Versuchen GOLD - Frei
குஜராத்: பாலம் இடிந்து 11 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai
|July 10, 2025
குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்ததில், அதன் வழியாகச் சென்று கொண்டிருந்த 6 வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன.
-
இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். இவர்களில் 2 பேர் குழந்தைகள். ஆற்றுப் பாலம் துண்டாக இடிந்து விழுந்த சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகர் ஆற்றின் குறுக்கே 23 உயரமான தூண்களுடன் 900 மீட்டர் நீள பாலம் அமைந்துள்ளது. 1985-ஆம் ஆண்டில் மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இப்பாலம், மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிரா பகுதிக்கு இணைப்பை வழங்குவதாகும்.
இந்தப் பாலத்தின் இரண்டு தூண்களுக்கு இடைப்பட்ட 15 மீட்டர் நீளமுள்ள பகுதி புதன்கிழமை காலை 7.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பாலத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு மோட்டார் சைக்கிள் ஆகிய வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், காவல் துறையினர், தீயணைப்புப் படையினர், மாநகராட்சிப் பணியாளர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களில் 2 வயது சிறுவன், அவரின் சகோதரியான 4 வயது சிறுமி ஆகியோரும் அடங்குவர். மேலும் 2 பேர் மாயமாகியிருக்கலாம் எனத் தெரிகிறது. அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாக காவல் கண்காணிப்பாளர் (வதோதரா ஊரகம்) ரோஹன் ஆனந்த் தெரிவித்தார்.
Diese Geschichte stammt aus der July 10, 2025-Ausgabe von Dinamani Chennai.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Chennai
Dinamani Chennai
ஃபாரீஸ்டுடன் டிரா செய்த பிரக்ஞானந்தா
சூப்பர் செஸ் கிளாசிக் போட்டியின் 4-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா - நெதர்லாந்தின் ஜோர்டென் வான் ஃபாரீஸ்டுடன் 'டிரா' செய்தார்.
1 min
May 19, 2026
Dinamani Chennai
பயன்பாட்டுக்கு வந்தது | எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அதிநவீன வாகன நிறுத்தும் மையம்
சென்னை எழும்பூர் ரயில் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அதி நவீன பல்நோக்கு வாகன நிறுத்தும் மையம் திங்கள்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
ஏஜிஆர் நிலுவைத் தொகையில் சலுகை: வோடஃபோன் ஐடியா ரூ.51,970 கோடி லாபப் பதிவு
தொலைத்தொடர்பு நிறுவனமான வோடஃபோன் ஐடியா, ஏஜிஆர் நிலுவைத் தொகையில் கிடைத்த சலுகை காரணமாக, கடந்த 2025-26 நிதியாண்டின் ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.51,970 கோடியை நிகர லாபமாக பதிவு செய்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
பண முறைகேடு வழக்கு: பஞ்சாப் அமைச்சருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
ரூ.100 கோடி சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறைகேடு வழக்கில் பஞ்சாப் தொழில்துறை அமைச்சரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான சஞ்சீவ் அரோராவை (62) 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
எடையைக் குறைக்க உகந்தது கோடை
இயற்கை மருத்துவர்கள்
1 min
May 19, 2026
Dinamani Chennai
பணியிடங்களில் ‘சவால்கள்’
ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.
2 mins
May 19, 2026
Dinamani Chennai
பொதுக் குழுவை கூட்ட போதிய பலம் உள்ளது
எஸ்.பி.வேலுமணி தரப்பு
1 min
May 19, 2026
Dinamani Chennai
6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை (மே 19) பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் இம்மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
May 19, 2026
Dinamani Chennai
தோல்வியைக் கண்டு துவண்டு விடவில்லை
தேர்தல் தோல்வியைக் கண்டு நாம் தமிழர் கட்சி துவண்டு விடாது என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
1 min
May 19, 2026
Dinamani Chennai
முள்ளிவாய்க்கால் நினைவை இதயத்தில் ஏந்துவோம்: முதல்வர்
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 19, 2026
Translate
Change font size

