் விடுதலை செய்யப்பட்டதை மும்பை உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதி செய்தது.
1 min
May 08, 2026
Dinamani Chennai
மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: ஓய்வு பெற்ற ராணுவ வீரர் போக்ஸோவில் கைது
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த ஓய்வு பெற்ற ராணுவ வீரரை போக்ஸோ சட்டப் பிரிவில் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
May 08, 2026
Dinamani Chennai
'ஏ' அணிகள் இடையேயான டெஸ்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா மோதல்
இந்திய ஆடவர் ‘ஏ' அணி வரும் செப்டம்பர் - அக்டோபரில் ஆஸ்திரேலிய 'ஏ அணியுடன் 2 நான்கு நாள் டெஸ்ட்டுகளிலும், 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடவுள்ளது.
1 min
May 08, 2026
Dinamani Chennai
2025-26 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி 86,311 கோடி டாலர்!
4.59 சதவீதம் வளர்ச்சி
1 min
May 08, 2026
Dinamani Chennai
அரசாணையால் ஆபத்து!
மலைப் பகுதிகளின் மெல்லிய சுற்றுச் சூழலைப் பாதுகாக்கவும், இந்தப் பகுதிகளில் முறையற்ற வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், கனிம வளங்களின் திருட்டைத் தடுக்கவும் 1990-இல், அப்போதைய தமிழக அரசால் 'மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம்' உருவாக்கப்பட்டது.
3 mins
May 08, 2026
Translate
Change font size
